எட்டாம் வகுப்பு - தமிழ் - பயிற்சிப்புத்தகம் - பயிற்சித்தாள் 1 - கவிதைப்பேழை - தமிழ்மொழி வாழ்த்து - வினா & விடைகள் விளக்கத்துடன்.

 

தமிழ்நாடு அரசு - பயிற்சிப் புத்தகம் - தமிழ் - வகுப்பு - 8 

இயல்1

பயிற்சித்தாள் -1 - வினா & விடைகள்.

ஆக்கம் - மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.


கவிதைப் பேழை - தமிழ்மொழி வாழ்த்து


1. 'சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்க' - என்னும் பாடலடியில் 'கலி' என்பதன் பொருள் என்ன என்பதைக் கண்டறிந்து எழுதுக.

அ) இரவு

ஆ) அறியாமை இருள்

இ) இருட்டு

ஈ) அறிவுச்சுடர்

விடை ஆ) அறியாமை இருள்

2. 'சிந்துக்குத் தந்தை' எனப் பாரதியாரைப் புகழ்ந்த கவிஞர் யார் எனத் தெரிவுசெய்க.

அ) வாணிதாசன்

ஆ) சுப்புரத்தினதாசன்

இ பாரதிதாசன்

ஈ) கவிமணி தேசிகவிநாயகம்

விடை இ ) பாரதிதாசன்

3. சரியா? தவறா? என எழுதுக.

அ) 'இசைகொண்டு வாழியவே' - இவ்வடியில் 'இசை' என்னும் சொல் புகழைக்குறிக்கிறது.

( சரி )

ஆ) தொல்லையகன்று - என்பதனைப் பிரித்து எழுதக் கிடைப்பது தொல்லை+யகன்று ஆகும்.

(தவறு)

இ) பாரதியார். தேசபக்திப்பாடல்கள் மூலம் விடுதலை உணர்வினை மக்களிடையேஏற்படுத்தினார்.

( சரி)

ஈ) மொழி, மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. (சரி)

4. கோடிட்ட இடங்களை நிரப்புக.

அ) "வான மளந்தது அனைத்தும் அளந்திடு ---(வண்மொழி) வாழியவே!"

ஆ) வைப்பு' என்பதன் பொருள் ( நிலப்பகுதி )

ஆகும்.

5. பொருத்தமான நிறுத்தக்குறியிடுக.

விடை

பாரதியார் ' எட்டயபுரம் ' என்னும் ஊரில் பிறந்தார் . இவரது இயற்பெயர்

சுப்பிரமணியன் ஆகும். இவர் பதினோரு வயதில் தமது கவித்திறமையால் ' பாரதி ' 

என்ற பட்டத்தைப் பெற்றார். மேலும் இவர் ஒரு சிறந்த எழுத்தாளர், இதழாளர், சமூக

சீர்திருத்தவாதி , விடுதலைப் போராட்ட வீரர் எனப் பல்திறன் பெற்ற வித்தகர் ஆவார்.

6. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க.

அ) பாரதியார் நடத்திய இதழ்களின் பெயரினை எழுதுக.

விடை:|இந்தியா , விஜயா.


ஆ) தமிழ்மொழி வாழ்த்துப்பாடலில் இடம்பெற்றுள்ள தமிழின் சிறப்புகள் இரண்டனைக் கூறுக.

விடை

(1) தமிழ்மொழி எக்காலத்திலும் நிலைபெற்று வாழும் மொழி.

(2)  ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான மொழி.

7. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

அ) பாரதியார் எத்தகைய ஆற்றலைப் பெற்றிருந்தார்?

விடை - பாரதியார் இளமையிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றிருந்தார்.

ஆ) தமிழ்நாடு எவ்வாறு ஒளிர வேண்டுமெனப் பாரதியார் கூறினார்?

விடை - பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர வேண்டுமெனப் பாரதியார் கூறினார்.

8. பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

"செந்தமிழே! செங்கரும்பே! செந்தமிழர் சீர்காக்கும்

நந்தா விளக்கனைய நாயகியே! - முந்தை

மொழிக்கெல்லாம் மூத்தவளே! மூவேந்தர் அன்பே!

எழில்மகவே எந்தம் உயிர்",

-து.அரங்கன்

வினாக்கள்

அ)பிரித்து எழுதுக.

செந்தமிழ் - செம்மை + தமிழ்

செங்கரும்பு - செம்மை + கரும்பு


ஆ) தொகைச் சொல்லை விரித்தெழுதுக,

மூவேந்தர் - சேர , சோழ , பாண்டியர்

இ) முந்தை மொழிக்கெல்லாம் மூத்தவள் யார்?  

முந்தை மொழிக்கெல்லாம் மூத்தவள் நம் தாய்மொழியாம் தமிழ் மொழி.

9. நீ அறிந்த கவிஞர் ஒருவரைப் பற்றி அரைப்பக்க அளவில் கட்டுரை வரைக

(குறிப்பேட்டில் எழுதுக.)


நான் விரும்பும் கவிஞர் (பாரதிதாசன்)


முன்னுரை:


தமிழ்மொழியையும், தமிழ்நாட்டையும் தம் இருகண்களாகக் கருதி உழைத்த புரட்சிக்
கவிஞர் பாரதிதாசனே நான் விரும்பும் கவிஞர் ஆவார். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் தொண்டு
செய்வதே தனது தொண்டாகக் கொண்ட புரட்சிக் கவிஞரானார்.


பிறப்பும் இளமையும்:


பாரதிதாசன் புதுச்சேரியில் கனகசபை - இலக்குமி இணையருக்கு 29.4.189 அன்று
பிறந்தார். பாரதியின்மேல் கொண்ட பற்றால் தம்பெயரைப் பாரதிதாசன் (சுப்புரத்தினம்) என
மாற்றிக்கொண்டார். குடும்பவிளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு போன்ற
நூல்களைப் படைத்துள்ளார்.


மொழிப்பற்று :


"தமிழுக்கு அமுதென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" எனத் தமிழைத் தம் உயிராகக் கருதி ஆழ்ந்த பற்றும்
புலமையும் கொண்டார். தமிழ் மொழியின் இனிமையைச் சுவைத்த அவர் தமிழை அமுது
தொன்மையை உலகறியப் பேசுகிறார்.
எனக் கூறுகிறார். மண்ணும் விண்ணும் தோன்றிய மூத்த மொழி எனத் தமிழ்மொழியின் தொன்மையை உலகறியப் பேசினார்.

நாட்டுப்பற்று:

மொழிப் பற்றோடு நாட்டுப் பற்றும் மிக்க அவர். தமிழகத்தில் நிலவிய சாதி, மூடநம்பிக்கை,பெண்ணடிமை, உழைப்பவர்களின் துயரம் ஆகியவற்றைத் தம் கவிதைகளால் சாடியதோடுமட்டுமன்று அவற்றை நீக்கவும் அரும்பாடுபட்டார்.

தொழில் வளம் :

நாட்டில் தொழில் வளம் பெருக வேண்டும். தொழிலாளர் நிலை உயரவேண்டும். எனவேபுதியதோர் உலகம் செய்வோம். கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்று தம்கவிதையால் புது உலகைப் படைக்க விரும்பினார்.

முடிவுரை:

தம் கவிதைத் திறத்தால் நாட்டு மக்களின் இதயத்தே நல்லறிவுமூட்டி மானமுள்ள தமிழர்களாகமக்கள் வாழ்ந்திடச் செய்தவர், சாதியாலும் மதத்தாலும் பிரிந்த மக்களை ஒன்றுபடுத்தி ஓரினமாக வாழவைத்த கவிஞரே நான் விரும்பும் பாரதிதாசன் ஆவார்.

10. உனக்குத் தெரிந்த பாரதியார் பாடல் ஒன்றனை எழுதுக.

விடை: 

வேண்டுவன

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே யினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமு மின்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்.

ஆக்கம் - மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

Post a Comment

1 Comments