ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - பயிற்சித்தாள் - 4 தொடர் இலக்கணம் - 9 TAMIL WORKSHEET 4 - QUESTION & ANSWER

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

இயல் - 1 

பயிற்சித்தாள் - 4

கற்கண்டு-தொடர் இலக்கணம்




*********************    ********************


1.சரியான விடையைத் தெரிவுசெய்க.

கந்தன் தண்ணீர் ஊற்றினான்- இத்தொடரில் தண்ணீர் என்பது

அ) செயப்படுபொருள்

ஆ)வினைப்பயனிலை

இ) பயனிலை

ஈ) எழுவாய்

விடை : அ) செயப்படுபொருள்

2. பகுபத உறுப்புகளில் பெரும்பான்மையாக இடம்பெறும் அடிப்படை உறுப்புகளைத் தெரிவுசெய்க.

அ) பகுதி, விகுதி

ஆ) பகுதி, சந்தி, சாரியை

இ) விகுதி, இடைநிலை, விகாரம்

ஈ) சாரியை, சந்தி, பகுதி

விடை : அ ) பகுதி , விகுதி 

3. ஆடினான்- இச்சொல்லின் பகுதியைத் தெரிவுசெய்க.

அ) ஆடி

ஆ) அடி

இ) ஆடு

ஈ) ஆட்டு

விடை : இ) ஆடு


4. ) எடுத்துக்காட்டுடன் பொருந்தாத தொடரைத் தெரிவுசெய்க.

அ) நாள்தோறும் உடற்பயிற்சிசெய் - கட்டளைத் தொடர்.

ஆ) 'பாண்டியன் பரிசு' பாவேந்தரால் இயற்றப்பட்டது-செயப்பாட்டுவினைத்தொடர்.

இ) வேலன் பாடம் படித்தான் - பிறவினைத் தொடர்

ஈ) இராமன் நாளை வாரான்- எதிர்மறைவினைத் தொடர்.

விடை : இ) வேலன் பாடம் படித்தான் - பிறவினைத் தொடர்

5. வினைமரபைத் தெரிவுசெய்து வினைமுற்றாக மாற்றுக.

அ) முருகன்பால் பருகினான்
(குடி/பருகு)

ஆ)யாழிசை, மாத்திரைகளை விழுங்கினாள்
(தின்/விழுங்கு)

இ) வேடன் பறவையை நோக்கி அம்பு எய்தான்

- (எய்/விடு)

ஈ) மலர்விழிபூ  கொய்தாள்
     
.(பறி/கொய்)

6. பொருத்தமான எழுவாய், பயனிலை, செயப்படுபொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(படித்தான்,பூ,சென்றனர், வரைந்தாள்)

அ) பொற்சுவை ஓவியம்  வரைந்தாள்

ஆ) பூ கொய்து வந்தார்.

இ) பரிதி கவிதையைப் படித்தான்

ஈ)ஆராய்ச்சியாளர்கள் விண்வெளிக்குச் சென்றனர்.

7. தன்வினைத் தொடருக்கு ஏற்றவினையைப் பொருத்தி எழுதுக.

இணைய வகுப்பில் ஆசிரியர், பாடங்களைக் கணினி வாயிலாகக் காட்டினார்.
(காட்டு / காட்டுவி)

8.) விளக்கத்தைப் படித்துப்    புரிந்து  கொண்டு பெயரடை,வினையடை அமைந்த இரண்டு தொடரை உருவாக்குக.


விளக்கம் :

நல்ல பாடல் ஒன்று கேட்டேன் - என்னும் தொடரில் பாடல் என்பது பெயர். இதன்
அடைமொழியாகிய நல்ல என்பது பெயரடை

பள்ளி வாகனம் மெதுவாகச் சென்றது - என்னும் தொடரில் சென்றது என்பது வினை.
இதன் அடைமொழியாகிய மெதுவாக என்பது வினையடை.

நாடு உயர நல்ல மனிதர்கள் வேண்டும்

அகிலா  இனிமையாகப் பாடுவாள்.


9.செய்தித் தொடரை வினாத்தொடராக மாற்றுக.

