காலாண்டுத் தேர்வு - பத்தாம் வகுப்பு - மதுரை - 2024 - வினா&விடை

 

மதுரை மாவட்டம்

காலாண்டு தேர்வு - 2024 

                        தமிழ் 

பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் 100 காலம் : 3:15 மணி


பகுதி-1 மதிப்பெண்கள் 15


சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக


1) மெத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பது

அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலங்களும்

விடை - அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்


2) உரனசைஇ - இதில் பயின்று வரும் அளபெடை

அ) செய்யுளிசை அளபெடை

ஆ) சொல்லிசை அளபெடை

இ) இன்னிசை அளபெடை

ஈ) ஒற்றளபடை

விடை : ஆ) சொல்லிசை அளபெடை


3) அருந்துணை என்பதைப் பிரித்தால் ...


அ) அருமை + துணை

ஆ) அரசு+ துணை

இ) அருமை+ இணை

ஈ) அரசு+ இணை

விடை : அ) அருமை + துணை


4) 'பாடு இமிழ் பனிக்கடல் பருகி'என்னும் முல்லைப்பாட்டு உணர்த்தும் அறிவியல் செய்தி யாது ?


அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல் ஆ)கடல் நீர் குளிர்ச்சி அடைதல் 

இ)கடல் நீர் ஒலித்தல் 

ஈ)கடல் நீர் கொந்தளித்தல்

விடை : அ) கடல் நீர் ஆவி ஆகி மேகமாதல்


5) காசிக் காண்டம் என்பது...


அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்

ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறு பெயர் 

இ)காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் 

ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

விடை : காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்


6) பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?


அ) துலா ஆ) சீலா இ) குலா ஈ) இலா

விடை : இலா


7)' மாபாரதம் தமிழ் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்னும் சின்னமனூர் செப்பேடு உணர்த்தும் செய்தி யாது?


அ) சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

ஆ) காப்பிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

இ) பக்தி இலக்கிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது


விடை : அ) சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது


8) ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா? என்று நூலகரியடம் வினவுவது


அ) அறிவினால் ஆ) வினா இ) ஐயவினா ஈ) கொளல் வினா

விடை : ஈ),கொளல் வினா


9) இடைக்காடனாரஅன் பாடலை இகழ்ந்தவர்,,,,,,,,

இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்..

அ) அமைச்சர், மன்னன்

ஆ) அமைச்சர், இறைவன்

இ) இறைவன், மன்னன்

ஈ) மன்னன், இறைவன்

விடை : ஈ) மன்னன், இறைவன்


10) பின்வருவனவற்றுள் குறிஞ்சி நிலத்திற்குப் பொருந்தாத கருப்பொருள் எது?

அ) முருகன் ஆ) தொண்டகம்

இ) மலைநெல் ஈ) மூதூர்


விடை : ஈ) மூதூர்


11) கூற்று 1: போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்

கூற்று 2 : அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.


அ) கூற்று1 சரி ஆ) கூற்று 1மற்றும் 2 தவறு

இ) கூற்று 1 தவறு 2 சரி

ஈ)கூற்று 1 மற்றும் 2 சரி 


விடை : ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி


பாடலைப் படித்து விடை தருக


முத்தமிழ் துப்பதால் முச்சங்கம் கண்டதால்

மெத்த வணிகலமும் மேவலால்- நித்தம்

அணை கிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு

இணை கிடந்த தேதமிழ் ஈண்டு


12) இப்பாடலின் ஆசிரியர் யார்?


அ) பெருஞ்சித்திரனார் 

ஆ) தமிழழகனார் இ) இளங்குமரனார்

ஈ) பாரதியார்

விடை : ஆ) தமிழழகனார்


13) இப்பாடலின் சீர் மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.


அ) முத்தமிழ் - மெத்த 

ஆ) முத்தமிழ்- முச்சங்கம்

இ)அணைகிடந்தே - இணைகிடந்தே 

ஈ)மெத்த - நித்தம்


விடை : ஆ ) முத்தமிழ் - முச்சங்கம்


14) தமிழுக்கு இணையாகப் பாடலில் பொருத்தப்படுவது எது?


அ) சங்கு ஆ) நிலம் இ) கடல் ஈ) நெருப்பு


விடை : இ) கடல்


15) இப்பாடலில் பயின்று வரும் அணி யாது ?


அ) உவமையணி

அ) இரட்டுற மொழிதல் அணி

இ) உருவக அணி

ஈ) தற்குறிப்பேற்ற அணி


விடை : ஆ) இரட்டுற மொழிதல் அணி


பகுதி - II (மதிப்பெண் 18) பிரிவு - 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளி. 21 வது வினா கட்டாய வினா.

16) விடைக்கேற்ற வினா அமைக்க.

அ) தந்தைப் பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகள் கலைஞரை ஈர்த்தன.

