சுமை

 


சுமை


ஈரச் சாக்கினுள்

முழுவதும் நிரப்பப்பட்டு,

மூட்டப்பட்ட 

கத்தரிக்காய் மூடையை

தலையில் வைத்து

ஏணியில் ஏறி

பேருந்தின் மேல் போட்டுவிட்டு

அசராமல் இறங்கிவரும்

பெரியப்பா,


பின்னொரு நாளில்

மதுரை வந்தபோது

காலையிலும் , மாலையிலும்

நாயோடு நடைபயணம்

செய்பவர்களையும்,

சிறுஎடைகளைத் தூக்கிவர

ஆட்களைத் தேடுபவர்களையும் கண்டு

சிரித்துத்தான் போனார்

எழுபதை எட்டும் தன்

உடற்கட்டைக் கண்டு.


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments