*கம்பன் கண்ட பெண்கள்*
கோதண்ட ராமனை
ஈன்ற *கோசலை*
அகிலம் போற்றும் அடியவனாம்
லக்குவனனைத் தந்த *சுமத்திரை*
அன்பின் உருவாய் உருப்பெற்று
கூனியின் சொற்
சிறையில் சிக்கிச்
சிந்தை இழந்த *கைகேயி!*
சினம் தணிக்க
தகுதருணம்
காத்தவளாய்
கதைத்தொடர்ச்சிக்கு
ஏற்ற காரிகையாய்
*கூனி!*
அகலிகை மோட்சம் பெற
சீதையெனும் செல்வி திருமதியாக
ராமன் சீதாராமனாக
காப்பியத்தின் போக்கை கனித்துவமாக்க
அரக்கியாக
*தாடகை!*
பொறுமையின் திருவுருவாய் மணாளனையே மதியில் நிறுத்தியவளாய்
கனலையே கற்பினால் பொசுக்கியவளாய்
*சீதை!*
உற்றானின்
பிரிவைஏற்காது
உறக்கத்தை
வரமாய்ப் பெற்றவளாய்
*ஊர்மிளை!*
கல்வியைக் கண்ணாய்க் கருதி
நற்குருவை அடைந்து
ராமனைக் கண்டு பிறவிப் பயன் அடைபவளாய்
*சபரி!*
வானரக் குல
மகர ஜோதியாய்
மதிநுட்பத்தவளாய்
பார் போற்றும்
*தாரை!*
கம்பனின் மெல்லினத் தமிழுக்கு உவமையானவளாய் *சூர்ப்பனகை!*
பத்து தலையனின் பத்தினி
அரக்கர் குலத்தில் பிறந்து
அற்புதம் குணம் கொண்ட *மண்டோதரி!*
உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவளாய் அகவைக்கு மிஞ்சிய அறிவுத்திறம் கொண்டவளாய் *திரிசடை!*
ம.தன்சியா,
தமிழாசிரியர்,
நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி
0 Comments