பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - மொழி - தமிழ்ச்சொல் வளம் - பகுதி - 2- கூடுதல் வினாக்களும் , விடைகளும்.

 

பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1

மொழி - உரைநடை உலகம்

தமிழ்ச்சொல் வளம் 

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்




வணக்கம் மாணவ நண்பர்களே ! நாம் கடந்த பதிவில் தமிழ்ச்சொல் வளம் பாடத்தை ' பாடமே படமாக ! என்று தலைப்பிட்டுப் பதிவிட்டோம். அதில் பாடப்பகுதி வினா விடைகளும் , பாடம் முழுமைக்குமான பகுதி காட்சி வடிவத்திலும் பதிவிட்டோம். அதைப்பார்த்திருப்பீர்கள். இல்லையெனில் அதைப் பாருங்கள். 


இப்பகுதியில் பாடப்பகுதியில் உள்ள கூடுதல் வினாக்களும் அதற்கான விடைகளையும் இங்கே காணலாம். குறிப்பாகப் பாடத்தில் உள்ள வண்ண எழுத்துகளில் உள்ள செய்திகளை நாம் நன்கு படிக்க வேண்டும்.இது வருமா ? அது வருமா என்று எண்ணாமல் பாடத்தில் உள்ள அனைத்துச் செய்திகளையும் உள்வாங்கிக்கொள்வது நமக்கு 100 / 100 மதிப்பெண் பெற துணை செய்யும். 


வாழ்த்துகள் . 


கூடுதல் வினாக்கள்

1 ) பிற திராவிட மொழிகளினின்றும் தமிழ்மொழி எவ்விதம் வேறுபட்டுள்ளது?

             தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒருபொருட் பலசொல்:வரிசைகள், மற்ற திராவிட மொழிகளில் இல்லை.

2 ) தமிழ்ச் சொற்கள் பற்றிய கால்டுவெல்லின் கருத்து யாது?

“தமிழில்மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்கு உரியனவாய்க் கருதப்படும் சொற்களும் தமிழில் உள்ளன” என்கிறார் கால்டுவெல்.



3 ) ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள் நான்கினை எழுதுக.

அ) தாள் : நெல், கேழ்வரகு, முதலியவற்றின் அடி

ஆ) தண்டு : கீரை, வாழை முதலியவற்றின் அடி

இ) கோல் : நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி

ஈ) தூறு : குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி

4 ) தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கும் சொற்களை எழுதுக.

கவை, கொம்பு அல்லது கொப்பு, கிளை, சினை, போத்து, குச்சு, இணுக்கு என்பன, தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கும் சொற்களாகும்.

5 ) காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் சொற்களை எழுதுக.

அ) சுள்ளி : காய்ந்த குச்சி
ஆ) விறகு : காய்ந்த சிறுகிளை
இ) வெங்கழி : காய்ந்த கழி
ஈ) கட்டை : காய்ந்த கொம்பும் கவையும் அடியும்.

6 ) தாவரங்களின் இலைவகைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?

      இலை, தாள், தோகை, ஓலை, சண்டு, சருகு முதலியன, தாவரங்களின் இலைவகைகளைக் குறிக்கும்
சொற்கள்.


7 ) தாவரத்தின் நுனிப்பகுதிகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?

துளிர் அல்லது தளிர், முறி அல்லது கொழுந்து, குருத்து, கொழுந்தாடை ஆகியன, தாவரத்தின்
நுனிப்பகுதிகளைக் குறிக்கும் சொற்கள்.


8 ) கோதுமையின் வகைகள் யாவை?
சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை முதலிய கோதுமையின் சில வகைகளாகும்.

9 )  தமிழ்நாட்டு நெல் வகைகளைக் குறிப்பிடுக.

செந்நெல், வெண்ணெல், கார்நெல், சம்பா, மட்டை, கார் என்றும் சம்பாவில்மட்டுமே ஆவிரம் பூச்சம்பா,
ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச்சம்பா, குதிரைவாலிச் சம்பா, சிறுமணிச் சம்பா, சீரகச் சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன.


10.) ஓர் இனத்தாரின் நாகரிகத்தை எதன்வழி அறியலாம்?

திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது மொழியாதலின், அதுவே ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கும் சிறந்த வழியாகும்.


11). பண்டைத் தமிழ்மக்களின் தனிப்பெரும் நாகரிகத்திற்குக் காரணம் யாது?

      ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே, அந்நாட்டு மக்களின் அறிவொழுக்கங்களும் அமைந்திருக்கும்.
நாட்டின் தனிப்பெரும் வளத்தினாலேயே, பண்டைத் தமிழ்மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக   இருந்திருக்கின்றனர்.

12. பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?

அரும்பு, போது, மலர் (அலர்), வீ, செம்மல், ஆகியன, பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள்.

