எட்டாம் வகுப்பு - தமிழ் - பயிற்சித்தாள் 9 - 8th Tamil Worksheet 9 Question & Answer - இயல் 3 - கவிதைப்பேழை - வருமுன் காப்போம் - வினா & விடை

 வணக்கம் ஆசிரிய நண்பர்களே ! மாணவத் தம்பிகளே ! தமிழ்நாடு அரசு - பயிற்சிப் புத்தகம் - தமிழ்  - பயிற்சித்தாள் 9 - இயல் 3 - 

கவிதைப்பேழை - வருமுன் காப்போம்.

**********   *********   *********   ***********

1.கீழ்க்காணும் பாடலடியில் விடுபட்ட சொற்களை நிரப்புக.

உடலின் உறுதி உடையவரே

உலகின் இன்பம் உடையவராம்.

********* *********  **********   ******  ******

2 - பொருத்துக.

விடை

அ) பேணுதல் -  பாதுகாத்தல்

ஆ) சுண்ட   -   நன்கு

இ) மட்டு  -  அளவு

ஈ) வையம்  -  உலகம்

************    ***************   **************

3. கீழ்க்காணும் பாடலடிகளில் அடிக்கோடிட்ட சொற்கள் உணர்த்தும் பொருளை எழுதுக.

காலை மாலை உலாவிநிதம்

காற்று வாங்கி வருவோரின்

காலைத் தொட்டுக் கும்பிட்டுக்

காலம் ஓடிப் போவானே.

விடை - காலை - காலைப் பொழுது

காலைத்  - காலினைத் தொட்டு

**********    **********   *********   **********

4. மாறியுள்ள பாடலடிகளை முறைப்படுத்தி எழுதுக.

நித்தம் நித்தம் பேணுவையேல்

சுத்தம் உள்ள இடமெங்கும்

நீண்ட ஆயுள் பெறுவாயே

சுகமும் உண்டு நீயதனை.
விடை

சுத்தம் உள்ள இடமெங்கும்
சுகம் உண்டு நீயதனை
நித்தம் நித்தம் பேணுவையேல்
நீண்ட ஆயுள் பெறுவாயே!

********   ********    **********      ************

5 ) கீழ்க்காணும் பாடலடிகளின் பொருளை உன் சொந்த நடையில் எழுதுக.

கூழை யேநீ குடித்தாலும்
குளித்த பிறகு குடியப்பா
ஏழை யேநீ ஆனாலும்,
இரவில் நன்றாய் உறங்கப்பா.

விடை

நாம் உண்பது கூழாகவே இருந்தாலும் தினமும் குளித்தபின் அதைக் குடிக்க வேண்டும். பொருளாதாரத்தில் நாம் ஏழையாக இருந்தாலும் இரவில் நன்கு உறங்க வேண்டும்.

********   **************   ****************

6. பின்வரும் படங்கள் உணர்த்தும் கருத்தினை இரு மணித்துளி பேசுவதற்கேற்ப உரை
ஒன்றனை எழுதுக.

விடை - மாணவர்களே ! பயிற்சிப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு படங்களையும் உற்று நோக்கி , உங்கள் மனதில் படும் கருத்துகளை பேசுவதற்கேற்ப தயார் செய்யுங்கள்.

************    ***************    *************

7. பின்வரும் பாடலடிகளில் பயின்றுவந்துள்ள மோனை, எதுகை, இயைபு நயங்களை
எடுத்து எழுதுக.

அருமை உடலின் நலமெல்லாம்
அடையும் வழிகள் அறிவாயே
வருமுன் நோயைக் காப்பாயே
வையம் புகழ வாழ்வாயே.

விடை

மோனை

அருமை - அடையும் - அ = மோனை

அருமை - வருமுன் - ரு  = எதுகை

இயைபு 

அறிவாயே
காப்பாயே
வாழ்வாயே.

**************    **********    **************

8. பாடலடிகளைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

தூய காற்றும் நன்னீரும்
சுண்டப் பசித்த பின் உணவும்
நோயை ஓட்டி விடும் அப்பா
நூறு வயதும் தரும் அப்பா,

வினாக்கள்

அ. பிரித்து எழுதுக 

நன்னீர் = நன்மை+நீர்

ஆ. நோயை ஓட்டுவன யாவை ?

தூயகாற்றும், நல்ல நீர் பசித்தான் உணவு.

************    ***************  **************

9 ) கீழ்க்காணும் பத்தியைப் படித்து விடையளிப்பதற்கேற்ற நான்கு வினாக்களை
உருவாக்குக.

நூல் வெளி

கவிமணி எனப் போற்றப்படும் தேசிக விநாயகனார், குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்; முப்பத்தாறு ஆண்டுகள்ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர், ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை உள்ளிட்ட பல கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு
நூலையும் படைத்துள்ளார்.
மலரும் மாலையும் என்னும் நூலிலிருந்து ஒரு பாடல் இங்கு  தரப்பட்டுள்ளது.

வினா1 : கவிமணி) எனப் போற்றப்படும் கவிஞர் யார்?

வினா 2 கவிமணி

எங்கு பிறந்தார்?

வினா 3: கவிமணி எழுதிய நூல்கள் சிலவற்றை எழுதுக.
--
வினா 4 : பாடமாக அமைந்த பகுதி எந்த நூலிலிருந்து தரப்பட்டுள்ளது?

*******   **********     ********   ************

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
97861 41410

வீடியோவாக மேல உள்ள வினாக்களுக்கு விடைகாண Green Tamil என்ற You Tube சேனலைப் பாருங்கள்  . நண்பர்களுக்கும் பகிருங்கள்.




*******   ********   ********  ********  *******

Post a Comment

0 Comments