தொழிலே துணை
ஞாயிறு இரவு,
ஊர் சுற்றும்
வாலிப மகனுக்கும் 🤷🏻
பேறுகாலத்திற்காய் வந்த
கர்ப்பிணி மகளுக்கும்🤰
உயிராய் எண்ணும் கணவருக்கும்👩❤️👨
ஊர் கண்ணு 👁️
உறவு கண்ணு👁️
கொல்லிக் கண்ணு 👁️
பேய்க் கண்ணு 👀
பிசாசுக் கண்ணு 👀
எல்லாக் கண்ணும்👁️👁️ ஓடிப்போக முச்சந்தியில் வெட்டி எறியப்பட்டன எலுமிச்சைகளும் 🍋🍋
பூசணிகளும்....🍈🍋🟩
திரும்பிப் பார்க்காமல்
மிதித்து விடாமல் பக்குவமாய் அடியெடுத்து வீடு திரும்பினாள் அம்மா...
திங்கள் காலை
காவு கொடுக்கப்பட்ட கனிகளை பத்தோடு ஒன்றாக எடுத்து முச்சந்தியின் சாபம் போக்கினாள்
தூய்மைப் பணியாளர் தேவதை🧚🏻♀️🧚🏻♀️
பேய்க் கண்ணு
பிசாசுக் கண்ணு
எந்தக் கண்ணும் அருகில் நெருங்காது அவளிடம் ,
அவளுக்கு
*தொழிலே துணை*
ம.தன்சியா
முதுகலைத் தமிழ் ஆசிரியர்
நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பொள்ளாச்சி
0 Comments