டெக்
ஜம்மென்று உக்காந்திருந்தார் சம்முகத்தாத்தா. தொன்னூறைக் கடந்த வைரம்பாஞ்ச உடம்பு. எந்த வம்பு தும்புக்கும் போகாமல் , தானுண்டு தான் வேலையுண்டு என சிவனேன்னு போகக்கூடியவர். ஊருக்குள் அதிர்ந்து பேசாத ஆள். பதினிச்சமயத்தில் நண்டும் நத்தையும் கள்ளக்குடிச்சுட்டு மப்பேறி அலைகையில் , தனக்கு மட்டும் கீகாட்டிலுள்ள ஒத்தப்பனையில் ரெண்டு முட்டி கட்டி , மூனுதரம் பாளை சீவி நாலு வேள குடிப்பவர். மருந்தெனக் குடித்து , உடம்ப கின்னென வைத்திருந்தவர்.
இதோ எந்த நோய்நொடியும் இல்லாமல் மூச்ச நிறுத்தி , கம்பீரமாய் மரச்சேரில் உக்காந்திருக்கார். இரு கால்களையும் கட்டி , சிமெண்ட்ச் சட்டியில் ஐஸ்கட்டி போட்டு வைத்திருக்காக.
ஏப்பா ... ரா முழுசும் முழிக்கனும். விளாத்தொளத்தில டெக்குக்குச் சொல்லிருங்கபா. பாவம் , அவரும் எமச்சாரு படம் , கணேசன் படம்னு பாத்து நல்லபடியா கட்ட வேகட்டும்...
சொல்லியாச்சுபா . ஆறரை பஸ்லெ டிவி வந்துரும் ...
எலே... தள்ளி ஒக்கார்ரா ... டிவிப்பொட்டி முன்னாடி ஒக்காந்தா கொண்ட நரம்பு வலிக்கப் போகுது...
எங்களுக்குத் தெரியும் ... ஒங்க சோலியப் பாருங்க...
சோலியப் பாக்கவா ... காலல ஓம் வாயில நாய் மோழுதா இல்லியானு பாக்கேன்..
பாரும் பாரும் ...
விடிஞ்சு எல்லாரும் போக அவன் மட்டும் கடுந்தூக்கத்திலெ இருந்தான். ஓடி வந்த நாயொன்னு மோந்துபாத்துட்டு காலத் தூக்கியது.
மு.மகேந்திர பாபு.
0 Comments