அம்மாவும் , அம்மியும்.

அம்மாவும்  , அம்மியும் .

அம்மாவின் கைமணம்
அடுத்தடுத்த தெருக்களில்
காற்றின் வழி நுழையும்.
ஆழ்ந்த தூக்கமும்
அடுத்த நொடி கலையும்.

காடுகரை
சுத்திவந்தாலும் , 
அலுப்பென  அமர்ந்ததில்லை .
அப்பாடா என
சோம்பல் முறித்து நிமிர்ந்ததுமில்லை.

அம்மா அம்மியரைக்கும் போது
சில நேரம் துள்ளலிசையும் ,
மெல்லிசையும் 
மாறி மாறி வரும்.

ஒத்த ரூவா தேங்காச்சில்லு
கடை விட்டு
வீடு நெருங்கும் போது
கால்வாசியைக் காலிசெய்யும்
என் பல்லு.

விருட்டெனப் பாயும்
வழுக்கைச் சில்லு
அம்மாவின் வசவிற்குப் பின்
நஞ்சுபோய் கிடக்கும்.

எத்தனையோ மசாலாப் பொடிகள்
பாலித்தின் பைக்குள்
மரணித்து கடைகளில்
தொங்குவதை அம்மா
வாங்குவதில்லை.

அம்மியில் 
அரைக்கும் போது
அன்பையும் அரைத்துதிருப்பாள் சேர்த்து.

அவள் கைகள் 
அரைக்கும்போது
ஒரு அழகியல் இருக்கும்.
நிமிர்த்தி வைத்து  தண்ணீர் ஊற்றி
கடைசியில் வழிக்கும் போது
சின்னப் பிள்ளையை
குளிப்பாட்டுவதைப் போல 
இருக்கும்.

எத்தனை கருவிகள்
வந்தாலும்
இன்னும் பிரியவில்லை
அம்மாவின் அன்பைப் போல
அம்மியும்.

மு.மகேந்திர பாபு.

படம் - முகநூல்.

Post a Comment

10 Comments

  1. அம்மாவும்.....அம்மியும்....கவிதை...அறுசுவை...

    ReplyDelete
  2. Replies
    1. மிக்க நன்றி நண்பா.

      Delete
  3. என் கிராமத்து அம்மாவை என் கண் முன் நிறுத்தியது உங்கள் கவிதை.அற்புதம்

    ReplyDelete
  4. அம்மாவின் அம்மி ரசனையும் ருசியும் நாக்கில் நர்த்தனம் புரிகிறது ஐயா. அருமை அருமை

    ReplyDelete
  5. அம்மா என்னும் ஒற்றைச் சொல் மந்திரம் உலகமெல்லாம் ஒலிக்கட்டும்..! வாழ்க வளமுடன் நண்பரே...!

    ReplyDelete
  6. அம்மா என்னும் ஒற்றைச் சொல் மந்திரம் உலகமெல்லாம் ஒலிக்கட்டும்..! வாழ்க வளமுடன் நண்பரே...!

    ReplyDelete