பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - உயிரின் ஓசை - காற்றே வா - கவிதைப்பேழை - பாரதியார் - எழுத்து & காட்சிப்பதிவு விளக்கம் - 10 TAMIL IYAL 2 - KAATRE VAA

 


                 பத்தாம் வகுப்பு - தமிழ்

                        இயல் இரண்டு

                இயற்கை, சுற்றுச்சூழல்

                            உயிரின் ஓசை

               கவிதைப் பேழை - காற்றே வா 



**********************  *********************

               வணக்கம் மாணவ நண்பர்களே ! நாம் பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் இயல் 1 - அதுத ஊற்று -  மொழி  என்ற தலைப்பில் அமைந்த அனைத்துப்  பகுதிகளையும் வரிவடிவத்திலும் , காட்சிப் பகுதியிலும் நாம் படித்து முடித்தோம். இன்று முதல் இயல் 2 இயற்கை , சுற்றுச்சூழல் பற்றி உயிரின் ஓசை என்ற தலைப்பில் அமைந்த பாடப்பகுதிகளை நாம் படிக்க இருக்கின்றோம்.  இந்தப் பகுதியை படித்தலுக்கான நோக்கம் என்ன என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்வோம்.

கற்றல் நோக்கங்கள்


* காற்று மாசுபாடு குறித்துக் கலந்துரையாடி      விழிப்புணர்வு பெறுதல்.

* இயற்கை ஆற்றல்களை அனுபவித்துப்             போற்றும் உணர்வு பெறுதல்.

*குளிர்கால வாழ்வு செய்யுளில்     காட்சிப்படுத்தப்பட்டுள்ள நுட்பத்தினையும் அதன்மொழிப் பயன்பாட்டுத் திறத்தினையும்  படித்துச் சுவைத்தல்.

* கதை நிகழ்வுகளைச் சுவையுடன் படிக்கவும்    அது போன்ற படைப்புகளை உருவாக்கவும்      முனைதல்.

*தொகைநிலைகளின் தன்மைக்கேற்பத்   தொடர்களைப் புரிந்து கொண்டு  பயன்படுத்துதல்.

*எண்ணங்களை விவரித்தும் வருணித்தும்        எழுதுதல்.

                          நண்பர்களே ! நாம் இப்போது கற்றல் நோக்கங்கள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொண்டோம். 

இயற்கையை நேசிப்போம் !
இயன்றதை யாசிப்போம் ! 

*************************   ******************

         இரண்டாவது இயலில் நாம் முதலாகப் பாரக்க இருக்கும் பாடப்பகுதி கவிதைப்பேழையாக அமைந்துள்ள ' காற்றே வா ' ஆகும். ஓர் அற்புதமான வசன கவிதை. மகாகவி பாரதி எழுதிய கவிதை. கவிதைக்குச் செல்லும் முன் இயற்கை என்றால் என்ன என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

         இயற்கை , சுற்றுச்சூழல் என்று நாம் இப்போது பேசத்தொடங்கி இருக்கிறோம் . தற்போதுதான் ஜூன் 5 உலகச்சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடி முடித்திருக்கின்றோம். நமது பிறந்த நாளின் போது அவசியம் ஒரு மரக்கன்றாவது நடுவேன் என்ற உறுதி மொழியினை உங்களைப் போன்ற மாணவர்கள் எடுத்துள்ளார்கள். 

         மனிதனால் உருவாக்கப்படாத , இயல்பாக இருந்த எல்லாமே இயற்கைதான்.நிலம் , நீர் , காற்று , வான் , தீ இவற்றை நாம் ஐம்பெரும் பூதங்கள் என்கிறோம். பூதம் என்றால் பெரியது என்று பொருள். இந்த ஐந்தும் நன்றாக இருந்தால் நாம் நன்றாக இருப்போம். இல்லையென்றால் மனித இனம் மரணத்தை விரைவில் சந்திக்கும்.


                  எனவே , இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதனால்தான் இரண்டாவது இயலாக இப்பகுதி வைக்கப்பட்டுள்ளது. நாம் ஒன்பதாம் வகுப்பில் தண்ணீர் என்ற தலைப்பில் அமைந்த பாடப்பகுதிகளைப் படித்தோமலலவா ?

