வகுப்பு - 9 , தமிழ் - இயல் - 1
உரைநடை உலகம்
திராவிட மொழிக்குடும்பம் - பகுதி - 2
************* ************** *************
வணக்கம் நண்பர்களே ! நாம் நேற்றைய வகுப்பில் பகுதி 1ல் மொழிகளின் காட்சிச்சாலை , மொழி ஆய்வு பற்றிக் கண்டோம். இன்று பகுதி 2 ல் திராவிட மொழிக்குடும்பம் அதாவது தென்திராவிடம் , நடுத்திராவிடம் , வடதிராவிடம் , திராவிட மொழிகளின் பொதுப்பண்புகள் , பால்பாகுபாடு , வினைச்சொற்கள் இவற்றைப் பற்றிக் காண்போம்.
முதலில் இவை பற்றிய நம்முடைய பெரும்புலவர் ஐயா அவர்களின் விளக்கத்தைக் காண்போமா ?
இனி பாடப்பகுதிச் செய்திகளைக் காண்போம்.
திராவிட மொழிக்குடும்பம் திராவிட மொழிக்குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட . மொழிகள் என மூன்றாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. திராவிட மொழிக் குடும்பத்திலுள்ள தமிழ், கன்னடம், மலையாளம் முதலானவை தென்திராவிட மொழிகள் எனவும் தெலுங்கு முதலான சில மொழிகள் நடுத்திராவிட மொழிகள் எனவும் பிராகுயி முதலானவை வடதிராவிட மொழிகள் எனவும் பகுக்கப்பட்டுள்ளன.
தென்திராவிடம்
தமிழ்
மலையாளம்
கன்னடம்
குடகு (கொடகு)
துளு
கோத்தா
தோடா
கொரகா
இருளா
நடுத்திராவிடம்
தெலுங்கு
கூயி
கூவி (குவி)
கோண்டா
கோலாமி (கொலாமி)
நாய்க்கி
பெங்கோ
மண்டா
பர்ஜி
கதபா
கோண்டி
கோயா
மேலுள்ள பட்டியலில்.உள்ள 24 மொழிகள் தவிர அண்மையில் கண்டறியப்பட்ட எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா ஆகிய நான்கு மொழிகளையும் சேர்த்துத் திராவிட மொழிகள் மொத்தம் 28 எனக் கூறுவர்.
திராவிடமொழிகளின் பொதுப்பண்புகள்
சொற்களின் இன்றியமையாப் பகுதி வேர்ச்சொல், அடிச்சொல் எனப்படும். திராவிட மொழிகளின் சொற்களை ஆராய்ந்தால், பொதுவான அடிச்சொற்களைக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.
தெரியுமா?
தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.
- கால்டுவெல்
சான்று
அடிச்சொல் திராவிட மொழிகள்
கண் - தமிழ்
கண்ணு - மலையாளம், கன்னடம்
கன்னு - தெலுங்கு, குடகு
ஃகன் - குரூக்
கெண் - பர்ஜி
கொண் - தோடா
திராவிட மொழிகளில் எண்ணுப் பெயர்கள் ஒன்று போலவே அமைந்துள்ளன.
மூன்று - தமிழ்
மூணு - மலையாளம்
மூடு - தெலுங்கு
மூரு - கன்னடம்
மூஜி - துளு
குறில், நெடில் வேறுபாடு
திராவிட மொழிகளில் உயிர் எழுத்துகளில் உள்ள குறில், நெடில் வேறுபாடுகள் பொருளை வேறுபடுத்தத் துணை செய்கின்றன.
அடி – குறில்
ஆடி - நெடில்
வளி - குறில்
வாளி - நெடில்
வினைச்சொற்கள்
ஆங்கிலம் போன்ற மொழிகளில் வினைச்சொல் காலத்தை மட்டும் காட்டுமே தவிர திணை, பால், எண், இடம் ஆகிய வேறுபாட்டைக் காட்டுவதில்லை. திராவிட மொழிகளின் வினைச்சொற்கள் இவற்றைத் தெளிவாகக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டு:
வந்தான் உயர்திணை ஆண்பால் , படர்க்கை ஒருமை
இவ்வியல்புக்கு மாறாக மலையாள மொழி மட்டுமே அமைந்துள்ளது. அம்மொழியில் திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும் பால் காட்டும் விகுதிகள் இல்லை. தனிச் சொற்களாலேயே ஆண், பெண் பகுப்பை அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு திராவிட மொழிகள் சில பொதுப்பண்புகளைப் பெற்றிருந்தாலும் அவற்றுள் தமிழுக்கென்று சில சிறப்புக் கூறுகளும் தனித்தன்மைகளும் உள்ளன.
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ************
0 Comments