எட்டாம் வகுப்பு - தமிழ் - பயிற்சித்தாள் - 20 - இயல் 5 - மதிப்பீடு / 8 TAMIL WORKSHEET 20 QUESTION & ANSWER

 

எட்டாம் வகுப்பு - தமிழ் 

பயிற்சித்தாள்  - 20

இயல்5 - மதிப்பீடு




1. 'பொன் வண்ண நீர்நிலை ' என்னும் பொருள்படும் சொல்லைத் தெரிவுசெய்க.

அ) திருக்கேதாரம் (ஆ) கனகச்சுனை 

இ) பழவெய்முழவு ஈ) மதவேழங்கள்

விடை ஆ. கனகச்சனை


2 சரியான சொற்களால் கோடிட்ட இடங்களை நிரப்புக.

   ( வீர முரசு. நாற்பது, கொடைமுரசு, புறநானூறு, முப்பத்தாறு, சிலப்பதிகாரம், மாக்கண்முரசம், வீணை, தம்புரா )

படைமுரசு, -கொடைமுரசு-, மணமுரசு என்று மூன்று வகையான முரசுகள் பழந்தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்தன. முப்பத்தாறு வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. மாக்கண் முரசம் என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. யாழின் உருவமே மெல்ல மெல்ல மாற்றமடைந்து பிற்காலத்தில் வீணை என மாறியது.

3. பொருத்துக.

                                                      விடை

அ) சுடுசோறு  -  வினைத்தொகை

ஆ) செங்கதிர்  -   பண்புத்தொகை

இ) தேன்மொழி - உவமைத்தொகை

ஈ ) காய்கறி  -  உம்மைத்தொகை


4. சரியா? தவறா? என எழுதுக.

அ) சொற்களுக்கிடையில் 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகை ஆகும். ( சரி ) 


ஆ) உவம உருபுகள் வெளிப்படையாக வந்து பொருள்தருவது உவமைத்தொகை
ஆகும்.
( தவறு)

இ ) 'தயிர்ப்பானை' என்பது உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை ஆகும்.(சரி)

5. உரைப்பகுதியில் அமைந்துள்ள தொகாநிலைத்தொடர்களை எடுத்தெழுதுக.

தோட்டத்தில் தென்றல் வீசியது; அதில் மகிழ்ந்திருந்த முருகனை, முருகா!
சாப்பிட வா! என, அவன் அம்மா அழைக்கவே சென்றான் முருகன். சாலப்பசித்த அவனை உணவின் நறுமணம் ஒருகணம் செதுக்கிய சிலையாக்கியது. உணவைப்
படைத்தார் அம்மா. உண்டு முடித்தான் முருகன். உணவு, அருமை அருமை! அருமை! என்று அம்மாவைப் பாராட்டினான் முருகன்.

விடை:

1 ) முருகா சாப்பிட வா - விளித்தொடர்

2. சாலப் பசித்த -  உரிச்சொல் தொடர்

3. உணவைப் படைத்தார் -  இரண்டாம் வேற்றுமைத்தொடர்

6. பொருத்தமான நிறுத்தக்குறியிடுக.

அடேயப்பா எவ்வளவு பெரிய குதிரைச்சிலை நான் உண்மையான குதிரை என்றே நினைத்து ஏமாந்துவிட்டேன் என்றான் அகிலன் இதென்ன சிறப்பு யானைபுலி சிற்பங்கள்  எல்லாம் உள்ளே இருக்கின்றன இன்னும் அழகாக இருக்கும் வா நாம்
போய்ப்பார்க்கலாம் என அழைத்தான் பொன்னன்

விடை:

அடேயப்பா! எவ்வளவு பெரிய குதிரைச் சிலை? நான் உண்மையான குதிரை என்றே நிணைத்து ஏமாந்துவிட்டேன்-
என்றான் அகிலன். இதென்ன சிறப்பு ? யானை, புலி சிற்பங்கள் எல்லாம் உள்ளே இருக்கின்றன. இன்னும் அழகாக இருக்கும். வா, நாம் போய்ப் பார்க்கலாம் என அழைத்தான் பொன்னன்.


7. கீழ்க்காணும் குறளில் அமைந்துள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்."

விடை:

எதுகை   - இதனை , அதனை  - த 

மோனை
 
இதனை , இதனால், - இ
இவன் முடிக்கும்

அதனை, அவன் கண்  - அ



8. உரைப்பகுதி உணர்த்தும் கருத்துக்கேற்ற குறளினைத் தெரிவுசெய்க.

பேரறிஞர் அண்ணா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அங்கு நிகழும் விவாதங்களில் கலந்துகொண்டு தன் கருத்தினைச் சிறப்பாக எடுத்துரைப்பது வழக்கம். சொல்நயமும் பொருள்நயமும் மிகுந்து எவர் மனத்தையும் புண்படுத்தாமல்
சரியானதை அழகாகச் சுட்டிக்காட்டும் அவரின் பண்பட்ட சொல்லாற்றலை
எதிர்க்கட்சியினரும் போற்றினர். கேளாத பிற உறுப்பினரும் கேட்க விரும்பினர்.

அ) சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து.

ஆ) அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்து தூய்மை யவர்.

இ ) கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

விடை:

இ) கேட்டாப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

**********************    ******************

வாழ்த்துகள் மாணவச் செல்வங்களே !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர், மதுரை.





Post a Comment

0 Comments