எட்டாம் வகுப்பு - தமிழ்
பயிற்சித்தாள் - 21
இயல் 6
உரைநடை உலகம் - கொங்கு நாட்டு வணிகம்
******************* *********************
1. சரியானவிடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மக்கள் தத்தம் பொருளைத் தந்து தமக்குத் தேவையான பொருளைப் பெற்றுக் கொள்வது --------- ஆகும்.
அ) கடன் பெறுதல்
ஆ) பண்டமாற்று
இ) அடகுவைத்தல்
ஈ)கூடித் தொழில் செய்தல்
விடை: ஆ. பண்டமாற்று
2. ) பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) சேரநாடு - குடநாடு
ஆ) திண்டுக்கல் - தமிழ்நாட்டின் ஹாலந்து
இ) நெல் - மிளகு
ஈ)ஏற்காடு - ஏழைகளின் ஊட்டி
விடை: இ ) நெல் - மிளகு
3. சரியா? தவறா? என எழுதுக.
அ) மூவேந்தரில் சேரர்களை முதன்மையாகக் கூறும் நூல் தொல்காப்பியம். ( சரி )
ஆ) கடம்பர்கள் சேரர்களின் உறவினர் ஆவர்.
( தவறு )
இ) தற்போது வணிகத்தில் பொருளுக்கு மாற்றாகத் தரப்படுவது பணம்.( சரி )
ஈ) தமிழகத்தில் மஞ்சள் சந்தை மதுரையில் நடைபெறுகிறது.
( தவறு )
4. கோடிட்ட இடங்களைத் தகுந்த சொற்களால் நிரப்புக.
(வணிகம், சேரநாடு, தமிழர்கள், காரணம், சேரர், கல்வி)
உழவு, கைத்தொழில், வணிகம் ,
என்னும் மூன்றும் ஒரு நாட்டு
மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு அடிப்படைகளாகும் என்பர். உள்நாட்டு,
வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள்
சிறந்து விளங்கினர். கடல்
வணிகத்தில் சேரநாடு
சிறப்புற்றிருந்தது. அதற்கு அந்நாட்டின்
இயற்கையமைப்பே காரணம் ஆகும்.
5. கீழ்க்காணும் சொற்களைக்கொண்டு தொடர் அமைக்க.
அ) பின்னலாடை - திருப்பூர் மிகச்சிறந்த பின்னலாடை நகரம்
ஆ) கோவன்புதூர் - கோவன்புத்தூர் தற்போது கோயம்புத்தூர் என அழைக்கப்படுகிறது.
இ) இயற்கையமைப்பு - ஒரு நாட்டின் இயற்கை அமைப்பும் அதன் வளர்ச்சிக்குக் காரணம் ஆகும்.
6. பொருத்துக.
விடை
அ) திண்டுக்கல் - மலர் உற்பத்தி
ஆ) நாமக்கல் - கோழிவளர்ப்பு,
முட்டை உற்பத்தி
இ ) சேலம் - ஜவ்வரிசி உற்பத்தி
ஈ) திருப்பூர் - ஆயத்த ஆடை தயாரிப்பு
7. கீழ்க்காணும் தொடர்களில் சந்திப்பிழையாக உள்ள இடங்களை எடுத்தெழுதுக.
சேரமன்னரின் அகன்றப் பெரிய நாட்டில் பெருகிய மழைநீரால் வருவாய்ச்
சிறந்தது. தகுந்தக்காலத்தில் மழைப் பொழிவதால் கிளைத்துச் செழித்தப் பயிர்கள் பால்முற்றிக் கதிர்களை ஈன்றன.
8. சொற்களை இடம்மாற்றிச் சரியான தொடராக்குக.
ஒருநாட்டின் மழை பொய்த்துவிட்டால் வளத்திற்கு அடிப்படையான பசியும்
பஞ்சமும் மழை வேண்டி செய்வர், மக்கள் வழிபாடு தலைவிரித்தாடும்.
விடை:
ஒரு நாட்டின் மழை பொய்த்துவிட்டால் , பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடும். வளத்திற்கு அடிப்படையான மழை வேண்டி மக்கள் வழிபாடு செய்வர்.
9. கீழ்க்காணும் உரைப்பகுதியில் அமைந்துள்ள இணைச்சொற்களை எடுத்தெழுதுக.
சேரமன்னர்கள் நீதி செலுத்துவதில் விருப்புவெறுப்பு அற்றவர்களாக
விளங்கியதால் அறம் தழைத்தது.சேரர் புகழ்,பட்டிதொட்டிஎங்கும்பரவியது.
பஞ்சமும்பட்டினியும் மறைந்ததால், மக்கள் உள்ளும் புறமும் மகிழ்ந்து உற்றார் உறவினருடன்கூடிவாழ்ந்தனர். நாடெங்கும் காலையும் மாலையும் ஆடலும் பாடலும் நடைபெற்றன.
விடை:
1 ) விருப்பு , வெறுப்பு .
2:) பட்டிதொட்டி
3 ) பஞ்சமுல் பட்டினியும்
4 ) உள்ளும் புறமும்
5 ) காலையும் மாலையும்
6 ) ஆடலும் பாடலும்
10. மதுரைக்கு மல்லிகை - போன்று ஊருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் மூன்றனை எழுதுக.
விடை:
1 ) திண்டுக்கல் பூட்டு
2 ) பழனி பஞ்சாமிர்தம்
3 ) நெல்லை அல்வா
4 ) கோவில்பட்டி கடலை மிட்டாய்
5 ) கும்பகோணம் வெத்தலை
******************** *********************
வாழ்த்துகள் மாணவச் செல்வங்களே !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
********************* ***************-*******
0 Comments