13. தாவரத்தின் பிஞ்சுவகைகளை எச்சொற்களால் குறிப்பிடுகிறோம்?

      பூம்பிஞ்சு, பிஞ்சு, வடு, மூக, கவ்வை, குரும்பை, முட்டுக்குரும்பை, இளநீர், நுழாய், கருக்கல், கச்சல் ஆகிய சொற்களால், தாவரத்தின் பிஞ்சுவகைகள் குறிக்கப்படுகின்றன.

14) தாவரங்களின் குலைவகைகளைக் குறிப்பதற்கான சொற்களை எழுதுக.

    கொத்து, குலை, தாறு, கதிர், அலகு அல்லது குரல், சீப்பு ஆகியன, தாவரத்தின் குலைவகைகளைக்
குறிக்கும் சொற்கள்.


கூடுதல்  சிறு வினாக்கள்


1 ) இளங்குமரனார் - சிறு குறிப்பு வரைக.

தமிழாசிரியர், நூலாக்கல் பணிகளை விரும்பிச் செய்பவர்; சொல்லாட்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார். திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலை ஒன்றை அமைத்திருப்பவர்.
தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர். தமிழ்வழித் திருமணங்களை
நடத்தி வருபவர். திரு. வி. க. போல, விழிகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கொண்டவர்.பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர்.


2 ) இளங்குமரனாரின் தமிழ்ப்பணியைத் தரமுயர்த்திய நல்முத்துகள் யாவை?

     பற்பல நூல்களை இளங்குமரனார் எழுதியிருந்தாலும், இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திரட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம் முதலியன, இவர்தம்
தமிழ்ப்பணியைத் தரமுயர்த்திய நல்முத்துகள்.


3 ) தானியங்களுக்குத் தமிழகத்தில் வழங்கும் சொற்கள் குறித்து விளக்குக

கூலம் : நெல், புல் (கம்பு) முதலிய தானியங்கள்.

பயறு : அவரை, உளுந்து முதலியன.
: வேர்க்கடலை, கொண்டைக்கடலை முதலியவை.

விதை : கத்தரி, மிளகாய் முதலியவற்றின் வித்து.

முத்து : வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து.

கொட்டை : மா, பனை முதலியவற்றின் வித்து.

தேங்காய் : தென்னையின் வித்து

முதிரை : அவரை, துவரை முதலிய பயறுகள்.

4 ) கெட்டுப்போன காய்க்கும் கனிக்கும் தமிழகத்தில் வழங்கப்படும் சொற்கள் குறித்து விளக்குக.

சூம்பல் : நுனியில் கருங்கிய காய்.
சுவியம் சுருங்கிய பழம

சொத்தை : புழு பூச்சி அரித்த காய் அல்லது கனி. வெம்பல் : சூட்டினால் பழுத்த பிஞ்சு.

அளியல் : குளுகுளுத்த பழம்
அழுகல் : குளுகுளுத்து நாறிய பழம் 



கூடுதல் 1 மதிப்பெண்வினாக்கள்

1 )  'நாடும் மொழியும் நம்மிரு கண்கள்" என்றவர்

அ) கவிமணி
ஆ ) கம்பர்
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்

விடை : இ) பாரதியார்

2. "தமிழில் மட்டுமன்றிப் பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில்உள" என்று கூறியவர்

அ) ஜி. யு. போப்
ஆ) கால்டுவெல் 
இ) வீரமாமுனிவர் 
ஈ) உ. வே. சா.

விடை : ஆ) கால்டுவெல்


3. ‘திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்' என்ற நூலை எழுதியவர்

அ) கால்டுவெல்
ஆ) வீரமாமுனிவர் 
இ) உ. வே. சா. 
ஈ) ஜி. யு. போப்

விடை : அ) கால்டுவெல்

4. நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி, குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது.

அ) தாள், தண்டு
ஆ) தண்டு, கோல்
இ) கோல், தூறு
ஈ) தாள், தூறு

விடை ! ஈ) தாள், தூறு

5. கூற்று 1 : “திருவள்ளுவர் தவச்சாலை” அமைந்துள்ள மாவட்டம் - திருச்சிராப்பள்ளி

கூற்று 2 : உலகில் முதன்முதலாக ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய நாடு - வெனிசுலா

அ) கூற்று 1-ம் 2 -ம் சரி
ஆ) கூற்று 1 -ம் 2 -ம் தவறு
இ) கூற்று 1 - சரி 2 - தவறு
ஈ) கூற்று - 1 தவறு 2 - சரி

விடை : இ) கூற்று 1 - சரி 2 - தவறு

8. இளங்குமரனின் தமிழ்ப்பணியைத் தரமுயர்த்திய நல்முத்து

அ) காக்கைப் பாடினிய உரை
ஆ) மலைக்கள்ளன்
இ) சந்திரகாந்தம்
ஈ) நொடிவினா

விடை : அ) காக்கைப் பாடினிய உரை

9. கரும்பின் நுனிப்பகுதியைக் குறிக்கும் சொல்

அ) சினை
ஆ) கொழுதாடை 
இ) அரும்பு
ஈ) கவை

விடை : ஆ) கொழுதாடை

10 ) ஒரு --------பொதுமக்களாலும் அதன் ---------=---- புல மக்களாலும் அமையப்பெறும்.

