சீத்தாங்கல்

சீத்தாங்கல் 

உடைந்த மண்பானைச் சில்லுகளை
டவுசர் பைக்குள் போட்டு ,
அலையடித்த கண்மாயின் முன்
குனிந்து நின்று ,
ஓடுகளை தண்ணீரின் மீது 
சாய்வாக ஓங்கி எறிய ,
நான்கைந்து இடங்களைத் தொட்டுத் தொட்டு
தாவிச் சென்ற கண்மாயில் ,
விலங்குகளின் எலும்புத் துண்டுகளும் ,
மண்டை ஓடுகளும் 
ஆங்காங்கே கிடக்கின்றன
நீரற்ற நிலப்பரப்பினில் தற்போது !

மு.மகேந்திர பாபு ,

Post a Comment

0 Comments