11 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - மொழி - கவிதைப்பேழை - யுகத்தின் பாடல் - எழுத்து & காட்சிப்பதிவில் பாடமே படமாக !

 

வகுப்பு : 11 

பாடம் - தமிழ் 

இயல் - 1, மொழி 

கவிதைப்பேழை - யுகத்தின் பாடல்.

                                     சு.வில்வரத்தினம்.




****************     *************    *********


                   வணக்கம் அன்பு நண்பர்களே ! நாம் நம்முடைய Greentamil.in இணையத்தில் தொடர்ந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பாடங்களைப் பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் நிறைய ஆசிரிய நண்பர்களும் , மாணவத் தம்பிகளும் 11 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தையும் பதிவிட்டால் பேருதவியாக இருக்கும் என வேண்டினார்கள். அவர்களின் அன்பழைப்பினை நம்முடையபெரும்புலவர். திரு.மு.சன்னாசி ஐயா அவர்களும் மனமுவந்து ஏற்றார்கள். அதனால் இன்று முதல் நம் இணையத்தில்  11 ஆம் வகுப்பு தமிழ் பாடம் உலாவர உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவிக்கின்றேன்.

            நமக்கு மொழி என்ற தலைப்பில் முதல் இயலில் கவிதைப்பேழையாக ' யுகத்தின் பாடல் ' என்ற கவிதை கொடுக்கப்பட்டுள்ளது. இக்கவிதையை இயற்றியவர் இலங்கை , யாழ்ப்பாணத்துக் கவிஞர்.சு.வி என்று அழைக்கப்படும் சு.வில்வரத்தினம் என்பவராவார்.



நூலாசிரியரைப் பற்றிய செய்திகளை நூல்வெளி என்ற பகுதியின் மூலம் காண்போம்.

நூல்வெளி 

                           கவிஞர் சு. வில்வரத்தினம், யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுத் தீவில் பிறந்தவர். இவருடைய கவிதைகள் மொத்தமாக, 'உயிர்த்தெழும் காலத்துக்காக' எனும் தலைப்பில் 2001இல் தொகுக்கப்பட்டன. இவர் கவிதைகள் இயற்றுவதுடன் சிறப்பாகப் பாடும் திறனும் கொண்டவர். வில்வரத்தினத்தின் இரண்டு கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகள் பாடப்பகுதியில் இடம்பெறுகின்றன.

நுழையும் முன் என்ற பகுதியில் உள்ள செய்திகளையும் காண்போம்.

                        மொழி, மனித இனத்தின் ஆதி அடையாளம். அது, பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு உருவானது. ஓர் இனத்தின் மையப்புள்ளியாக விளங்குவதும் மொழியே. அது, நம் இருப்பின் அடையாளம். நம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் வேர், சங்கத்தில் தொடங்கி இன்றையகாலம் வரையும் இடர் பல களைந்து, உயர்தனிச் செம்மொழியாய்ச் செழித்தோங்கி இருக்கிறது.

கவிதையைப் பார்க்கும் முன்பாக இக்கவிதை குறித்து அற்புதமான விளக்கம் தந்த நம்முடைய பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவினைக் காண்போமா ?





****************   **************    **********

                        நண்பர்களே ! அருமையான விளக்கத்தைக் கண்டிருப்பீர்கள். இனி நாம் கவிதைக்குள் செல்வோம்.



1.

என் அம்மை, ஒற்றியெடுத்த
நெற்றிமண் அழகே!
வழிவழி நினதடி தொழுதவர்,
உழுதவர், விதைத்தவர்,
வியர்த்தவர்க்கெல்லாம்
நிறைமணி தந்தவளே!
உனக்குப்
பல்லாண்டு
பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பாடத்தான் வேண்டும்!

2

காற்றிலேறிக்
கனைகடலை, நெருப்பாற்றை,
மலைமுகடுகளைக் கடந்து
செல் எனச் செல்லுமோர் பாடலை
கபாடபுரங்களைக் காவுகொண்ட பின்னும்
காலத்தால் சாகாத தொல் கனிமங்களின்
உரமெலாம் சேரப்
பாடத்தான் வேண்டும்!


*ஏடு தொடக்கி வைத்து என்னம்மை
மண்ணிலே தீட்டித்தீட்டி எழுதுவித்த
விரல்முனையைத் தீயிலே தோய்த்து
திசைகளின் சுவரெலாம்
எழுதத்தான் வேண்டும்
எழுகின்ற யுகத்தினோர் பாடலை.*

                                         சு. வில்வரத்தினம்

( *  இக்குறியீடு ( ஊதா நிற எழுத்தில் உள்ள வரிகள் )  மனப்பாடப்பகுதி )

புதுக்கவிதை - விளக்கம்

                         மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட கவிதைகளைப் புதுக்கவிதைகள் என்பர். படிப்போரின் ஆழ்மனத்தில் புதுக்கவிதை ஏற்படுத்தும் தாக்கமே முதன்மையானது. இது படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப விரிவடையும் பன்முகத்தன்மை கொண்டது. எளியவர்களும் தம் உணர்ச்சிகளைக் கவிதை வாயிலாக வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தந்தது புதுக்கவிதை எனலாம்.


************   **************   ***********

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    *********

Post a Comment

1 Comments