ஓவியம் வரையலாம் வாங்க ! - பகுதி - 5 - நம் வீட்டுக் குழந்தைகளின் ஓவியத்திறமையை ஊக்குவிக்கும் புத்தாக்கத்தொடர் - பகுதி - 5 - பச்சைக்கிளி வரையலாம் !

  வணக்கம் செல்லக் குழந்தைகளே !  இன்று ஒரு அழகான ஓவியத்தை நம்முடைய ஓவிய ஆசிரியை திருமதி.இலஷ்மி பிரதிபா நமக்கு வரைந்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள்.


நம்ம வீட்ல செல்லப்பிராணிகளா என்னென்னால்லாம் வளர்ப்போம் ? அப்படினு கேட்டா நீங்க நிறையச் சொல்விங்க இல்லயா ? பூனை , நாய் , லவ்பேர்ட்ஸ் , அப்றம் கிளி . 

  இன்று நாம வரையப்போற அழகுப் பறவை எதுன்னா அது கிளிதான். எவ்ளோ அழகான பறவை . கிளியை நினைச்சாலே மகிழ்ச்சிதான். 





நீங்க கூட அடிக்கடி ஒரு கிளி பாட்டு பாடுவிங்களே !


பச்சைக்கிளியே வா வா !

பாலும் சோறும் உண்ண வா !

கொச்சி மஞ்சள் பூச வா !

கொஞ்சி விளையாட வா !

பையப் பைய பறந்து வா !

பாடிப் பாடிக் களித்து வா !

கையில் வந்து இருக்க வா !

கனி அருந்த ஓடி வா !

   ஆகா ! அருமையாப் பாடுனிங்க. இப்ப நாம கிளியை எப்படி வரையலாம் அப்படினு       ஒவ்வொரு படிநிலையாப் பாக்கலாமா ?


படம் : 1



படம் : 2




படம் : 3




இதோ உங்க கிளி கிளையில் !




என்ன செல்லக் குழந்தைகளே ! நீங்களும் அழகா வரைஞ்சிருக்கிங்க. வாழ்த்துகள். தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் வரைஞ்சு பழகுங்க. உங்களுக்கு ஆர்வமா இருக்கும். நிஞ்சா கட்டோரிய நினைக்காதிங்க. 

பெற்றோர்களே ! தங்கள் குழந்தைகளின் திறமையை ஊக்கப்படுத்துங்கள். படி படி என வார்த்தை ஊசியால் குத்தாதீர்கள்.

 ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஓராயிரம் திறமை !

அதை ஊக்குவிப்பதே நம் கடமை !

வாழ்த்துகள்.


வண்ணம் : திருமதி.இலஷ்மி பிரதிபா அவர்கள் , ஓவிய ஆசிரியை , மதுரை.

எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

**********************   *****************

Post a Comment

0 Comments