வணக்கம் செல்லக் குழந்தைகளே ! நேற்று எல்லாரும் நாய்க்குட்டி படம் வரைஞ்சு வண்ணம் தீட்டி மகிழ்ந்திங்களா ? சரி.இன்று நாம் வரையப் போறவர் யாரு தெரியுமா ?இவர் இருந்தாலும் ஆயிரம் பொன் , இறந்தாலும் ஆயிரம் பொன் அப்டினு சொல்வாங்க. உருவத்திலே ரொம்பப் பெரியவர்.
மனிதர்களுக்குப் பலம் நம்பிக்கை என்றால் , இவருக்குப் பலம் ... ?
ம். சரியா சொல்லிட்டிங்க. தும்பிக்கையில். ஆமா . இன்று நாம் வரையப்போறவர் யானையார். பானை வயிற்று யானையார்.
யானை என்ற உடன் நமக்கு ஒரு பாட்டு ஞாபகத்திற்கு வருமே ! ஆமா . அந்தப் பாட்டுத்தான்.
ஆனை ஆனை
அழகர் ஆனை
அழகரும் சொக்கரும்
ஏறும் ஆனை
கட்டிக்கரும்பை
முறிக்கும் ஆனை
காவேரி தண்ணீரை
கலக்கும் ஆனை
குட்டி ஆனைக்குக்
கொம்பு முளைச்சுதாம்
பட்டணமெல்லாம்
பறந்தோடிப் போச்சுதாம்!
சரி. இப்போ நம்ம ஓவிய ஆசிரியை திருமதி.இலஷ்மி பிரதிபா அவர்களின் கைவண்ணத்தில் உருவான அழகான யானைக் குட்டியைப் பாத்து குட்டிச் செல்வங்களான நீங்க வரையலாமா ?
படம் - 1
0 Comments