ஐநூறு / ஐந்நூறு எது சரி?
ஐந்தும் நூறும் சேர்ந்தால் ஐந்நூறு என்று வரும். வருமொழி நூறு. அதில் முதல் எழுத்து ந் + ஊ. இவை சேரும்போது அந்த 'ந்' மட்டும் மிகவேண்டும். ஏன்? பொருளுணர்ச்சிக்காக. ஐ நூறு என்றால் ஆச்சரியப்படும் நூறு எனப் பொருள்படும். 'ஐ' - வியப்பை உணர்த்தும் உரிச்சொல். ஐந்தில் உள்ள ஐ வேறு.
இந்திய அரசு வெளியிட்டுள்ள பணத்தாளில் 'ஐநூறு' எனத் தவறாக உளது. பேராசிரியர் மா.நன்னன் இதைத் தொடர்புடையவர்களுக்கும் இதழ்களுக்கும் எழுதிஎழுதிக் கை ஓய்ந்ததுதான் மிச்சம். நம் பாராளுமன்ற உறுப்பினர்கள். அமைச்சர்கள் யாரும் கண்டுகொள்வதே இல்லை.
அதில் Five Hundred என்பதை Fiv என்றாலே, அதே ஒலி கிடைக்கிறதே என்று எடுத்துவிடலாமே? ஒரு தமிழ்ப் பேராசிரியர் 'ஒப்பாரி ஐநூறு' என வெளியிட்டுள்ளார். நகரத்தார் ஒன்பது கோயில்களில் ஒன்றான, மாத்தூர் ஐந்நூற்றீசுவரர் மாறாமல் இருப்பது, அவர்தம் திருவருளால் என மகிழலாம். ஐந்நூறு என்று போடுமாறு நடுவணரசுக்கு ஐந்நூறு அஞ்சலட்டையாவது எழுதுங்கள்.
1 Comments
Marieswari
ReplyDelete