தந்தை வழியில்
சொத்தும் இல்லை,
சுகரும் இல்லை.
உடன் பிறப்புகளோடு
மனச் சோகமும் இல்லை.
வாழ்க்கை வண்டி ஓடுது.
சைக்கிள் வண்டி ஓட்டம் போல.
எந்த வேல தந்தாலும்
முழிப்பும் இல்லை,
முகச் சுழிப்பும் இல்லை.
தூக்கு வாளிப் பழைய சோறு
ஊக்கம் தரும்.
இரவில் நல்ல
தூக்கம் வரும்.
ஆஸ்பத்திரி போனதில்ல
உடல் நலக்
குறைவும் ஆனதில்ல.
தினசரி வேலை
விடியட்டும் நாளை.
கருஞ் சாலை போல தேகம்.
கை கொடுக்குமா மழை மேகம் ?
கொள்ளையடிச்சு புரள்றவுக
கொஞ்சம் மனச
வெள்ளையடிச்சுப் பாருங்க.
விவசாயம் இப்ப
சாயம் போச்சுது.
விரக்தியில மனம்
காயம் ஆச்சுது.
வாழ்க்கை வண்டி ஓடுது
கூட்டாளிகளைத் தேடுது !
மு.மகேந்திர பாபு.
0 Comments