ஏழாம் வகுப்பு - சமூக அறிவியல் - பயிற்சித்தாள் 1 பருவம் 1 - அலகு 1 - இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

 தமிழ்நாடு  அரசு - பயிற்சிப் புத்தகம்  - வகுப்பு - 7 , சமூக அறிவியல் 

பருவம் 1  - அலகு 1

பயிற்சித்தாள் -1 -  வினா விடைகள் 




இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்.


1.. சரியானவிடையைத்தேர்ந்தெடுக்கவும்.

1. அட்டவணையில் உள்ள ஆதாரங்களில் பொருத்தமானதை எழுது.

திருவாலங்காடு செப்பேடு - பொறிப்புகள்

பிருதிவிராஜ ராசோ - சமயசார்பற்ற இலக்கியங்கள்

ஜிட்டல்  - நாணயங்கள்

மார்கோபோலோ - பயணக் குறிப்பு வழங்கியவர்

சார்மினார் -  நினைவுச் சின்னம்

தாஜ்-உல்-மா-அசிர் - நூல்கள்

இபன்பதூதா - பயணக் குறிப்பு வழங்கியவர்

ஹம்பி  - நினைவுச்சின்னம்

மதுரா விஜயம் - சமய சார்பற்ற இலக்கியம்

கம்பராமாயணம் - சமய இலக்கியம்

அன்பில் செப்பேடு - பொறிப்புகள்

டங்கா - நாணயங்கள்

கீதகோவிந்தம்  - சமய இலக்கியம்

***************      **************        ***********************                ***************

பின்வருவனவற்றை பொருத்தவும்.


3. இலக்கிய ஆதாரங்களை வரையறை மற்றும் எடுத்துக்காட்டுகளுடன் வரிசைப்படுத்தி  காட்டவும் .


விடை

1 ) சுயசரிதை  -    தன்னுடைய வாழ்க்கை பற்றிச்சுயமாக எழுதப்பட்டது - பாபர் எழுதிய பாபர் நாமா 

2  ) வாழ்க்கை வரலாறுகள் - ஒருவர், வேறு
ஒருவரின் வாழ்க்கையைப் பற்றி எழுதுவது.
- அபுல் பாசல்  எழுதிய அக்பர் நாமா

3 ) பயண நூல்கள் - ஒரு பயணியின் வருகை அல்லது அனுபவங்களை எழுதுவது.

************            *********************  *******************              *************

III. சரியான இணையைக் கண்டறியவும்

4. அ) மொராக்கோ  -  நிக்கோலோகோண்டி
ஆ) இத்தாலி  -   அப்துர் ரஸாக்
இ) வெனிஸ்   -   மார்கோபோலோ
ஈ) ஹீரட்  -  இபன்பதூதா

விடை - இ ) வெனிஸ் - மார்கோ போலோ

**********                ********************                ********************                ********

5. கீழ்க்காணும் எழுத்துகளை வரிசைப்படுத்தி சோழர்களால் பரிசளிக்கப்பட்ட நிலங்களை கண்டுபிடிக்கவும்.

அ) ளாண்கைவவே - வேளாண்வகை

ஆ) மம்ரபியதேம் - பிரம்மதேயம்

இ) லபோம்கசா - சாலபோகம்

ஈ) வதாதேம்ன - தேவதானம்

உ) ள்ளிபச்சதந்ம் = பள்ளச் சந்தம்

***************      ************       *****************           ******************* 

6. கீழே கொடுக்கப்பட்ட கட்டத்தில் ஆசிரியர்களின் பெயர்களும் அவர்களின் நூல்களும்மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அவைகளை கண்டுபிடித்து பொருத்தவும்.

ஆசிரியர்களின் பெயர்கள்  /    நூல்கள்

1. ஜியா-உத்-பரணி   -  தாரிக்-இ-பெரிஷ்டா 

2. ஜஹாங்கீர்     -  துசுக்-இ-ஜாஹாங்கீரி ..

3. பதானி -  தாரிக்-இ-பதானி 

4 ) மின்கஜ் உஸ் சிராஜ்  - தபகத்-இ-நஸிரி

5. தாஜ்-அசிர்உல்-மாம்   -    ஹசன் நிஜாமி

  6 ) அல்பருனி          -    தாகுயூக்-இ-ஹிந்த் 

7. அபுல் பாசல் - அயினி அக்பர

8. நிஜாமுதீன் அகமத் -  தபகத்-இ-அக்பரி. 


*********************        ******************         ******************         *********

7. கீழே உள்ள படத்தை பார்த்து வினாக்களுக்கு விடையளிக்கவும்  

அ) இப்படத்தை எந்த பெயரில் அழைக்கிறோம் ?

கல்வெட்டு

ஆ) மேற்கூறிய பதிலை வரையறுக்க.

கல்வெட்டு என்பது பாறைகள், கற்கள் கோவில்
சுவர்கள் மீது எழுத்தப்பட்டிருப்பது .

இ) இவ்வகையான படங்கள் கூறுவது என்ன?

பண்டைக்கால வரலாறு பற்றிக் கூறுகிறது .


ஈ) உத்தரமேரூர் கல்வெட்டு  காஞ்சிபுரம் 
மாவட்டத்தில் காணப்படுகிறது. ?

**************    *************      ********************           ***************

8. படத்தைப் பார்த்து பதில் அளிக்கவும்.

அ) இபன்பதூதாபிறந்த நாட்டின் பெயர் என்ன?

மொராக்கோ

ஆ) இவர் எந்த நாட்டிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தார்?

மொராக்கோ


இ) இவர் கருத்தின்படி செல்வம் கொழித்த நாடு எது?

எகிப்து

ஈ) எந்த நாட்டின் வணிகம் ,சாதி,சதி மற்றும் கப்பல்கள் பற்றி இவர் குறிப்பிடுகிறார்?

இந்தியா


உ) மிகச் சிறப்பான நகரமக இருந்து துக்ளக் கினால் பொட்டல்காடாக மற்றப்பட்டநகரம் எது?

டெல்லி

*************            *****************      **********************       ***************

9. நான் யார்?

அ) வெனிஸ் நகரை சேர்ந்த பயணி இவர்.

ஆ) தூத்துக்குடி மாவட்டத்தில் காயல் எனும் பகுதிக்கு இருமுறை வந்தவர் இவர்.

இ) அரேபியாவிலிருந்தும் பாரசீகத்திலிருந்தும் ஆயிரக்கணக்கில் குதிரைகள்
தென்னிந்தியாவில் கடல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டதாக குறிப்பிட்டவர்.இவர்.

ஈ) தமிழ் நாட்டிற்கு 13ஆம் நூற்றாண்டில் பாண்டிய பேரரசுக்கு வந்தவர் இவர்.

விடை

மார்க்கோ போலோ

விடை தயாரிப்பு - திருமதி. இராணி அவர்கள் , ஆசிரியை , அரசு ஆ
தி.ந. மே.நி.பள்ளி .இளமனூர் , மதுரை.

வாழ்த்துகள் நண்பர்களே !

 மு. மகேந்திர பாபு ,   தமிழ் ஆசிரியர் , மதுரை 97861 41410




Post a Comment

0 Comments