ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கற்கண்டு - தொடர் இலக்கணம் - செய்வினை - செயப்பாட்டு வினை / 9 TAMIL - EYAL 1 - KARKANDU - THODAR ILAKKANAM - SEIVINAI - SEYAPPAATTUVINAI

   

வகுப்பு - 9 , தமிழ்

இயல் 1 - கற்கண்டு - தொடர் இலக்கணம் 

பகுதி 3 - செய்வினை - செயப்பாட்டுவினை 



************     **************    ************


    வணக்கம் நண்பர்களே ! நாம் கடந்த வகுப்பில் தன்வினை பிறவினை பற்றிப் படித்தோம். இன்றைய வகுப்பில் செய்வினை , செயப்பாட்டுவினை பற்றிக் காண்போம்.

            முதலில் செய்வினை , செயப்பாட்டு வினை பற்றிய விளக்கத்தை நம் பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப்பதிவில் காண்போம்.




 கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.

கரிகாலன் - எழுவாய் 

கட்டினான் - பயனிலை

கல்லணையை - செயப்படுபொருள்

       செய்பவரை முதன்மைப் படுத்தும் வினை செய்வினை. மேலே உள்ள தொடரில் செய்பவர் கரிகாலன். எனவே இது செய்வினைத் தொடர்.


கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது.

கல்லணை - செயப்படுபொருள்

கரிகாலன் - எழுவாய்

கட்டப்பட்டது - பயனிலை 

    மேலே உள்ள தொடரில் செயப்படுபொருள் முதன்மைப்படுத்தப் பட்டுள்ளது. 

செயப்படுபொருளை முதன்மைப் படுத்தும் வினை செயப்பாட்டுவினை.

இராமன் பாட்டுப் பாடினான் - செய்வினை 

பாட்டு இராமனால் பாடப்பட்டது - செயப்பாட்டு வினை 


தெரிந்து தெளிவோம்

       செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை செய்வினை; செயப்படு பொருளை முதன்மைப்படுத்தும் வினை செயப்பாட்டு வினை என்பதை நினைவில் கொள்க.

           ' படு' என்னும் துணை வினைச்சொல் செயப்பாட்டு வினைத் தொடரில் சேர்ந்துவிடுகிறது.

           ' படு' என்பதைப் போல, 'உண், பெறு முதலான துணைவினைகள் செயப்பாட்டு வினைகளாக அமைகின்றன. அவற்றைப் போலவே, எச்சங்களுடன் சேர்ந்து ஆயிற்று, போயிற்று, போனது' முதலான துணை வினைகள் செயப்பாட்டு வினைகளை உருவாக்குகின்றன.

கோவலன் கொலையுண்டான்.

ஓவியம் குமரனால் வரையப்பட்டது.

வீடு கட்டியாயிற்று.

சட்டி உடைந்து போயிற்று.

பணம் காணாமல் போனது.

************   *************   **************


வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    *******

Post a Comment

0 Comments