TIRUVALLUR DISTRICT
MODEL EXAM QUESTION PAPER- MAY-2021
STD XIII SUBJECT : TAMIL
Marks : 50 10 × 1 = 10
I. பலவுள் தெளிக.
1. இலக்கியத்தையும் மொழியையும் ஒரு சேரப் பேசுகின்ற இலக்கண நூல்
(அ) யாப்பருங்கலங்காரிகை
(ஆ) தண்டியலங்காரம்
(இ) தொல்காப்பியம்
(ஈ) நன்னூல்
2. மீண்டுமந்தப் பழமை நலம் புதுக்குதற்கு கவிஞர் குறிப்பிடும் பழமை நலம்
(க ) பாண்டியரின் சங்கத்தில் கொலு விருந்தது
( உ ) பொதிகையில் தோன்றியது
( ங ) வள்ளல்களைத் தந்தது
(அ) க மட்டும் சரி
(ஆ) க, உ இரண்டும் சரி
(இ) ங மட்டும் சரி
(ஈ) க, ங இரண்டும் சரி
3.தமிழில் திணைப் பாகுபாடு ........ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது .
(அ) பொருட்குறிப்பு
(ஆ) சொற் குறிப்பு
(இ) தொடர்க்குறிப்பு
(ஈ) எழுத்துக் குறிப்பு
4.நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது
(அ) சூரிய ஒளிக்கதிர் (ஆ) மழை மேகங்கள்
(இ) மழைத்துளிகள் (ஈ) நீர் நிலைகள்
5.இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தின் ரூமி குறிப்பிடுவது
(அ) வக்கிரம் (ஆ) அவமானம் (இ) வஞ்சனை (ஈ) இவை அனைத்தும்
6.பொருள் கூறுக :
வெகுளி - சினம் , ஏமம் - பாதுகாப்பு
7.வையகமும், வானகமும் ஆற்றலரிது - எதற்கு ?
(அ) செய்யாமல் செய்த உதவி
(ஆ) பயன் தூக்கார் செய்த உதவி
(இ) தினைத் துணை நன்றி
ஈ ) செய்யந்நன்றி
8. சுரதா நடத்திய கவிதை இதழ்
(அ) இலக்கியம் (ஆ) காவியம் (இ) ஊர்வலம் ஈ) விண்மீன்
9.சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
(அ) வசம்பு (ஆ) மணத்தக்காளி இலைச்சாறு (இ) கடுக்காய்
(ஈ) மாவிலைக்காரி
10.உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் ... இத் தொடர் உணர்த்தும் பண்பு
{அ) நேர்மறைப் பண்பு (ஆ) எதிர்மறைப் பண்பு இ) முரண் பண்பு
ஈ ) இவை அனைத்தும்
II ஏதேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்க 5x2 = 10
1. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.
2. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட , தமிழின் துணை வேண்டும் என்கிறார் ?
3. நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது . விளக்கம் தருக.
4. புக்கில் , தன்மனை சிறு குறிப்பு வரைக.
5. அக்காலத்துக் கல்வி முறையில் மனைப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை ?
6. நிலையாமை குறித்து , சவரி உரைக்கும் கருத்து யாது ?
III எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்க . 3x3= 9
7. சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும்
விளக்குக.
8 . பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக்
குடும்பம் - விளக்கம் தருக
9. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் எவை ?
10. சடாயுவைத் தந்தையாக ஏற்று , இராமன் ஆற்றிய கடமையை எழுதுக .
IV எவையேனும் 2 வினாக்களுக்கு விரிவான விடையளிக்க . 2x 5 = 10
11. கவிதையின் நடையைக் கட்டடைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்
காட்டி விளக்குக .
12. பண்டைக் காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களிடையே நிகழ்ந்த கற்றல் கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக .
13. சின்னத்தைக் காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும் விளக்குக.
14 பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன் , பிற உயிர்களுடன்
கொண்டிருந்த உறவு நிலையை நிறுவுக.
V அடி மாறாமல் எழுதுக. 6
15. துன்பு உளது உனின் எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல் .
மறத்தல் எனத் தொடங்கும் திருக்குறள்
16. ஊரிமைத் தாகம் (அ) தலைக்குளம் துணைப் பாடக் கதையை
சுருக்கமாக எழுதுக .
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
அமிழ்தத் தமிழை அகம் மகிழ்ந்து கற்று அதிக மதிப்பெண் பெற்று , பள்ளிக்கும் , பெற்றோர்க்கும் , உற்றோர்க்கும் பெருமை சேர்த்திட வாழ்த்தும் ,
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
0 Comments