ஓவியம் வரையலாம் வாங்க ! பகுதி - 3 - நம் வீட்டுக் குழந்தைகளின் ஓவியத் திறனை ஊக்குவிக்கும் தொடர் - நாய்க்குட்டி வரைவது எப்படி ?

 


வணக்கம் அன்புச் செல்வங்களே ! 


ஓவியம் வரையலாம் வாங்க !  பகுதி மூன்றில் இன்று நமக்கு மிகவும் நெருங்கிய நண்பனாக  இருக்கக் கூடிய ஒருவரைப் பற்றி  வரைய இருக்கிறோம் . நன்றி அப்படிங்கற வார்த்தைக்குச் சொந்தக்காரர் அவர். அவரப் பாத்தாலே தீய செயல் செய்ய நினைக்கறவங்க பயந்து ஓடுவாங்க. அவர் இருக்கற வீட்டுப்பக்கம் போவதற்கே பயப்படுவாங்க. 


அட ! ஆமா குட்டீஸ் ! அவர்தான் நன்றி உள்ள நண்பரான நாயார். அவரை இன்று நமக்கு ஓவியமாக அருமையாக வரைந்து தந்துள்ளாங்க நம்மோட ஓவிய ஆசிரியை திருமதி.இலஷ்மி பிரதிபா அவர்கள். அவர்களுக்கு வாழ்த்துகள்.



                    நம்ம வீட்ல ஒரு குட்டிநாய் இருந்தா எப்படியெல்லாம் கொஞ்சி விளையாடுவோம் இல்லயா ?  நாய்க்குட்டினா உடனே நமக்கு பாட்டு ஒன்னு ஞாபகத்துக்கு வருமே ! ஆமாங்க ! அதுதான் குழந்தைக் கவிஞர்.அழ.வள்ளியப்பா எழுதிய பாடல். அந்தப் பாட்டப் பாத்தபின் ஓவியம் வரைவது எப்படினு பார்ப்போமா ?

நாய்க்குட்டி

தோ தோ... நாய்க்குட்டி,

துள்ளி வாவா நாய்க்குட்டி.

உன்னைத் தானே நாய்க்குட்டி,

ஓடி வாவா நாய்க்குட்டி

கோபம் ஏனோ நாய்க்குட்டி?

குதித்து வாவா நாய்க்குட்டி

கழுத்தில் மணியைக் கட்டுவேன்,

கறியும் சோறும் போடுவேன்

இரவில் இங்கே தங்கிடு

எங்கள் வீட்டைக் காத்திடு!


குழந்தைக் கவிஞருக்கு நமது நன்றிகள்.

    நாய்களுக்கு மிகுந்த மோப்ப சக்தி உண்டு.இராத்திரி நேரத்தில தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்தது எங்க வீட்டு நாய். ஏன் இப்டி குரைக்குதுனு லைட் அடிச்சுப் பாத்தா , அங்க ஒரு பாம்பு. அதை வரவிடாம கத்திக்கிட்டே இருக்கு.  

 இன்று , நாய் வீட்டைக்காக்குதோ இல்லயோ நாம அதைப் பாதுகாத்திட்டு இருக்கோம். ஏன்னா அது விலை கூடுன நாயாம். சரி ... சரி ... வாங்க ஓவியம் வரையலாம்.


படம் : 1




படம் - 2




படம் : 3





படம் : 4




என்ன செல்லங்களே ! ஓவியம் வரைஞ்சு முடிச்சிட்டிங்களா ?  ஓ ! அழகா வரைஞ்சிருக்கிங்க . வாழ்த்துகள். நாளை மற்றுமோர் ஓவியத்தில் சந்திப்போம் .


வண்ணம் - திருமதி.இலஷ்மி பிரதிபா அவர்கள் , ஓவிய ஆசிரியை , மதுரை.

எண்ணம் - மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் . மதுரை.


***********************  *******************


Post a Comment

0 Comments