விடை : யாருடைய பகுத்தறிவுக் கருத்துகள் கலைஞரை ஈர்த்தன?

ஆ) தமிழில் சொல்லாய்வுக் கட்டுரைகளைப் பாவணர் எழுதினார்.

விடை : தமிழில் சொல்லாய்வுக் கட்டுரைகளை எழுதியவர் யார்?

17) வசனகவிதை - குறிப்பு வரைக.

யாப்புக்கட்டுக்கு அப்பாற்பட்டு உரைநடையும் கவிதையும் இணைவது வசன கவிதை ஆகும்.

18) விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்கள் :

i ) வாருங்கள்
(ii) அமருங்கள்
(iii) தண்ணீர் அருந்துங்கள்!
(iv) உங்களைப் பார்த்து நீண்ட நாட்களாகி விட்டதே! எப்படி இருக்கிறீர்கள்?
(v) உங்கள் வீட்டில் அனைவரும் நலமா?
(vi) உணவு உண்ணலாம் வாருங்கள்!

19) நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர் யார்?

 விரும்பத் தகுந்த இரக்க  இயல்பைக் கொண்டவர்கள் , பிறர் நன்மை கருதித் தமக்கு நஞ்சைக் கொடுத்தாலும் அதனை உண்ணும் பண்பாளர் ஆவார்.

20) சாந்தமான பிரபஞ்சத்தைச் சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள் இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.

21) 'தரும்' என முடியும் திருக்குறளை எழுதுக.

                         பிரிவு - 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்க.             5 x 2 = 10


எண்ணுப் பெயர்களைக் கண்டு தமிழெண்களில் எழுதுக.

அ) நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.

ஆ) ஐந்து சால்பு ஊன்றிய தூண்

23. சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.

ஆ) கீரிபாம்பு ஆ) முத்துப்பல்

24. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

அ) விதி - வீதி ஆ)தான் - தாம்

25. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

அ) மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

ஆ) கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

கலைச் சொற்கள் தருக.

அ) Playright 4) Biotechnology

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளிகளுக்கான மாற்று வினா.

பழமொழிகளை நிறைவு செய்க.

அ) உப்பிட்டவரை

ஆ) அளவுக்கு மிஞ்சினால்.

நிறுத்தக் குறியீட்டு எழுதுக.

தொலைக்காட்சி வானொலி திரைப்படம் போன்ற ஊடகங்கள் மொழிபெயர்ப்பால் தான் வளர்ச்சி பெறுகின்றன.

28) பகுபத உறுப்பிலக்கணம் தருக.

அ) செய்வான்.

பகுதி - III (மதிப்பெண்கள் : 18) பிரிவு - 1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.

29. தமிழ்மொழிக்காக கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்த இரண்டினை எழுதுக.

30. 'பலர்புகு வாயில் அடைப்புக் கடவுநர் வருவீர் உளீரோ' வினவுவது ஏன்?

31.உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.


மேற்கு என்பதற்குக் குணக்கு என்னும் பெயருமுண்டு. மேற்கிலிருந்து வீசும் போது
நான் கோடை எனப்படுகிறேன். மேற்கிலிருந்து அதிக வலிமையோடு வீசுகிறேன். வறண்ட நிலப்பகுதியில்
இருந்து வீசுவதால் வெப்பக்காற்றாகிறேன். வடக்கு என்பதற்கு வாடை என்னும் பெயருமுண்டு.
வடக்கிலிருந்து வீசும் போது நான் வாடைக்காற்று எனப்படுகிறேன். நான் பனிப்பகுதியிலிருந்து வீசுவதால்
மிகவும் குளிர்ச்சியான ஊதைக் காற்று எனவும் அழைக்கப்படுகிறேன்.
அ) வடக்கு என்பதன் வேறு பெயர் யாது?
ஆ) ஊதைக்காற்று என அழைப்பதேன்?
இ) மேற்கிலிருந்து வீசும் காற்று யாது?
பிரிவு - 2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளி. 34-வது வினா கட்டாய
2×3=6
வினா.
32. மாளாத காதல் நோயாளன் போல்' என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.
அடிபிறழாமல் எழுதுக.
33.
34.
'சிறுதாம்பு தொடுத்த' எனத் தொடங்கும் முல்லைப் பாட்டு.
தண்டலை மயில்களாட' எனத் தொடங்கும் கம்பராமாயணம்.
பிரிவு - 3
(அல்லது)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
2×3=6
35. "அறிந்தது. அறியாதது. புரிந்தது. புரியாதது. தெரிந்தது. தெரியாதது, பிறந்தது, பிறவாதது.
இவையனைத்தையும் யாம் அறிவோம். அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவையில்லை. எல்லாம்
எமக்குத் தெரியும்" - இக்கூற்றில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
38. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
37.
இன்மை புகுத்தி விடும். - இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.
உவமையணியை எடுத்துக்காட்டுடன் விளக்கி எழுதுக.
பகுதி IV (மதிப்பெண்கள் : 25)
SX 5 = 25
குறிப்பு : தேர்வர் கடிதம் /படிவம் ஆகியவற்றை எழுதும்போது கீழ்க்காணும் முகவரியைத் தனதாகக்
கொள்க. (க.மதியழகன், த/பெ. கு.கருப்பசாமி. 12 - கோவலன் தெரு. மதுரை -625 001).
38. அ) மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ்
வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப் பேச்சு ஒன்றை உருவாக்குக. (அல்லது)
39.
ஆ) வள்ளுவம் சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக்குறள் வழி
விளக்குக.
அ)-உணவு விடுதியில் வழங்கபட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறிந்து
உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

