எட்டாம் வகுப்பு - தமிழ் - பயிற்சித்தாள் 19 - இயல் 5 - திருக்குறள் / 8 TAMIL WORKSHEET 19 - QUESTION & ANSWER


எட்டாம் வகுப்பு - தமிழ்

இயல் - 5  - பயிற்சித்தாள் - 19

வாழ்வியல் - திருக்குறள்




********************    *********************


 1. 'முருகன் சாலையோரம் நின்ற மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றினான்.

இதைப்பார்த்த தலைமையாசிரியர் பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றப் பொறுப்பாளராக

அவனைத் தேர்வுசெய்தார்'. இவ்வுரைப்பகுதிக்குப் பொருத்தமான திருக்குறளைத் தெரிவுசெய்க.

அ) இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்

ஆ) செய்வானை நாடி வினைநாடிக்காலத்தோடு

எய்த உணர்ந்து செயல்.

இ) இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து

அதனை அவன்கண் விடல்.

ஈ) கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்

சொல்தெரிதல் வல்லார் அகத்து.

விடை:

இ) இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து

அதனை அவன்கண் விடல்.


2. சேர்த்தெழுதுக.


அ) என்று+உரைக்கும் = என்றுரைக்கும்

ஆ) கற்று + அறிந்தார் = கற்றறிந்தார்


3. பொருத்துக.

                                                விடை

அ) கொடுஞ்சொல்  - கொடுமை +சொல்

ஆ) சொல்லாற்றல் - சொல் +ஆற்றல்

இ) வெல்லும்சொல் - வெல்லும் + சொல்

ஈ) செயலாற்றும் - செயல் +ஆற்றும்


4. பொருந்தாததைத் தெரிவுசெய்க.


அ) வேந்தர் ஆ) மன்னன்

இ) அரசர்    ஈ) குடிமக்கள்


விடை:  ஈ) குடிமக்கள்


5. கோடிட்ட இடங்களை நிரப்புக.


கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க்

கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்.


6. கீழ்க்காணும் தொடரில் உரிய நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக.

கண்ணோடாது என்பது நடுவுநிலையில் நிற்பது என்று பொருள்படும்

விடை:

கண்ணோடாது என்பது ,  ' நடுவுநிலையில் ' நிற்பது என்று பொருள்படும்.


7. உரைப்பகுதி உணர்த்தும் திருக்குறளைக் குறிப்பிடுக.

குழலினி பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி. அவளுக்கு நூலகத்தில் சென்று
புத்தகங்களைப் படிப்பது பிடிக்கும். ஆசிரியர்கள், பள்ளியின் இலக்கிய மன்ற
விழாவிற்கு வருகைபுரிந்த தமிழறிஞரிடம், குழலினியை அறிமுகம் செய்து வைத்தார்கள். குழலினி, இலக்கிய மன்ற விழாவில் தான் படித்த புத்தகங்களில் தன்னைக் கவர்ந்த புத்தகம் குறித்து உரையாற்றினாள். தமிழறிஞர் குழலினியைப்
பாராட்டி புத்தகங்களைப் பரிசாக வழங்கினார்.

அ) அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்து தூய்மை யவர்.

ஆ) இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச்செயின்.

இ) ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.

ஈ ) கற்றுஅறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.

விடை:

ஈ ) கற்றுஅறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.


8. தொடருக்கு ஏற்ற வினா அமைக்க.
குடிமக்கள் குற்றம் செய்யாதவாறு தடுப்பது அரசருடைய கடமையாகும்.

வினா: அரசனுடைய கடமை யாது ?

9.) 'பெருமை' - என்னும் சொல்லின் எதிர்ச்சொல்லைக் கொண்டு தொடர் ஒன்றனை அமைக்க.

விடை:  பிறருக்குத் துன்பம் விளைவித்தல் சிறுமையான பண்பாகும்.

 
10. அறிஞர் நிறைந்த அவையில்
நம் கருத்தைப் பிழையில்லாமல் எவ்வாறு
எடுத்துரைக்கலாம் என்பது பற்றிக் கூறும் திருக்குறளை எழுதுக.

விடை:


அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்து தூய்மை யவர்.



வாழ்த்துகள் மாணவச் செல்வங்களே !

மு.மகேந்திர பாபு ,  தமிழாசிரியர் , மதுரை.




Post a Comment

0 Comments