நாளை பள்ளி விடுமுறை.

நாளை பள்ளி விடுமுறையா ?

10.வேர்ச்சொற்களைக் கொண்டு பிறவினைத் தொடர்கள் இரண்டு உருவாக்குக.

வேர்ச்சொற்கள் - கல், உண்,செய், சிரி.

ஆசிரியர் பாடம் கற்பித்தார்.

அம்மா சோறு உண்பித்தார்.

11.பகுபத உறுப்பிலக்கணம் எழுதுக.

கடந்த : கட + த் ( ந் ) + த் + அ
கட  - பகுதி
த் ( ந் ) ஆனது விகாரம்
த் - சந்தி
அ - பெயரெச்ச விகுதி.


12.விடுபட்ட கட்டங்களில் பொருத்தமான பகுபத உறுப்புகளை இட்டு நிரப்புக.

(வரைந்தான்,கண்ட, விரித்த,கொடுப்பாய், பார்த்தனன்)

பகுதி  சந்தி   விகாரம் இ.நி. சாரியை விகுதி

வரை    த்             ந்            த்        -----          ஆன்

காண்  -------       கண்        ட்        ------          அ

விரி        -------     -------         த்          த்            அ

கொடு      ப்        -------          ப்        --------      ஆய்

பார்           த்        -------          த்       அன்       அன் 



13.)குறிப்புகளைப் பயன் படுத்திப் புதிரை விடுவிக்க.

• இது ஓர் ஐந்தெழுத்துச் சொல்.

• முதல் இரண்டு எழுத்துகள் நேரத்தைக் குறிக்கும்.

இறுதி மூன்று எழுத்துகள் ஓர் அணிகலன்.

• முதல் எழுத்தையும் இறுதி எழுத்தையும் இணைத்தால், குறிஞ்சியின் நிலம். அது
என்ன?

விடை : மணிமேகலை

14. ஒவ்வொரு தொடர்வகைக்கும் ஓர் எடுத்துக்காட்டு எழுதுக.

அ)கட்டளைத்தொடர்   - நிமிர்ந்து நட

ஆ)வினாத்தொடர் - பாடம் படித்தாயா ?

இ) உணர்ச்சித்தொடர் - ஆகா ! என்னே அழகு முழு நிலா

ஈ)செய்தித்தொடர்  - நாளை பள்ளிக்கு வேலை நாள் 

உ)உடன்பாட்டுத்தொடர் - நான் பாடம் படிப்பேன்.

15. உரையாடலில் பயின்றுவரும் தொடர்வகைகளைக் கண்டறிந்து எழுதுக.

அம்மா:அமுதா,என்ன செய்து கொண்டிருக்கிறாய்? (1)

அமுதா:பாடம் படித்துக் கொண்டிருக்கிறேன் அம்மா.(2)

அம்மா:அகிலன் எங்கே? விளையாடச் சென்று விட்டானா?(3)

அமுதா: இல்லை அம்மா! அகிலனையும் நான் படிக்கவைத்துக் கொண்டிருக்கிறேன். (4)

அம்மா :(அகிலனிடம்) வீட்டில் எண்ணெய் இல்லை. (5)

உடனே கடைக்கு விரைந்து சென்று எண்ணெய் வாங்கிவா.(6)

1)  வினாத்தொடர்

2) உடன்பாட்டுத் தொடர்

3) வினாத்தொடர்

4) பிறவினைத்தொடர்

5) செய்தித்தொடர்

6) கட்டளைத்தொடர்


*********************   ********************

மாணவர்களே ! மேல உள்ள பயிற்சித்தாள் 4 ன் வினாக்களை எளிய, இனிய விளக்கத்துடன் கீழே உள்ள காட்சிப் பதிவில் கண்டு மகிழலாம்.





**********************  ********************


பாருங்கள் ! கருத்துகளைக் கூறுங்கள் ! நண்பர்களுக்கும் பகிருங்கள் . 

நன்றி - திரு.மணி மீனாட்சி சுந்தரம் , தமிழாசிரியர் , மதுரை.

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 97861 41410

**********************   ********************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம் 

உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*************************     *****************

Post a Comment

0 Comments