பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - கற்கண்டு - தொகைநிலைத் தொடர்கள் - வினைத்தொகை , பண்புத்தொகை - எழுத்து & காட்சிப் பதிவு விளக்கம்.

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 2 , இயற்கை 

கற்கண்டு - தொகைநிலைத் தொடர்கள்

வினைத்தொகை & பண்புத்தொகை 


************************   ******************


               வணக்கம் மாணவ நண்பர்களே ! நாம் நேற்றைய வகுப்பில் தொகைநிலைத் தொடர்கள் பகுதியில் வேற்றுமைத் தொகை பற்றியும் ,உருபும் பயனும் உடன்தொக்க தொகை பற்றியும் காட்சிப் பதிவுடன் விளக்கமாகக் கண்டோம். 

           இன்று வினைத்தொகை மற்றும்  பண்புத் தொகை பற்றிக் காண உள்ளோம். நம்முடைய பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கம் காட்சிப் பதிவாக வர உள்ளது. கண்டு மகிழலாம்.

வினைத்தொகை

          காலம் காட்டும் இடை நிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப் பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது "வினைத்தொகை" எனப்படும். காலம் கரந்த பெயரெச்சமே   வினைத்தொகையாகும்.

எடுத்துக்காட்டு.

வீசுதென்றல், கொல்களிறு.

  வீசு, கொல் என்பவை வினைப்பகுதிகள்.  இவை முறையே தென்றல்,களிறு என்னும்   பெயர்ச்சொற்களோடு சேர்ந்து காலத்தை வெளிப்படுத்தாத பெயரெச்சங்களாயின. மேலும் இவை வீசிய காற்று, வீசுகின்ற காற்று, வீசும் காற்று எனவும் கொன்ற களிறு, கொல்கின்ற களிறு, கொல்லும் களிறு எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி விரிந்து பொருள் தருகின்றன. காலம்காட்டும் இடை நிலைகள் இப்பெயரெச்சங்களில்  தொக்கி இருக்கின்றன.

                 வினைப்பகுதியும் அடுத்துப் பெயர்ச்சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே வினைத்தொகை அமையும்.

மாணவ நண்பர்களே ! மேலே நாம் கண்ட பாடப்பகுதி செய்தியினை இனிமையான ,எளிமையான விளக்கத்தில் காட்சிப் பதிவாகக் காண்போமா ?பண்புத்தொகை

                                            நிறம், வடிவம், அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் " மை " என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது  பண்புத்தொகை எனப்படும்.

செங்காந்தள் - செம்மையாகிய காந்தள்,

வட்டத் தொட்டி - வட்டமான தொட்டி,

இன்மொழி - இனிமையானமொழி.


இருபெயரொட்டுப் பண்புத்தொகை

    சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர்.பின்னும் நின்று இடையில் " ஆகிய "  என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.

மார்கழித் திங்கள், சாரைப்பாம்பு.

                            திங்கள், பாம்பு ஆகிய பொதுப் பெயர்களுக்குமுன் மார்கழி, சாரை எனும் சிறப்புப் பெயர்கள் வந்து மார்கழி ஆகிய திங்கள் என்றும் சாரை ஆகிய பாம்பு என்றும்,இருபெயரொட்டாக வந்துள்ளன.

          நம்முடைய பெரும்புலவர் . திரு.மு.சன்னாசி ஐயா அவர்கள் மிக எளிமையாக பண்புத்தொகை பற்றி விளக்கிய காட்சிப்பதிவைக் காண்போமா ?****************    ************    ***********


வாழ்த்துகள் நண்பர்களே ! 
பார்த்ததற்கும் , பகிர்ந்ததற்கும் நன்றி !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

உங்கள் வாட்சாப் குழுவில் 97861 41410 என்ற எண்ணை இணைத்து அனைவரும் பயன்பெறச்செய்யலாம் ஆசிரிய நண்பர்களே !

**********************    *********************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  *************    ******

Post a Comment

0 Comments