எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல்-8
பயிற்சித்தாள் - 29 - மெய்ஞ்ஞான ஒளி
1. பிரித்தெழுதுக.
அ) உள்ளிருக்கும் = உள் + இருக்கும்
ஆ) மெய்ஞ்ஞான ஒளி = மெய் + ஞானம் + ஒளி
2. பின்வரும் சொற்களை அகர வரிசைப்படுத்தி எழுதுக.
படிப்பு வெள்ளம், உள்ளம், மெய், பராபரமே
விடை: உள்ளம், படிப்பு , பராபரமே,மெய், வெள்ளம்
3. குறிப்புகளைக்கொண்டு பாடலை நிறைவுசெய்க.
அ) அறிவை அறிவோருக்கு -- ஆனந்த. வெள்ளமதாய் (இன்பம்
என்பதன் பிறமொழிச்சொல்)
ஆ) கரையறவே பொங்கும் கடலே பராபரமே. (கப்பல் போக்குவரத்து
நிகழுமிடம்)
4. பொருத்துக.
சொல் விடை
அ ) உள் - அகம்
ஆ) பாதம் - அடி
இ ) பகர் - கூறு
ஈ ) மெய் - உண்மை
5 ) பாடலடிகளைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
'அ ) அறிவை அறிவோருக்கு ஆனந்த வெள்ளமதாய்க்
கரையறவே பொங்கும் கடலே பராபரமே'
.
வினாக்கள்
அ) பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச்சொற்களை எடுத்து எழுதுக.
விடை: மோனை - அ
அறிவை அறிவோருக்கு
ஆ) 'கடல்' என்பதனைக் குறிக்கும் வேறுபெயர்கள் இரண்டனை எழுதுக.
விடை: பரவை, ஆர்கலி,
'பொங்கும் கடல்' என்னும் தொடரின் பெயரெச்ச வடிவம் தருக.
விடை: பொங்கிய கடல்
ஈ ) குணங்குடியார் எதனை 'ஆனந்த வெள்ளம்' என்று கூறுகிறார்?
விடை: அறிவு
6. கீழ்க்காணும் பாடலடிகளில் அமைந்துள்ள எதுகைச்சொற்களை எடுத்து எழுதுக.
'காசை விரும்பிக் கலங்கிநின்று உன்பாத
ஆசை விரும்பாது அலைந்தேன் பராபரமே',
விடை: காசை, ஆசை - சை
7. பின்வரும் பாடலடிகள் உணர்த்தும் பொருளினை எழுதுக(பக். 170)
'கள்ளக் கருத்துகளைக் கட்டோடு அறுத்தவருக்கு
உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே'.
விடை :
மேலான பொருளே! தம் தீய எண்ணங்களை
அடியோடு அழித்தவர்கள் மனத்துள்ளே எழுந்தருளி இருக்கும் உண்மையான அறிவு ஒளி ஆனவனே!
8. உனக்குள் இருக்கும் ஆசைகளுள் தேவையற்றது என நீ கருதும் இரண்டனைப் பற்றி இரண்டு மணித்துளி பேசுவதற்கேற்ற உரை ஒன்றனைப் பத்தி அளவில் எழுதுக.
விடை:
9. கோடிட்ட இடங்களில் பொருத்தமான சொல்லைக்கொண்டு கவிதையினை
நிறைவுசெய்க.
(மயக்கும், எல்லாம், சிரிக்கும், இல்லா)
கள்ளம் .....இல்லா...பிள்ளை
உள்ளம் எல்லாம். வெள்ளை
மலர்ந்து சிரிக்கும்... மழலை
மனத்தை மயக்கும் முல்லை.
10. தொகைச்சொற்களை விரித்தெழுதுக.
அ) முத்தமிழ்
விடை: இயல், இசை, நாடகம்
ஆ) நாற்றிசை
விடை: கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
இ ) ஐம்பொறி
விடை: மெய், வாய், கண், மூக்கு, செவி
ஈ ) அறுசுவை
விடை: இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு, கசப்பு.
*********************** ******************
மேல உள்ள வினாக்களுக்கான விடைகளை இனிய , எளிய விளக்கத்துடன் கீழே உள்ள வீடியோவில் காணலாம்.
வாழ்த்துகள் மாணவர்களே !
மு.மகேந்திர பாபு ,தமிழாசிரியர் , மதுரை.
******************* **********************
0 Comments