அ) மொழி, இலக்கியம்
ஆ) சாதி, பிரிவினை
இ) தெய்வம், மொழி
ஈ) இலக்கியம், மொழி

விடை : அ) மொழி, இலக்கியம்

11. ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே, அந்நாட்டு மக்களின் --------------------
அமைந்திருக்கும்.

அ) பண்பாடு
ஆ) கலாச்சாரம்
இ) அறிவொழுக்கங்கள்
ஈ) பக்தி

விடை : இ) அறிவொழுக்கங்கள்

12. திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது --------
ஆகும்.

அ) சிரிப்பு
ஆ) நாகரிகம்
இ) உடை
ஈ ) மொழி

விடை : ஈ) மொழி

13, “சொல்லாய்வுக் கட்டுரைகள்" என்னும் நூலின் ஆசிரியர்

அ) இளங்குமரனார்
ஆ) தேவநேயப் பாவாணர்
இ) தமிழன்பன்
ஈ) அறவாணன்

விடை : ஆ) தேவநேயப் பாவாணர்


14. லிசுபனில் 1554-இல் முதன்முதலாகத் தமிழ்மொழியில் வெளியான நூல்

அ ) கார்டிலா
ஆ) காஸ்டினா
இ ) பைபிள்
ஈ) ஒரு மனிதன் பிறந்தான்

விடை : அ) கார்டிலா

16. நெல், கத்திரி முதலியவற்றின் இளநிலையை ----------  என்பர்.

அ) நாற்று
ஆ) கன்று
இ) குருத்து
ஈ) பிள்ளை

விடை : அ) நாற்று

17. புளி, காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து, என ------------
 அழைக்கப்படுகிறது.
அ ) கூலம்
ஆ) காழ்
இ) முதிரை
ஈ) முத்து

விடை : ஆ) காழ்

18. வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமியை ------------  என்பர்.

அ) தொலி
ஆ) தோல்
இ) கொம்மை
ஈ) குடுக்கை

விடை : இ) கொம்மை

19. மலேசியாவில் நடைபெற்ற முதல் உலக மாநாடு, எம்மொழிக்காக நடத்தப்பட்டது?

அ) ஹீப்ருமொழி ஆ) கொரியமொழி 
இ) இலத்தீன்மொழி ஈ) தமிழ்மொழி

விடை : ஈ) தமிழ்மொழி

20. வரகு, காடைக்கண்ணி, குதிரைவாலி முதலிய தானியவகைகளை -------------
என அழைப்பர்.

அ) தானியம
ஆ) சிறுகூலங்கள்
இ) சம்பா
ஈ ) கார்நெல்

விடை : ஆ) சிறுகூலங்கள்

*********************  *******************

கற்பவை கற்றபின்

1 ) பின்வரும் நிலவகைகளின் பெயர்களுக்கான காரணங்களைக் கேட்டறிந்து வகுப்பறையில் பகிர்க.

( தரிசு, சிவல், கரிசல், முரம்பு, புறம்போக்கு, சுவல், அவல். )

தரிசு  -  பயிர் செய்யப்படாத நிலம்
சிவல்     -செந்நிலம்
கரிசல்      -  கரியநிலம்
முரம்பு -பருக்கைக் கல்லுள்ள மேட்டுநிலம்
புறம்போக்கு ஊர்ப்புறத்தில் குடிகள் வாழ்தலில்லாத நிலப்பகுதி

சுவல்  -மேடான பகுதி
அவல்    - பள்ளமான நிலப்பகுதி


2 ) ஒருபொருள் தரும் பலசொற்களைப் பட்டியலிடுக.

எ - கா : சொல்லுதல் - பேசுதல், விளம்புதல், செப்புதல், உரைத்தல், கூறுதல், இயம்புதல், மொழிதல்.

அ) அணிதல் அலங்கரித்தல், சூடுதல், தரித்தல், புனைதல், பூணுதல், மிலைதல்.

ஆ) ஆசிரியன் - உபாத்தியாயன், ஆசான், தேசிகன், குரவன்.

இ) அருள் இரக்கம், கருணை, தயவு, கிருபை, அபயம்.

ஈ) அறிவு உணர்வு, உரம், ஞானம், மதி, மேதை, விவேகம்.

***********************      *******************

மு.மகேந்திர பாபு .  தமிழாசிரியர் , மதுரை.
97861 41410





Post a Comment

0 Comments