வேதியியல் வகுப்பு - 11 - மதிப்பீடு

 வகுப்பு - 11    வேதியியல் 

மதிப்பீடு.

I . வினாக்களுக்கு விடையளி.

1 ) ஒப்பு அணு நிறை வரையறு

2 ) மோல் எனும் வார்த்தையிலிருந்து என்ன புரிந்து கொண்டாய் ?

3 ) சமான நிறை வரையறு.

4 ) ஆக்சிஜனேற்ற எண் எனும் வார்த்தையிலிருந்து  என்ன புரிந்து கொண்டாய் ?

5 ) ஆர்பிட்டாலின் வடிவம் , ஆற்றல் , திசையமைப்பு , உருவளவு ஆகியவற்றினைக் குறிப்பிடும் குவாண்டம் எண்கள் யாவை ?

6 ) n = 4 க்கு சாத்தியமான ஆர்பிட்டால்களின் எண்ணிக்கையினைக் குறிப்பிடுக.

7 ) பௌலி தவிர்க்கைத் தத்துவத்தினைக் கூறு.

8 ) காலத்தைச் சார்ந்து அமையாத ஷ்ரோடிங்கர் அலைச்சமன்பாட்டினை சுருக்கமாக விளக்குக.

9 ) ஆஃபா தத்துவத்தினை விவரிக்க.

10 ) அமைதி நிலையில் உள்ள ஒரு எலக்ட்ரான் 100V மின்னழுத்த வேறுபாட்டைக் கொண்டு முடுக்குவிக்கப்படும்போது  , அந்த எலக்ட்ரானின் டிபிராக்ளி அலை நீளத்தைக் கண்டறிக.



Post a Comment

0 Comments