ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - பயிற்சித்தாள் 5 - மதிப்பீடு எழுத்து & காட்சிப்பதிவாக !/ 9 TAMIL WORKSHEET - 5 QUESTION.& ANSWER

 


 

            ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

                           இயல்1

                   பயிற்சித்தாள் - 5



மதிப்பீடு

1.பொருத்துக.

அ) தென்னிந்திய மொழிகள் -பிரான்சிஸ்                                                     எல்லிஸ்

ஆ)மொழிகளின் காட்சிச்சாலை - ச. அகத்தியலிங்கம்

இ) திராவிடம்  - குமரிலபட்டர்

ஈ) தமிழியன்  - ஹோக்கன்


2. உரியகலைச்சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(ஒலியியல், மொழியியல், பேரகராதி, இலக்கியம்)

அ) Lexicon  -  பேரகராதி

ஆ) Phonetics -   ஒலியியல

இ)Literature  -   இலக்கியம்

ஈ) Linguistics   -   மொழியியல்


3.எடுத்துக்காட்டில் விடுபட்ட இடங்களை நிரப்புக.

பயன்பாட்டுத் தொடர்    -     எடுத்துக்காட்டு

தன்வினைத் தொடர் - இனியன் பாடினார்.

பிறவினைத் தொடர் -இனியன் பாடவைத்தார்


செய்வினைத் தொடர் -  பர்வீன் புல்லாங்குழல் செய்தாள்.

செயப்பாட்டுவினைத் தொடர் - புல்லாங்குழல் பர்வினால் செய்யப் பட்டது


உடன்பாட்டுவினைத் தொடர்-   மருதன் ஓவியம் வரைந்தான்.

 எதிர்மறைவினைத் தொடர் - மருதன் ஓவியம் வரைந்திலன்

வினாத்தொடர்   - பூக்களைப் பறிக்கலாமா?

கட்டளைத் தொடர் - பூக்களைப் பறிக்காதீர்.


4. பயனிலைவகைகளைக் குறிப்பிடுக.

தொடர்                           -        பயனிலைவகை

எ.கா.வரைந்தவர்கபிலன் - பெயர்ப்பயனிலை

அ ) ஜான் சென்றான்  -   வினைப் பயனிலை

ஆ) பட்டம் விட்டவர் யார்? - வினாப் பயனிலை

இ ) வடித்தவர் சிற்பி  -  பெயர்ப் பயனிலை


உரைப்பகுதியைப் படித்து 5,6 ஆகியவினாக்களுக்கு விடையளிக்க.

பாரதியார் கவிதைச் சிங்கம் மட்டுமல்லர்; நல்ல உரைநடையாசிரியருங் கூட.
சிறுகதைகள் பல எழுதியவர். நாடக ஆசிரியர். பாரதியின் கவிதை வழி புதுவழி. தமது கவிதையை யார் படித்தின்புற வேண்டும் என்னும் வினாவிற்குப் பாரதியாரே பதிலளித்திருக்கிறார். ஓரிரண்டாண்டு தமிழ் நூற்பழக்கமுள்ள தமிழ்மக்கள் எல்லோரும் படித்து இன்புற வேண்டும் என்பது அவர் விருப்பம். இதனை நிறைவேற்ற, பாரதியார் சில முறைகளைக் கையாண்டிருக்கிறார். முதலில், பாமர மக்கள் பாடி மகிழும் பா வகைகளை (காவடிச்சிந்து, கும்மி, ஆனந்தக் களிப்பு, கண்ணி) வெற்றியுடன் அவர் கையாண்டமை
சிறப்புடையது. குடுகுடுப்பைக்காரரின் பாடல் பாணி கூட பாரதி கையாண்ட பாவகைகளில்
ஒன்றாகும். பாரதியின் பாக்களில் பெரும்பாலானவை தாளத்தோடு பாடுவதற்காகவே எழுதப்பட்டவை.
(புது வழி வகுத்த பாரதி-வ.ஐ.சுப்பிரமணியம்)

5. பாரதியார் கவிதைச்சிங்கம் மட்டுமல்லர்'- என்னும் தொடர் உணர்த்தும் பொருள்
யாது?

பாரதியார் கவிதை எழுதும் திறன் மட்டுமல்லாது உரைநடை,
சிறுகதை, நாடகம் எழுதுவதிலும் வல்லவர்


6. பத்தியின் மையக்கருத்தை எழுதுக.

கவிதை இன்பத்தைப் படித்தோர் முதல் பாமரர் வரைபெற வேண்டும் என்பதே பாரதியின் நோக்கம்.


7. தமிழ் > தமிழா > தமிலா > டிரமிலா > த்ராவிடா > திராவிடா இம்மாற்றத்தை
விளக்கியவர் யார்?

ஹீராஸ் பாதிரியார்.

8. பகுபத உறுப்பிலக்கணம் எழுதுக.

செய்யாதே =செய்+ய்+ஆ+த் +ஏ

(குறிப்பு -பகுபத உறுப்புகளில் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை
உணர்த்தாமல் வரும் 'த்' என்னும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு ஆகும்)

செய்  - பகுதி
ய்         - சந்தி
ஆ        - எதிர்மறை இடைநிலை
த்           -  எழுத்துப்பேறு
ஏ           -  முன்னிலை ஒருமை ஏவல்                                        வினைமுற்று

9. ஒற்றுப்பிழைகளை நீக்கி எழுதுக.

