ஓவியம் வரையலாம் வாங்க !
பகுதி - 8
அழகிய சேவல் வரைவது எப்படி ?
வழங்குபவர் : திருமதி.இலஷ்மி பிரதிபா
ஓவிய ஆசிரியை , மதுரை.
*********************** *******************
*********************** *******************
வணக்கம் செல்லக் குழந்தைகளே ! நல்லா இருக்கிங்களா ? தினமும் ஒரு ஓவியம் வரையக் கற்று வருகிறோம். இன்று நாம் வரையப்போற ஓவியம் சேவல்.
அதிகாலையில் எழுந்து கூவும் சேவலால் இன்றைய பொழுது நமக்கு விடிகிறது. ஒரு கவிதை ஒன்று படித்த ஞாபகம். சேவல் சொன்னதாம்.
காலையில் எழுந்தேன்
கொக்கரக்கோ என்றேன்.
மாலையில் விருந்தினர் ...
குக்கருக்குள் விழுந்தேன் !
நம்ம ஊருல ... திருவிழாக்கள்ல சேவல் சண்டைனு ஒன்னு நடக்கும் . பாத்திருப்பிங்க.
வீராவேசமாகச் சண்டை போடும். சேவல்தான் கூவுனாலும் நாம வழக்கத்தில கோழி கூவுதுனுதான் சொல்றோம். ஒரு பழமொழி கூட சொல்வாங்களே !
' குப்பை ஏறிக் கூவாத கோழி கோபுரம் ஏறி வைகுந்தம் காட்டுமா ? '
கிராமங்கள்ல வீட்டுக்கு வீடு கோழி , சேவல் இருக்கும். நகர்ப்புறங்கள்ல பார்ப்பது அரிது.
இப்ப நீங்களும் அந்த அழகிய சேவலை இதோ காணலாம் ஓவியமாக !
************************** *****************
படம் : 1
படம் : 2
படம் : 3
படம் : 4
சேவல் ரெடி :
என்ன குழந்தைகளே ! உங்க சேவல் எப்படி இருக்கு ? அனுப்புங்க பாக்கலாம் !
நாளை மற்றுமோர் ஓவியத்தில் சந்திப்போம் !
வண்ணம் : திருமதி.இலஷ்மி பிரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் . மதுரை - 97861 41410.
********************** *****************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
0 Comments