          நுழையும்முன் என்ற  தலைப்பில் அமைந்த செய்தியினை முதலில் பார்ப்போம்.


                நம்மை எப்போதும் சூழ்ந்திருக்கும் இயற்கையை நாம் என்றேனும் உற்றுப் பார்க்கிறோமா? இருளில் நடந்தாலும் வானத்து விண்மீன்களையும் நம்முடனேயே நடந்துவரும் நிலவையும் கண்டு மகிழ்கிறோமா? காடு, மலை, அருவி, கதிரவன் இவற்றோடு இயைந்ததே இயற்கை வாழ்வு. 'நீரின்றி அமையாது உலகு' என்றாற் போல 'காற்றின்றி அமையாது உலக உயிரியக்கம்' என்பதையே வெவ்வேறு கோணங்களில் காலந்தோறும் கவிஞர்கள் பலரும் பாடிவருகிறார்கள்.

     காற்றின்றி நம்மால் உயிர் வாழ முடியுமா ? இந்தக் கொரனா பெருந்தொற்று காலத்தில் காற்றைத் தேடி , நாம் ஓடி அலைந்ததை மறக்க முடியுமா ?

          இக்கவிதையை இயற்றிய ஆசியர் யார்னு பார்த்தோம் ? ஆம் ! பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வந்த மாகவிஞன் . அவன்தான் பாரதி.  பாரதி சுதந்திரப் போராட்டத்தை மட்டும் பாடிய கவிஞன் அல்லன். முதன் முதலில் சுற்றுச்சூழல் காக்கவும் பாடிய கவிஞன்.  ' காணி நிலம் வேண்டும் ' என்று அவன் பராசக்தியிடம் வேண்டுவன பற்றி நாம் ஏற்கனவே படித்தோம் அல்லவா ?  பாரதியைப் பற்றி நூல்வெளி பகுதியில் உள்ள செய்தியைக் கண்டு கவிதைக்குள் செல்வோம்.




நூல் வெளி

மகாகவி சுப்பிரமணிய பாரதியார், 'நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா', 'சிந்துக்குத்
தந்தை' என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்; எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர்;
கவிஞர்; கட்டுரையாளர்; கேலிச்சித்திரம்- கருத்துப்படம் போன்றவற்றை
உருவாக்கியவர்; சிறுகதை ஆசிரியர்; இதழாளர்; சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும்,
பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்; குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டையும் பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி என,
குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்; இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின்
ஆசிரியராகப் பணியாற்றியவர். பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார்; இவருடைய
கவிதைத் தொகுப்பிலுள்ள காற்று என்னும் தலைப்பிலான வசனகவிதையின் ஒரு பகுதியே பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது


மாணவர்களே ! இப்போது நாம் பாடலைக் காண்போமா ?



காற்றே, வா.
மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை
மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா;
இலைகளின்மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த
ப்ராண - ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.
காற்றே, வா.
எமது உயிர் - நெருப்பை நீடித்து நின்று நல்லொளி தருமாறு
நன்றாக வீசு.
சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே.
பேய் போல வீசி அதனை மடித்துவிடாதே.
மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம்
நின்று வீசிக் கொண்டிரு,
உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்.
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.
உன்னை வழிபடுகின்றோம்.

************************   *****************

நண்பர்களே ! மேற்கண்ட கவிதைக்கான பொருளை நம்முடைய பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தில் காண்போமா ?





மாணவர்களே ! காட்சிப் பதிவினைப் பார்த்தீர்களா ? எளிமையாகப் புரிந்ததா ? மகிழ்ச்சி.

***********************   *********************

தெரிந்து தெளிவோம்

       உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது. ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும் இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டுள்ளார். இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.


*********************   *********************

பாரதி பற்றிய மேலும் பல சுவையான செய்திகளைத் தெரிந்திட கீழே உள்ள காட்சிப் பதிவைப் பாருங்கள் நண்பர்களே !













வாழ்த்துகள் நண்பர்களே ! 

***************     ************   ************



வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

பார்த்ததற்கும் , படித்ததற்கும் , பகிர்ந்ததற்கும்
மனமார்ந்த நன்றி ! - மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் ,மதுரை - 97861 41410

*************************   *********

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*************************     *****************




Post a Comment

0 Comments