ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கற்கண்டு - தொடர் இலக்கணம் - தன்வினை - பிறவினை / 9 TAMIL - EYAL 1 - KARKANDU - THODAR ILAKKANAM - THANVINAI - PIRAVINAI

 


வகுப்பு - 9 , தமிழ் 

இயல் 1 - தொடர் இலக்கணம்

பகுதி 2 - வினை வகைகள் 

தன்வினை - பிறவினை 



*************    **************   ************

        வணக்கம் நண்பர்களே ! நாம் நேற்றைய வகுப்பில் எழுவாய் , பயனிலை , செயப்படுபொருள் பற்றி விரிவாகக் கண்டோம்.  இன்றைய வகுப்பில் தன்வினை & பிறவினை பற்றி விரிவாகக் காண்போம்.


வினை வகைகள் - தன்வினை, பிறவினை


பாடப்பகுதிக்குள் செல்லும்முன் தன்வினை , பிறவினை பற்றிய நம் பெரும்புலவர் ஐயா அவர்களின் காட்சிப் பதிவைக் காண்போமா ?




                          மாணவர்கள் கால்பந்து விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள். எங்கும் விளையாட்டு  , மகிழ்ச்சியின் ஆரவாரம் . கண்ணன் முகமதுவை நோக்கி , " பந்தை என்னிடம் உருட்டு " என்று கத்தினான். முகமது பந்தைக் கண்ணனிடம் உருட்டினான். பந்து உருண்டது. கண்ணன் முகமது மூலம் பந்தை உருட்டவைத்தான்.

மேற்கண்ட சூழலில்,

பந்து உருண்டது என்பது தன்வினை.

உருட்ட வைத்தான் என்பது பிறவினை 

எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது தன்வினை எனப்படும்.

எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது பிறவினை எனப்படும்.

பிறவினைகள், வி, பி போன்ற விகுதிகளைக் கொண்டும் செய், வை, பண்ணு போன்ற துணை வினைவகளை இணைத்தும் உருவாக்கப்படுகின்றன.

தன்வினை - அவன் திருந்தினான்

                          அவர்கள் நன்றாகப் படித்தனர்

பிறவினை  -  அவனைத் திருந்தச் செய்தான்

தந்தை மகனை நன்றாகப் படிக்க வைத்தார்.

பள்ளிக்குப் புத்தகங்கள் வருவித்தார்.


***************     ****************  ***********

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    *********

Post a Comment

0 Comments