மனிதம் வளர்ப்போம் ! - இசைப்பாடல்.

மனிதம் வளர்ப்போம்  ! (இசைப் பாடல் )

நாகரிக மோகத்தில நேயத்தைக் காணோம் -மனித நேயத்தைக்  காணோம் 
மண்ணில் நடமாடும் மனிதரிடம் மகிழ்ச்சியைக் காணோம் 
மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகிப் போச்சு 
மனித நேயம் மட்டும் ஏங்ககருகிப் போச்சு   ?

ஆணென்றும் பெண்ணென்றும் பேதம் எதற்கு ?
உயர் வென்றும் தாழ்வென்றும் எண்ணம் எதற்கு ?
பகுத்தறிவு இருப்ப தெல்லாம் சண்டை போடவா ?
மடமை பேசி மனிதரின் மண்டை உடையவா?

சங்கம் வைத்து வளர்த்ததெல்லாம் தமிழைத் தானங்க ! -இப்ப 
சங்கம் வைத்து வளர்ப்பதெல்லாம் சாதி தானங்க  !
யானைக்கு மதம் பிடித்தால் கட்டிப் போடுவாய் !
மனிதனுக்கு மதம் பிடித்தால் வெட்டிப் போடுவாய்  ! -பிறரை 

நாள்முழுக்க நண்பரோடு மட்டை பிடிக்கிறாய் !
வீட்டில் ஒரு வேலை என்றால் கோபம் வெடிக்கிறாய் !
படிப்பைத் தவிர மற்றவற்றில் ஆர்வம் வந்தது !
வாழ்க்கை நிலை குறையும்போது புத்தி வந்தது !

உனக்குள்ளே நம்பிக்கையை விதைத்துப் போடடா !
உள்ளத்திலே கள்ளம் என்றால் சிதைத்துப் போடடா !
உதவி செய்யும் பக்குவத்தைப்  போற்றி பாரடா !
மனிதநேயம்  உன்னைப்  போற்றும் நன்றி கூறடா   ! (நாகரிக .......)

மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments