பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - கற்கண்டு - தொகை நிலைத்தொடர்கள் - வேற்றுமைத்தொகை - எழுத்து.& காட்சிப்பதிவு விளக்கம். / 10 TAMIL - EYAL 2 - KARKANDU - THOKAI NILAITHODARKAL - VETRUMAITHOKAI

 

பத்தாம் வகுப்பு - தமிழ்

இயல் 2 - இயற்கை - கற்கண்டு

தொகைநிலைத் தொடர்கள் 

1 ) வேற்றுமைத்தொகை 

******************    **********    ************


       வணக்கம் மாணவ நண்பர்களே !  இன்று நாம் இயல் இரண்டில் கற்கண்டு அதாவது இலக்கணப் பகுதியினைக் காண உள்ளோம். முதல் இயலில் எழுத்து , சொல் பற்றிய செய்திகளைக்  கண்டோம்.இதில் தொகைநிலைத்தொடர் என்றால் என்ன ? அவை எத்தனை வகைப்படும் ? ஒவ்வொன்றையும் விரிவான விளக்கத்தோடும் , நம்முடைய பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தையும் நாம் காண உள்ளோம்.

     

சொற்றொடர்

சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள்தருவது "சொற்றொடர்" அல்லது "தொடர்" எனப்படும்.

எ.கா. நீர் பருகினான், வெண்சங்கு ஊதினான்.

தொகைநிலைத் தொடர்

                     பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும்  பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அதனைத்  தொகைநிலைத்தொடர் என்று கூறுவர்.

எ.கா :  கரும்பு தின்றான்.

                மேற்காண்ட தொடர் கரும்பைத் தின்றான் என்னும் பொருளை உணர்த்துகிறது.

                இத்தொடரில் உள்ள இரண்டு சொற்களுக்குநடுவில் ஐ என்னும் உருபு மறைந்து நின்று, அப்பொருளைத் தருகிறது. எனவே, இதுதொகைநிலைத் தொடர் எனப்படும்.


            தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும்.

1)  வேற்றுமைத்தொகை

 2 ) வினைத்தொகை,

3 ) பண்புத் தொகை

4 )  உவமைத்தொகை,

5 ) உம்மைத்தொகை

 6 ) அன்மொழித்தொகை

என்பன ஆகும்.


1) வேற்றுமைத்தொகை

மதுரை சென்றார்

             இத்தொடர் மதுரைக்குச் சென்றார்   என விரிந்து நின்று பொருள் தருகிறது.  கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களுக்கு  இடையில் கு" என்னும் வேற்றுமை உருபு இல்லை. அது தொக்கி நின்று பொருளை உணர்த்துகிறது.

          இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை   உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) ஆகியவற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத்தொகை எனப்படும்.

உருபும் பயனும் உடன்தொக்க தொகை

எ.கா.

தேர்ப்பாகன்

             இத்தொடர் "தேரை ஓட்டும் பாகன்"   என விரிந்து பொருளைஉணர்த்துகிறது.  கொடுக்கப்பட்டுள்ள தேர், பாகன் என்னும் சொற்களுக்கிடையில் "ஐ" என்னும் வேற்றுமை உருபும் "ஓட்டும்" என்னும் பொருளை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன.

        இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை  உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும்  சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும். இதுவும்வேற்றுமைத் தொகையே ஆகும்.

    தமிழ்த்தொண்டு (தமிழுக்குச் செய்யும்

தொண்டு) நான்காம் வேற்றுமை உருபும்

பயனும் உடன்தொக்க தொகை.

*************    *************   *************

    நண்பர்களே ! மேலே கண்ட செய்திகளை இனிய , எளிய விளக்கத்துடன் காட்சிப் பதிவில் காண்போமா ?



***************    ************     ************


வாழ்த்துகள் நண்பர்களே ! 
பார்த்ததற்கும் , பகிர்ந்ததற்கும் நன்றி !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

உங்கள் வாட்சாப் குழுவில் 97861 41410 என்ற எண்ணை இணைத்து அனைவரும் பயன்பெறச்செய்யலாம் ஆசிரிய நண்பர்களே !

**********************    *********************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  *************    *******

Post a Comment

0 Comments