வணக்கம் அன்பு நண்பர்களே ! விடுமுறையில் விருப்பத்தோடு நம் அன்னைத் தமிழை அகம் மகிழ்ந்து கற்போம் !
ஆக்கம் - மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
************ ********** ******** *********
எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் 2
பயிற்சித்தாள் - 7
வாழ்வியல் - திருக்குறள்
*********** ********** ********** ***********
1. ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி' என்னும் குறளடியிலுள்ள 'அணி' என்றசொல் உணர்த்தும் பொருளைத் தெரிவுசெய்க.
அ) பொறுப்பு ஆ) அழகு இ) செயல் ஈ) அணிதல்
விடை: அழகு
********** ********** ********** *********
2. கோடிட்ட இடங்களை நிரப்புக.
அ) கணை ( கொடிது ) யாழ்கோடு (செவ்விது) ஆங்குஅன்ன
வினைபடு -( பாலால் ) கொளல்.
ஆ) தன்குற்றம்... ( நீக்கிப் ) ... பிறர்குற்றம்... காண்கிற்பின்
என்குற்றம் ஆகும்.--( இறைக்கு )
*********** *********** ********** ********
3. சரியா? தவறா? என எழுதுக.
அ) நேராக இருந்தாலும் அம்பு கொடியதாக இருக்கிறது.
(சரி )
ஆ) வளைவுடன் இருப்பினும் யாழின் கொம்பு இனிமையைத் தருகிறது. (சரி) )
********* ********** ********* ***********
4. குறளினைச் சீர்பிரித்து எழுதுக.
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.
விடை- தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.
********* *********** ********** **********
5. சொல்லுக்கான பொருளைத் தொடரில் அமைத்து எழுதுக
அ) தக்கார் - நடுவு நிலைமை உடையவர்
விடை - நீதி வழங்கபவர் நடுவுநிலைமை உடையவராக இருக்க வேண்டும்.
ஆ) என்ளற்க - இகழ்தல் கூடாது
விடை - உருவத்தைக் கண்டு யாரையும் இகழ்தல் கூடாது.
********** *********** ********* *********
6. முறைமாறியுள்ள திருக்குறள் சீர்களை முறைப்படுத்தி எழுதுக.
"கால்வல் கடல்ஓடா நெடுந்தேர் கடல்ஓடும்
ஓடாநிலத்து நாவாயும்"
விடை - கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் நடா நிலத்து.
******** ********** *********** **********
7. கீழ்க்காணும் குறளில் மாறி இடம் பெற்றுள்ள மரபுத்தொடர் யாது?
"வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந்தற்று"
விடை- பசுத்தோல் போர்த்திய புலி.
********* ********** ********* *********
8. குறளில் பயின்றுவரும் எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.
"உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
கார்அனையர்கல்லாதவர்'.
விடை - உளர் , களர் - ள - எதுகை
********** *********** ******** ********
9. குறளில் பயின்றுவந்துள்ள அணியைப் பொருளுடன் பொருத்தி எழுதுக.
"சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோருக்கு அணி
விடை: உவமை அணி)
குறளின் பொருள் : இரு புறமும் சமமாக நிற்கும் தராசைப்போல்ஒரு சார்பாக நீதி வழங்காமை சான்றோர்க்கு அணியாகும்.
அணிப் பொருத்தம் : சமன் செய்து சீர்தூக்கும் கோல் - உவமை
ஒரு பால் கோடாமை - உவமேயம
போல் - உவமஉருப
உவமை, உவமேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வருவது உவமை அணி ஆகும்.
0 Comments