காளைகளும் , காளையர்களும் ...
நாட்டுக்காகப் போராடுனோம் அப்ப - நாட்டு
மாட்டுக்காகப் போராடுறோம் இப்ப
வீட்டவிட்டு வெளியில் வந்தோம் நாங்க ! - வீறு
கொண்டு வந்துட்டீங்க இளைஞர்களே நீங்க !
மானம் காக்க வந்ததையா மாணவர் கூட்டம் ! - நம்ம
நாட்டை விட்டு எடுத்திடுமே இனி பீட்டா ஓட்டம் !
ஜல்லிக்கட்டு காளை போல துள்ளி வாரானே ! - தினம்
சந்தோசத்த மக்களுக்கு அள்ளித் தாரானே !
அடங்க மறுத்து நிக்குதையா அலங்காநல்லூர் - வைகை
ஆத்துமேல ரயில பிடிச்சது நம்ம செல்லூர்
காதலர்களால் நிரம்பும் அந்த மெரினா பீச்சு - இப்ப
காளையர்களால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாச்சு !
சென்னை திருச்சி கோவைனு இளைஞர் கூட்டம் ! - நம்ம
பாரம்பரியத்துல எல்லாருக்கும் ரொம்ப நாட்டம் !
தமிழ்நாடு தாண்டி விரிஞ்சதையா நம்ம எல்லை ! - இனி
ஏறு தழுவலுக்கு தடை ஏதும் இல்லை !
உலகம் முழுதும் வெடிச்சிருக்கு ஜல்லிக்கட்டு ! - இப்ப
கலகம் ஒன்னு வெடிச்சிருக்கு துள்ளிக்கிட்டு !
மாணவர்கள் சக்தி ஒன்றே மேன்மையானது ! - நாட்டுப்
பசுவின் பாலைப் போல துய்மையானது !
வாடிவாசல் திறக்குமையா வானம் வெடிக்க !
தேடிவந்து எல்லோரும் நம்ம வீரம் படிக்க !
கூடிவந்து நின்னதால ஜெயிச்சோம் இன்று !
மாணவர்படை காட்டுமே பீட்டாவை வென்று !
மு.மகேந்திர பாபு , மதுரை .
0 Comments