எட்டாம் வகுப்பு - அறிவியல் -
பயிற்சித்தாள் 1 -
8th Science Worksheet 1 - அலகு 1 -
அளவீட்டியல்
I . சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1 ) மின்னோட்டத்தின் SI அலகு --------
அ ) A
ஆ ) a
இ ) C
ஈ ) c
விடை - அ ) A
2 ) ராஜூ ஒரு மின்சுற்றினை உருவாக்கினான். அந்த மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தினை அளக்க அவன் பயன்படுத்தும் கருவி எது ?
அ ) வோல்ட் மீட்டர்
ஆ ) கால்வனோ மீட்டர்
இ ) வெப்பநிலைமானி
ஈ ) அம்மீட்டர்
விடை ஈ ) அம்மீட்டர்
3 ) மீனா குளிர்சாதனப் பெட்டியிலிருந்து சில பனிக்கட்டிகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து வெளியே வைத்தாள். சில மணித்துளி நேரத்திற்குப் பின்பு பனிக்கட்டிகள் உருக ஆரம்பித்தது.இதிலிருந்து அவள் தெரிந்து கொள்வது என்ன ?
அ ) வெப்பநிலை அதிகரித்ததால் பனிக்கட்டி உருகியது.
ஆ ) வெப்பநிலை குறைந்ததால் பனிக்கட்டி உருகியது.
இ ) அழுத்த மாறுபாட்டினால் பனிக்கட்டி உருகியது.
ஈ ) காற்றிலுள்ள ஈரப்பதத்தால் பனிக்கட்டி உருகியது.
விடை - அ ) வெப்பநிலை அதிகரித்ததால் பனிக்கட்டி உருகியது.
4 ) இவற்றுள் எது வெப்பநிலையினெ அலகு அல்ல ?
அ ) oC
ஆ ) oF
இ ) K
ஈ ) A
விடை - ஈ ) A
5 ) வேறுபட்ட இணையைக் கண்டுபிடி.
அ ) Ampere : A
ஆ ) Kelvin : K
இ ) Metre : M
ஈ ) Candle : cd
விடை - இ ) Metre - M
6 ) அருண் ஆய்வகத்தில் சோதனை செய்கிறான். அவனுக்குப் பல்வேறு திரவங்களின் வெப்பநிலையை அளக்க வேண்டும் . வெப்பநிலையை அளப்பதற்கான சரியான கருவியைத் தேர்வு செய்ய உதவுங்கள்.
அ ) அம்மீட்டர்
ஆ ) லாக்டோ மீட்டர்
இ ) அனிமோ மீட்டர்
ஈ ) வெப்பநிலைமானி
விடை - ஈ ) வெப்பநிலைமானி
7 ) அணுவின் உள்ளே ஏற்படும் அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கடிகாரம் எது ?
அ ) ஒப்புமை வகைகடிகாரங்கள்
ஆ ) அணுக்கடிகாரங்கள்
இ ) குவார்ட்ஸ் கடிகாரங்கள்
ஈ ) எண்ணிலக்க வகை கடிகாரங்கள்
விடை - ஆ ) அணுக்கடிகாரங்கள்
8 ) GPS மற்றும் GLONASS இல் பயன்படுத்தப்படும் கடிகாரங்கள் எவை ?
அ ) ஒப்புமை வகைகடிகாரங்கள்
ஆ ) குவார்ட்ஸ் கடிகாரங்கள்
இ ) எண்ணிலக்க வகைகடிகாரங்கள்
ஈ) அணுக்கடிகாரங்கள்
விடை ஈ) அணுக்கடிகாரங்கள்
II ) பொருத்துக.
9 ) அடிப்படை அளவுகளை அவற்றின் அலகுகளுடன் பொருத்துக.
1 ) நீளம் - m
2 ) காலம் - s
3 ) மின்னோட்டம் - A
4 ) வெப்பநிலை - K
விடை - ஆ ) 1 -iii 2 ) iv 3 ) ii 4 ) i
15 ) கருவியை அவற்றின் பயன்களோடு பொருத்துக.
1 ) ஒளிமானி - ஒளிச்செறிவினை அளவிட
2 ) அம்மீட்டர் - மின்னோட்டத்தினை அளவிட
3 ),வெப்பநிலைமானி - பொருளின் வெப்பம் மற்றும் குளிர்ச்சியினை அளவிட
4 ) கடிகாரம் - கால இடைவெளியை அளவிட
III ) சரியா ? தவறா ? என எழுதுக.
11 ) எண்ணிலக்க வகைக்கடிகாரங்கள் நேரத்தை எண்களாகக் காட்டும் ( சரி ))
விடை தயாரிப்பு - திருமதி.சுகுணா ஆசிரியை , அ.மே.நி.பள்ளி ( ஆதிந ) இளமனூர் , மதுரை.
வாழ்த்துகள் மாணவநண்பர்களே !
தொடர்ந்து Greentamil.in இணையதளத்தைப் பார்த்தும் , பகிர்ந்தும் கற்றலை மேம்படுத்துங்கள்.
மு.மகேந்திர பாபு ,தமிழாசிரியர் , மதுரை. - 97861 41410
0 Comments