ஓவியம் வரையலாம் வாங்க ! - பகுதி - 11 - அழகாய் வரையலாம் அன்னாசிப் பழம் - குழந்தைகளின் ஓவியத்திறனை ஊக்குவிக்கும் தொடர்.

 

ஓவியம் வரையலாம் வாங்க !

பகுதி - 11

அழகாக வரையலாம் அன்னாசிப்பழம் !

வழங்குபவர்.திருமதி.செ.இலட்சுமிப்ரதிபா , 

ஓவிய ஆசிரியை , மதுரை.


*********************    **********************

       வணக்கம். செல்லக் குழந்தைகளே ! இன்று நாம் ஓவியம் வரையலாம் வாங்க ! பகுதி - 11 ல் இன்று நாம் வரையப்போகிற  படம் ஒரு அற்புதமான பழம். 

      நாம் ஏற்கனவே ஆப்பிள் பழம் எப்படி வரைவது என்பதைப்பற்றிப் பார்த்தோம்.இன்று அன்னாசிப் பழம் ( Pine Apple ) எப்படி வரைவது என்று நாம் பார்ப்போம்.

பழங்களில் விலை குறைந்ததும் , அதிக நன்மைகளைத் தரக்கூடிய ஒரு பழம் அன்னாசிப் பழம். செதில்கள் போன்ற சொரசொரப்பான மேல் தோல் , சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறச் சதைப்பகுதியையும் உடையது.  அன்னாசிபெ பழத்தில் வைட்டமின் ஏ , பி , சி உயிர்ச்சத்துகள் உள்ளன.  நிறைய மருத்துவக் குணங்கள் இதற்கு ்உண்டு, ஒற்றைத் தலைவலி எனப்படும் ஒருபக்கத் தலைவலியை குணப்படுத்தும் சக்தி அன்னாசிப்பழத்திற்கு உண்டு. தொண்டைப் புண்ணைக் குணமாக்கும்

         மிகக்குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய ஒரு.பழம். சரி. இப்போ படம் எப்படி வரைவது என்று பார்ப்போமா ?

படம் : 1



படம் : 2



படம் : 3




படம்  :4  


என்ன குழந்தைகளே ! அன்னாசிப் பழம் எவ்ளோ அழகாகச் , சுவையாக உள்ளது, நீங்களும் வரைந்து     மகிழுங்கள்.அப்பாவை     வாங்கி வரச்செய்து சுவைத்து மகிழுங்கள். நாளை மற்றுமோர் ஓவியத்தில் சந்திப்போம். நன்றி.

**********************   **********************


வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.

எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை. 97861 41410

**********************   **********************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம் 

உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*************************     ***************

Post a Comment

0 Comments