மரங்களும் , மாணவர்களும் ...
வணக்கம்யா.உள்ளே வரலாமா ?
வணக்கம்பா.வரலாமே !
அய்யா , எங்க ரெண்டுபேரையும் பசுமைப்படைல சேத்துக்கோங்கயா.
எந்த வகுப்பு ?
எட்டாப்பு.இ பிரிவுங்கயா.
உங்க வகுப்பிலிருந்து ஏற்கனவே நாலு பசங்கள சேத்தாச்சே.ஒருத்தர் மட்டும சேந்துக்கிரலாம்.
அப்டினா இவன சேத்துக்கோங்கயா.
இல்லங்கயா.இவன சேத்துக்கோங்க.இவன்தான் ரொம்ப ஆர்வமா இருக்கான்.
இல்லங்கயா.இவன்தான் உங்ககிட்ட என்னயக் கூட்டிட்டு வந்தான்.இவன சேத்துக்கோங்க.நான் அடுத்த வருசம் சேந்துக்கிறேன்.
இரண்டு பேரையும் சேத்தாச்சு.மகிழ்ச்சியா ?
ரொம்ப நன்றிங்கயா. எங்களுக்கு எந்த மரக்கன்றுங்கயா ?
ஆசிரியர் தினத்திற்காக நாளை ஒரு மரக்கன்று நடுறோம்.அது உங்களுக்குத்தான்.
நல்லா வளத்து , பெரிசாக்கிட்டா பரிசு தருவிங்களாமே அப்டிங்களா அய்யா ?
ஆமா. அந்த மரம் உங்களது பொறுப்பு. நீங்க நல்லா வளத்திட்டிங்கனா உங்களுக்கு இறைவழிபாட்டுக் கூட்டத்தில வச்சு பரிசு வழங்கப்படும்.
மரத்திற்கு பேரு வைப்பீங்களாமே ?
ஆமா.என்ன பேரு வைக்கலாம்டா ?
எங்க மரத்திக்கு டாக்டர் . அப்துல்கலாம் அய்யா பேர வைக்கிறோம்யா.
ரொம்ப சந்தோசம் டா.
வளரும் தலைமுறை , பல தலைமுறைகளுக்கு முன்மாதிரியாக இருக்க மரக்கன்றுகளோடு இந்த நாளைத் தொடங்குவோம்.
மு.மகேந்திர பாபு.
தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்.
0 Comments