ஓவியம் வரையலாம் வாங்க ! நம் குழந்தைகளின் ஓவியத்திறனை வளர்ப்பது எப்படி ? எளிமையான படங்கள் மூலம் ஓவியப் பயிற்சி.

 

வணக்கம் அன்பு நண்பர்களே ! 

' சித்திரமும் கைப்பழக்கம் என்றார் ' அமுதத் தமிழ் தந்த ஔவை.

ஆயிரம் வார்த்தைகள் சொல்வதை அழகாய்ச் சொல்லிவிடுகிறது ஓர் ஒற்றை ஓவியம்.

 காவியம் பாடும் ஓவியங்கள் சில ...

கதைகள் சொல்லும் ஓவியங்கள் சில ...

கண்ணீர் துடைக்கும் ஓவியங்கள் சில ...

கண்ணைக் கவரும் ஓவியங்கள் சில ...




நம் வீட்டில் உள்ள குழந்தைப் பிரம்மாக்கள் , தம் கைக்கெட்டும் உயரம் வரை பென்சிலால் , பேனாவால் ஏதாவது கிறுக்கியிருப்பார்கள். 

உற்றுப்பார்த்தால் ஓராயிரம் ஓவியங்கள் சுவரில் மலர்ந்திருக்கும். 

ஏன்டா ! இப்படி வீட்டைக் கிறுக்குற என நாம் சொல்வதில்லை. குழந்தையின் கற்பனைத்திறனை இரசிப்போம். விரலுக்கான அற்புதமான பயிற்சியும் கூட. 

கண் இமைக்கும் நேரத்தில் இரு கோடுகளை வரைந்து ஓவீயமாக்கும் வித்தை இன்றைய குழந்தைகளிடம் நிறையவே இருக்கிறது.


நம் குழந்தையின் உள்ளத்தில் இருக்கும் உணர்வை ஊக்கப்படுத்தி , ஓவியராக்கும் சிறு முயற்சியே GREEN TAMIL.IN இணையத்தின் நோக்கம்.

உங்கள் வீட்டுக் குழந்தை ஓவியம் வரைய ஆர்வமாக இருக்கிறானா ? அவனுக்காகவே இந்தப் பகுதி. ஊக்கப்படுத்துவோம். 

நம் ஒவ்வொரு வீட்டிலும் குட்டி ரவிவர்மாக்கள் , பிக்காசோக்கள் , ஸ்யாம் , மாருதி , ஜெ , மணியம் செல்வம் , இளையராஜா என இருப்பார்கள். அவர்களை வெளிச்சப்படுத்தும் நோக்கத்திற்காகவே ' ஓவியம் வரையலாம் வாங்க ' என்ற இந்த புதுப்பகுதி. 

அழகிய ஓவியத்தை மிக எளிமையாய் , இனிமையாய் வரைந்து தருகிறார் ஓவிய ஆசிரியை திருமதி.செ.லஷ்மி ப்ரதிபா அவர்கள். பாருங்கள்.  பழகுங்கள், வரையுங்கள். வரைந்ததில் சிறந்த ஓவியங்கள் என நீங்கள் நினைப்பதை அனுப்புங்கள். 

மழலைகளின் பெயரோடு அவர்களது எண்ணத்தில் விளைந்த  கைவண்ணத்தை  GREENTAMIL.IN இணையத்தில் பதிவேற்றி இதயத்தில் வலம்வரச் செய்வோம்.


வண்ணங்களைப் பார்ப்பதில் விருப்பம். அழகான வண்ணத்துப் பூச்சியைக் கண்டால் அதன் பின்னே நம் மனமும் சென்றுவிடும். தன்னைப் பிடிக்க அழைக்கும். கமுக்கமாகச் சென்று அதை கைகளுக்குள் அமுக்குவதற்கு மனம் விரும்பும். 


இதோ  ... ஒரு வண்ணத்துப்பூச்சி உங்களை அழைக்கிறது என்னை ஓவியமாகத் தீட்டு என்று ! உன் திறமையைக் காட்டு என்று !




படம் - 1






படம் - 2




படம் - 3




படம் - 4




படம் - 5




படம்  - 6




படம் - 7




படம்  - 8



படம் - 9




படம்  - 10




படம் - 11




படம் - 12




என்ன செல்லக் குழந்தைகளே ! உங்களது வண்ணத்துப் பூச்சி தாளில் இருந்து பறக்கத் தொடங்கிவிட்டதா ?


அழகான வண்ணத்துப் பூச்சியாம் !

கண் கொள்ளாக் காட்சியாம் !

சிறகை விரித்துப் பறந்திடும் !

பார்க்கக் கவலை மறந்திடும் !


பார்த்து நீயும் வரையலாம் !

படத்தில் மனமும் நிறையலாம் !

மழலை விரல்கள் தீண்டலாம் !

மனதில் மகிழ்ச்சி தூண்டலாம் !


பாருங்கள் ! நண்பர்களுக்கும் பகிருங்கள்.

வாழ்த்துகள். மற்றுமோர் ஓவியத்தில் சந்திப்போம் !

           நன்றி.

ஓவியம் - திருமதி.செ.லஷ்மி ப்ரதிபா அவர்கள் , 

மதுரை.

எழுத்தும் எண்ணமும் ,

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

97861 4140


**************     ********-*****  ************



Post a Comment

0 Comments