வணக்கம் அன்புக் குழந்தைகளே ! நாம் தினமும் ஒரு ஓவியத்தை வரைந்து . மகிழ்ந்து வருகிறோம். இதுவரை ஐந்து அற்புதமான ஓவியங்களை வரைவதற்கு நமது ஓவிய ஆசிரியை திருமதி.இலஷ்மி பிரதீபா பயிற்சி கொடுத்துள்ளார். இன்று ஆறாவது ஓவியமாக சூரிய காந்திப் பூ எப்படி அழகா , எளிமையா வரையலாம்னு பாக்கலாமா ?
பூக்களைப் பார்த்தாலே நமக்கு மகிழ்ச்சிதானே ! பூ மலரும் போதெல்லாம் நம் அகமும் , முகமும் மலர்கிறது. பூவின் வாசனை நம்மை மயக்குகிறது. நீங்க ஊட்டி , ஏற்காடு , கொடைக்கானல்னு மலைப்பிரதேசத்துக்குப் போயிருப்பிங்க . அங்க மலர்க் கண்காட்சினு நடத்துவாங்க. எவ்ளோ பூக்கள். அடேயப்பா ! பாக்க பாக்க ஆனந்தம். உங்களைப் போல குட்டிக் குழந்தைகளுக்காக ' பூந்தோட்டம் ' என்ற தலைப்பில் ' வண்ண வண்ணப் பூக்களால் ' அப்படினு நான் எழுதிய சிறுவர் பாடல் இந்து தமிழ் நாளிதழில் முன்பு வந்தது. அந்தப் பாடலைப் பாருங்க. படிங்க. அப்றம் ஓவியத்தை சந்தோசமா வரைவோம் !
நன்றி - இந்து தமிழ் நாளிதழ்.
காந்தித் தாத்தா வந்த பின்புதான் நம் நாட்டிற்கு வெளிச்சம் மலர்ந்தது. காலையில் சூரியனின் வெளிச்சம் வந்த பின்பு அதன் திசை நோக்கி மலரும் சூரியகாந்திப் பூ. சூரியகாந்திப் பூவைப் பாக்கும் போது உங்களைப் போன்ற அழகான வட்டமுகம் கொண்ட ஒரு குழந்தை சிரிப்பதைப் பார்ப்பதைப் போல இருக்குதல்லவா ?
இப்போ நாம ஓவியம் வரையலாமா ?
படம் : 1
படம் : 2
படம் : 3
படம் : 4
படம் : 5
எவ்ளோ அழா இருக்குல்ல ! நம்ம சிரிச்ச முகத்தப் போல !
வண்ணம் : திருமதி.இலஷ்மி பிரதிபா , ஓவிய ஆசிரியை .மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
********************* ********************
0 Comments