அனுப்புநர் :

க.மதியழகன்,
த/பெ.கு. கருப்பசாமி,
12, கோவலன் தெரு, 
மதுரை - 625001

பெறுநர் :

உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்
உணவுப் பாதுகாப்பு ஆணையம் , 
சென்னை.

ஐயா , 

பொருள் : உணவு விடுதியில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் , விலை கூடுதலாகவும் இருந்தது தொடர்பாக .

        மதுரை மங்கை உணவு விடுதியில் உணவு உண்டேன்.உணவு தரமற்றதாகவும் , விலை கூடுதலாகவும் இருந்தது. உணவு உண்ட இரசீது இணைத்துள்ளேன்.உணவு விடுதி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

                          நன்றி.

                        தங்கள்  உண்மையுள்ள , 

                                    தமிழரசன்.

உறைமேல் முகவரி :

உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்
உணவுப் பாதுகாப்பு ஆணையம் , 
சென்னை.

(அல்லது)
ஆ) பள்ளி ஆண்டு விழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை / கட்டுரை/ சிறுகதை / கவிதை
நூலுக்கான மதிப்புரை எழுதுக.


40.

காட்சியைக் கண்டுகவினுற எழுதுக.

41.

42.

43.

44.

கொடுக்கப்பட்டுள்ள நூலக உறுப்பினர் படி

அ) பள்ளியிலும் வீட்டிலும் உனது கடமைகளாகக் கருதுவனவற்றையும், நீ கடைப்பிடிக்க வேண்டியவை

பற்றியும் பள்ளியில் நான் / வீட்டின் நான்' என்ற தலைப்பின் கீழ் அட்டவணைப்படுத்துக. (அல்லது)

ஆ) மொழி பெயர்க்க :

Sangam literature shows that Tamils were best in culture and civilization about

two thousand years ago. Tamils who have defined grammar for language have

also defined grammar for life. Tamil culture is rooted in the life styles f Tamils

throughout India, Srilanka, Malaysia, Singapore, England and World wide. Though

our culture is very old, it has been updated consistently. We should feel proud

about our culture.

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளிகளுக்கான மாற்று வினா.

உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு தலைவாழை இலையில் விருந்தினருக்கு

உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது. நம் மக்கள் வாழை இலையின் மருத்துப் பயன்களை

அன்றே அறிந்திருந்தனர். உண்பவரின் மனமறிந்து உணவு வகைகளைப் பரிமாறுவர்.

i) தமிழா பண்பாட்டில் எதற்குத் தனித்த இடமுண்டு?

) யாருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது?

iii) நம்மக்கள் வாழையிலையின் எப்பயன்களை அறிந்திருந்தனர்?

iv) உண்பவரின் மனமறிந்து உணவு பரிமாறப்பட்டது - என்ற கூற்று சரியா? தவறா?

v) இப்படத்திற்கு ஏற்ற தலைப்பினைத் தருக.

விரிவான விடை தருக.

பகுதி - V (மதிப்பெண் 24)

அ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை எழுதுக. (அல்லது)

ஆ) ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேநீர்க்கோப்பையை எடுக்கவும் மென்பொருள்

அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்றுவிடுமா? இக்கருத்துகளை ஓட்டிச் செயற்கை

நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்' பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

அ) புயலிலே ஒரு தோணி' கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும், அடுக்குத் தொடர்களும்,

ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை எவ்வாறு வருணிக்கின்றன? (அல்லது)

ஆ) 'கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறது வெற்றி வேற்கை மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம்.

அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துக்களை

விவரிக்க.

45. அ)இளமையும் கல்வியும் - விண்வெளிப் பயணம் - சாதனைப் பெண் - விருதுகள் ஆகிய குறிப்புகளைப்

பயன்படுத்தி 'விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்' என்னும் தலைப்பில் கட்டுரை வரைக. (அல்லத)

ஆ) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவுக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.






Post a Comment

0 Comments