பயிற்சித்தாள் - 24 - இயல் 7
கவிதைப் பேழை - விடுதலைத் திருநாள்
********************** *******************
1.'நிர்மூட உறக்கம்' எனக் கவிஞர் மீரா கூறுவதனைத் தெரிவுசெய்க.
அ) கல்லாமை என்னும் உறக்கம்
ஆ ) இயலாமை என்னும் உறக்கம்
இ) அறியாமை என்னும் உறக்கம்
ஈ) இல்லாமை என்னும் உறக்கம்
விடை: இ ) அறியாமை என்னும் உறக்கம்
2. சொல்லையும் பொருளையும் பொருத்துக.
வ.எண் சொல் விடை
அ ) ஆனந்தம் மகிழ்ச்சி
ஆ ) தரிசனம் காட்சி
இ ) தேசம் நாடு
ஈ ) சத்தியம் உண்மை
3. பிரித்தெழுதுக.
அ) விரட்டியடித்து - விரட்டி + அடித்து
ஆ) குங்குமப்பொட்டு-குங்குமம் + பொட்டு
இதந்தரும் - இதம் + தரும்
6. ' பாரத அன்னை காளியாய்ச் சீறிக் கைவிலங் கொடித்தாள்' என்பதன்மூலம் கவிஞர் கூறவருவது என்ன?
விடை: இந்திய தேசத்தின் விடுதலையை.
7. இந்திய நாட்டு மக்களின் நிலையை விடுதலைத் திருநாள் பாடல்வழி எழுதுக.
விடை: 300 ஆண்டுகள் நம்மை அடிமைப் படுத்தி ஆட்சி செய்த வெள்ளையரின் இருண்ட ஆட்சி நிறைவு பெற்றது.
மக்களின் அறியாமை என்னும் இருள் அகன்றது.
8 , உன் பள்ளியில் நடைபெற்ற விடுதலைத் திருநாள் கொண்டாட்டம் குறித்து உன் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.
பசுமை வீதி,
பாரதிபுரம் ,
மதுரை - 20
அன்புள்ள நண்பா ! வணக்கம். நலம். நீயும் உன் குடும்பத்தினரும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். எங்கள் பள்ளியில் நடைபெற்ற விடுதலை நாள் விழாக்கொண்டாட்டத்தை உன்னுடன் பகிரவே இக்கடித்தை எழுதுகிறேன்.
விழா , காலை 10 மணிக்குத் தொடங்கியது. மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மாணவ , மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை முதன்மைக் கல்வி அலுவலர் வழங்கினார். விழா நிறைவில் இனிப்பு வழங்கப்பட்டது. எதிர்வரும் விடுதலை நாள் நிகழ்வில் நீயும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம் உரைத்தொடர்.
GREENTAMIL.IN - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
அழைத்து மகிழ - 97861 41410
1 Comments
Deepalakshmi 8th std.
ReplyDelete