மரம் போல் வாழ்க ! ( வாழ்த்து மடல் )
மரம் போல் வாழ்க !
மதுரை கிழக்கின்
மாணவர் மனங்களை
அன்பினால் ஆள்க !
பசுமையின் காதலர்.
அரசுப் பள்ளிகளின் காவலர்.
கம்பீரமான தோற்றம்.
பதவிக்கு கூடுதலான ஏற்றம்.
மதுரை கிழக்கிற்கு வந்தவுடன்
ஏற்படுத்தினார் பல மாற்றம்.
அலுவலகம் முன்பு
சுற்றுச்சுவர் கட்டியதும் ,
பசுஞ்செடிகள்
பல நட்டியதும் ,
அலுவலக அமைப்பைச்
செம்மைப் படுத்தியதும் சிறு சான்று.
புதுமைகள் நிறைந்தது
உங்களது எண்ணம்.
எங்கும் நிறையட்டும்
பசுமையின் வண்ணம்.
உங்கள் பணியால்
எழுச்சி பெறுகிறது
பணிபுரியும் இடம்.
காரணம் ,
நீங்கள் பதித்துச்
செல்லும் தடம்.
ஆசிரியரது சிறந்த செயல்பாடுகளைப்
பாராட்டுகிறது உங்கள் உள்ளம்.
பள்ளியின் பெருமைகளை
வருங்காலம் வாழ்த்திச் செல்லும்.
கையெழுத்து.
அது நம் தலையெழுத்து.
ஒரே கையெழுத்தில்
நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின்
பத்தாண்டு பணியை முறைப்படுத்தினீர்
கோரிக்கை வைக்காமல் .
கல்விப்பணியில் புதுமை புகுத்தியதற்கு
தேசிய விருது பெற்றீர்.
பணியில் இருந்து கொண்டே
முனைவர் பட்டமும் கற்றீர்.
இன்னும் பல
சாதனை படைத்து
நூறாண்டு வாழ
குன்னத்தூர் பள்ளியின்
நூற்றாண்டு விழாவில் வாழ்த்துகிறோம் !
பூமழை பொழிந்தும் - அன்பினால்
பாமழை பொழிந்தும்
தங்களின் கல்விப்பணி சிறக்க
மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறோம் !
கால வெள்ளத்தில்
கரையாது ஓடும்
ஜான் கென்னடி அலெக்சாண்டர்
எனும் ஓடம் !
எங்கு நீங்கள் பணிபுரிந்தாலும்
சரித்திரம் படைக்கும் அரசுப் பள்ளிக்கூடம் !
வாழ்த்துகளுடன் ,
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர்
0 Comments