தமிழ்விடுத்தூது ஒருவகை சிற்றிலக்கிய வகை மட்டுமன்றி தமிழின் பெருமையை
முழுமையாக தெரிவிக்கும் இனிய நூலாகும். இலக்கண, இலக்கிய, புராண, வரலாற்று
செய்திகள் அனைத்தும் இதனுள் அடங்கியுள்ளன. சொற்சுவை பொருட்சுவையுடன் அமைந்த தமிழ் களஞ்சியம் தமிழ்விடுத்தூது. இது 268 கண்ணிகளை கொண்டது;
கலிவெண்பாவில் அமைந்துள்ளது.

பிழைகள் உள்ள வார்த்தைகள் 

ஒருவகைச்
மட்டுமன்றித்
முழுமையாகத்
வரலாற்றுச்
தமிழ்க்களஞ்சியம் 
தமிழ்விடுதூது
கண்ணிகளைக் கொண்டது.

10. தமிழ்மொழியின் சிறப்பு என்றும் நிலைத்திருக்க, எவற்றைவிடுத்து எவற்றைச் செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் பின்வரும் பாடலடியுடன் உங்கள் கருத்துகளையும் இணைத்து ஒரு பத்தியளவில் எழுதுக.

"குறைகள் சொல்வதை விட்டுவிட்டுப் புதுக்
கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்!" என்கிறார் கவிஞர்.


* புதிய கண்டுபிடிப்புகளுக்குத் தமிழில் பெயர் சூட்டி மகிழ்வேண்டும்.

* பிற மொழியில் தோன்றும் நூல்களை உடனுக்குடன் தமிழில் மொழி பெயர்த்தல் வேண்டும்.

* தமழில் தோன்றும் சிறந்த இலக்கியங்களை பிற மொழிக்குக் கொண்டு சேர்த்தல் வேண்டும்.

11. பதத்திற்கான விளக்கத்தைப் படித்துப் புரிந்துகொண்டு எடுத்துக்காட்டினை
உறுப்புகளோடு பொருத்திக் காட்டுக.

பதம் என்பதற்குச் சொல் என்ற பொருள் உண்டு. பதம் இரண்டு வகைப்படும். அவை
பகுபதம், பகாப்பதம் ஆகும். பிரிக்கக்கூடியதும் பிரித்தால் பொருள் தருவதுமான சொல் பகுபதம் எனப்படும். பகுபதம் - பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என ஆறு வகைப்படும்.

எ.கா. வரைந்தனர். வரை+த்(ந்)+த் +அன் + அர்

வரை  -    பகுதி
        த்  -    சந்தி
த (ந்) -     ஆனது விகாரம்
த்         -    இறந்தகால இடைநிலை
அன்   -   சாரியை 
அர் -     பலர்பால் வினைமுற்று விகுதி

12. நிறுத்தக்குறியிடுக.

தமிழ் வடமொழியின் மகளன்று, அது தனிக்குடும்பத்திற்கு உரிய மொழி;
சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதாகக் கால்டுவெல்
கூறுகிறார்.

13. பாடலைப் படித்து விடையளிக்க.

"விறகுநான்; வண்டமிழே! உன்னருள் வாய்த்த
பிறகுநான்வீணையாய்ப் போனேன்;- சிறகுநான்
சின்னதாய்க் கொண்டதொரு சிற்றீசல்; செந்தமிழே!
நின்னால் விமானமானேன் நான்!"

- பாடலில் கவிஞர் தன்னை வீணை என்றும் விமானம் என்றும் ஏன் குறிப்பிடுகிறார்?


              கவிஞன் வீணைபோல் கருவியாக இருந்து தன் கவிதைகளால் பிறரை மகிழ்விக்கிறான். அதனால் புகழ்
உச்சியில் உயர்ந்ததை விமானம் என்கிறார் கவிஞர் .

14. தமிழ்விடு தூதின் ஆசிரியராக உங்களை எண்ணிக்கொண்டு,

"உண்ணப்படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும் விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள்........"
--எனத் தமிழ்மொழியை அழைத்து விடுக்கின்ற வேண்டுகோள்கள் நான்கனை எழுதுக.

+ நல்ல தமிழ் பேசும் பண்பைத் தமிழர்க்குத் தந்திட வேண்டும்.

* புதிய கண்டுபிடிப்புகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர் தந்திட வேண்டும்.

* இறவாத இலக்கியங்கள் இன்னும் தந்திட வேண்டும்.

* நான்காம் தமழான கணினித் தமிழுக்கு நிறைய ஆசிரியர் வேண்டும்.

15. கவிஞரின் கருத்துக் குறித்து இரண்டு தொடர்கள் எழுதுக.

"ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்" என்கிறார் கவிஞர் ஈரோடு
தமிழன்பன்.

* கவிதை,  ஒரு பூவின் மலர்ச்சியைப் போன்றும் , ஒரு குழந்தையின் புன்னகை போன்றும் இயல்பானது.

* விளக்கங்கள் நல்ல கவிதைக்குத் தேவைப் படுவதில்லை. படித்தவுடன் விளங்கிவிடும் .

************************    ******************

மேலே உள்ள வினாக்களின் விடைகளை காட்சிப்பதிவாகக் கண்டு மகிழலாம்.




*******************   ************************


வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

நன்றி - திரு.மணிமீனாட்சி சுந்தரம் , தமிழாசிரியர் , மதுரை.

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
      97861 41410


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம் 

உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*************************     ***************



Post a Comment

0 Comments