பல்லவி
வாடா நீயும் வாடா மழ வாசக்காத்து நம்ம பக்கம் வீச
தாடா ஒன்னு தாடா பாடல் மதுர மண்ணின் பாசம் கொஞ்சம் பேச
தேன் அழகர் மலை காத்து வந்து
யானை மலை மக்கள் தொடும்
தெப்பக் குளம் தண்ணியெல்லாம் தீர்த்தமாகுமே !
தமிழை மெல்ல வளர்த்து வந்து
தரணியெல்லாம் பேரத்தந்து
சிங்கம் போல நிமிர்ந்து நிக்குது நம்ம மதுர மண்தானே !
சரணம் 1
ஓகோனு வாழ ஓடியாட வேணும்
உழைச்சத கூடி நாமும் ஒன்னா உண்ணுவோமே !
தகுதி படைத்த ஆள் நாமே !
தங்கம் போல ஜொலிப்போமே !
வளமும் நலமும் வாழ்வில் ஆறாக வருமே !
மதுரக்காரன் மனம்தானே
மல்லிப்பூவின் நிறம்தானே !
மனமும் மரமும் பசுமை பொங்கும் தினம்தினமே !
சரணம் 2
நான்மாடக் கூடல் நகரெங்கும் போவோம்
நண்பரோட வழியில் நாளும் நல்லதையே செய்வோம்
விளக்குத் தூணு போல்தானே
வெளிச்சம் தருவோம் நாம்தானே !
கலையும் மலையும் உலகை ஆளும் மதுர மண்தானே !
வைகை ஆத்தைப் போல்தானே
வாழ்க்கை தந்து வாழ்வோமே !
அன்பும் நட்பும் உள்ளம் எங்கும் நிறைப்போமே !
பாடலாக்கம்
மு.மகேந்திர பாபு
0 Comments