வகுப்பு - 11 , தமிழ்
இயல் 1 - நம்மை அளப்போம்
பலவுள் தெரிக & குறுவினா
பாடப்பகுதி வினாக்களும் , விடைகளும்
*************** ************ ************
நம்மை அளப்போம்
பலவுள் தெரிக.
1. பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க.
அ) அ. முத்துலிங்கம் - யுகத்தின் பாடல்
ஆ) பவணந்தி முனிவர் - நன்னூல்
சு. வில்வரத்தினம் ஆறாம் திணை
ஈ) - இந்திரன்
பேச்சுமொழியும் கவிதை மொழியும்
i) அ, ஆ
ii) அ, ஈ iii) ஆ, ஈ iv) அ, இ
(விடை: iii) ஆ. ஈ]
2. “கபாடபுரங்களைக் காவுகொண்ட பின்னும்
காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்” -
அடி மோனையைத் தெரிவு செய்க.
அ) கபாடபுரங்களை - காவுகொண்ட
ஆ) காலத்தால் - கனிமங்கள்
இ ) கபாட புரங்களை காலத்தால்
ஈ) காலத்தால் - சாகாத
(விடை: இ ) கபாட புரங்களை - காலத்தால்]
3. பாயிரம் இல்லது ----------- அன்றே.
அ ) காவியம்
ஆ) பனுவல்
இ ) பாடல்
ஈ) கவிதை
(விடை: ஆ) பனுவல்)
4 ) ஒரு திரவ நிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி
எழுத்துமொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது மறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திட நிலைமை
அடைகிறது. இவ்வரிகள் உணர்த்தும் கருத்து
அ) மொழி என்பது திட, திரவ நிலையில் இருக்கும்.
ஆ) பேச்சுமொழி, எழுத்துமொழியை திட, திரவப் பொருளாக உருவகப்படுத்தவில்லை.
இ) எழுத்துமொழியைவிட பேச்சுமொழி எளிமையானது.
ஈ ) பேச்சுமொழியைக் காட்டிலும் எழுத்துமொழி எளிமையானது.
(விடை: இ) எழுத்துமொழியைவிட பேச்சுமொழி எளிமையானது)
5 ) மொழி முதல் எழுத்துகளின் அடிப்படையில் முல்தானதைக் கண்டுபிடிக்க.
அ) அன்னம், கிண்ணம்
ஆ) டமாரம், இங்ஙனம்
இ) ரூபாய், லட்சாதிபதி
ஈ ) றெக்கை, அங்ஙனம்
விடை : அ ( அன்னம், கிண்ணம்)
குறுவினா
1 ) பேச்சுமொழி, எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?
(i) எழுத்துமொழியைக் காட்டிலும் பேச்சுமொழி உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கிறது. எனவேதான்
இலக்கிய வழக்கைக் நெறியை) கைவிட்டுப் பேச்சுமொழிக்குத் திரும்பியவுடனே கவிஞனுடைய கவிதையின் மொழி, அதிக வெளிப்பாட்டுச் சக்தி கொண்டதாக மாறிவிடுகிறது.
(ii) எழுதுவதை மட்டும்தான் மனிதனின் கை செய்கிறது. முகத்திலிருக்கும் வாய், உடம்பிலிருக்கும் கையைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது.
(iii) அதனால்தான் பேச்சுமொழி, எழுத்துமொழியைக் காட்டிலும் அதிக உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி
மிக்கதாக உள்ளது.
2 ) என் அம்மை, ஒற்றியெடுத்த
நெற்றிமண் அழகே!
வழிவழி நினதடி தொழுதவர்,
உழுதவர், விதைத்தவர்,
வியர்த்தவர்க்கெல்லாம்
நிறைமணி தந்தவளே!
- இக்கவிதை அடிகளில் உள்ள வினையாலணையும் பெயர்களை எழுதுக.
வினையாலணையும் பெயர்கள்:
i ) தொழுதவர்
(ii) உழுதவர்
(iii) விதைத்தவர்
(iv) வியர்த்தவர்.
3 ) 'பாயிரம்' பற்றி நீ அறியும் கருத்து யாது ?
பாயிரம் என்பதன் விளக்கம்:
(i) நூலைப் புரிந்து கொள்ளவும், அதன் சிறப்பை உணர்ந்து விருப்பத்துடன் கற்கவும் பாயிரம்
உதவுகிறது.
ii ) நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும் அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும். பாயிரம் பொதுப்பாயிரம், சிறப்புப் பாயிரம் என இரு வகைப்படும்.
iii ) ஆயிரம் முகத்தைப் பெற்றது போன்று பல்வேறு துறைச் செய்திகளை விரிவாகக் கூறினாலும் பாயிரம் இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப்படாது.
4 ) உயிரெழுத்து, பன்னிரண்டு , திருக்குறள், நாலடியார் இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழுத்துகள் அமைந்துள்ளன. ?
i ) உயிரெழுத்து = உயிர் + எழுத்து
- நிலைமொழியின் ஈற்றெழுத்து - ர் - மெய்யீறு
ii ) பன்ணிரண்டு = பத்து + இரண்டு - நிலைமொழியின் ஈற்றெழுத்து - (து-த்+உ) உ- உயிரீறு
iii ) திருக்குறள் = திரு + குறள் - நிலைமொழியின் ஈற்றெழுத்து - (ரு-ர்+உ) உ- உயிரீறு
iv ) நாலடியார் - நான்கு + அடியார் - நிலைமொழியின் ஈற்றெழுத்து - (கு-க்+உ) உ- உயிரீறு.
5 ) இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை எனக் குறிப்பிடுகிறார் இரசூல் கம்ச தோவ்.
************ *********** ***************
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
************** ************* ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
2 Comments
Bala
ReplyDeleteBala
ReplyDelete