கொள்ளி வாய்ப் பிசாசுகள் !

கொள்ளிவாய்ப் பிசாசுகள்

அடிக்கடி முன்வந்து
புகை கக்கிவிட்டுச் செல்கின்றன
கொள்ளிவாய்ப் பிசாசுகள்.

சிலநேரம் எரிச்சலாகவும் ,
சிலநேரம் ஆத்திரமாகவும் இருக்கிறது
கொள்ளிவாய்ப் பிசாசுகளைப் 
பார்க்கும் போதெல்லாம்.

நேரம் காலம் கிடையாது.
காலை எழுந்தது முதல்
இரவு தூங்கச்செல்லும் வரை
தன் பணி இதுவென புகை ஊதி
பகைத் தீ மூட்டுகின்றன.

சில கொள்ளிவாய்ப் பிசாசுகள்
காலைக் கடனுக்காகவும் ,
சில குளிருக்கு இதமாகவும் ,
சில சூடு தணிக்கவும் என
எல்லாக் காலங்களிலும் 
ஊதித் தள்ளுகின்றன.

குளிருக்கு இதமென்றால் 
தீமூட்டிக் குளிர்காயலாம்.
வெப்பம் தணிக்க
இளநீர் குடிக்கலாம்.

பேருந்துக்காக
காத்திருக்கும் வேளையில் 
புகை ஊதித் தள்ளுகிறது ஒரு பிசாசு.
பாதி ஊதுகையில்
பேருந்து வந்துவிட ,
கீழே போட மனமின்றி
படிக்கட்டில் தொங்கியபடியே
மீதியை ஊதி ...
அப்பாடா ... என 
உலக சாதனை புரிந்ததாக
நிம்மதிப் பெரு மூச்சுவிட ...

சாக்கடை ஒன்றின்
அருகமர்ந்த நிலை
சக பயணிக்கு.

சில கொள்ளிவாய்ப் பிசாசுகள்
புகை வாசம் மறைக்க பாக்குகளையும் ,
வாசனை மிட்டாய்களையும் தின்கின்றன ...
தன்னுயிரை எமன் தின்றுகொண்டிருப்பதை
மறந்து ! 

நுரையீரல் நொறுங்கில் போனபின்
உடல் சுருங்கிப் போனபின்
உள்ளக் குமுறலில் 
ஓலமிடும் சில பிசாசுகள்.

பல்லும் சொல்லும் போனபின்பு
பார்க்கவே பரிதாபமாய்
சில அலையும்.

இளைஞர் முதல் முதியோர் வரை
பாமரன் முதல் படித்தவர் வரை
பாரபட்சமின்றி வாயில் வைத்து
ஊதித்தள்ளுகின்றன வட்டமாகவும் ,
இரயில் புகையாகவும் .

விரைவில் தனக்கு
ஊதுபத்தி கொளுத்துவார்கள் 
என்று தெரிந்தும் ! 

மு.மகேந்திர பாபு .

Post a Comment

10 Comments

 1. Replies
  1. மிக்க நன்றி
   வணக்கம்.

   Delete
 2. புகை....பகை......நன்று

  ReplyDelete
 3. அருமை sir. புகை தின்னிகளுக்கு நல்ல சவுகடிக் கவிதை

  ReplyDelete
 4. அருமை sir. புகை தின்னிகளுக்கு நல்ல சவுகடிக் கவிதை

  ReplyDelete
 5. அவர்கள் பிறருக்கும் நோய்யைய் பரிசாக
  தருகிறார்கள்

  ReplyDelete