வசவு

 


வசவு
இன்று
எப்படியேனும்
தன மன பாரத்தை
இறக்கி வைத்து ,
நாக்கப் புடுங்குற மாதிரி
நாலு கேள்வி கேட்க வேண்டும் -
நாராயணசாமியின் நினைப்பு இது .
வருஷம் ஒரு தடவ
கெடா வெட்டுறேன் ,
அப்பப்ப பொங்கல் வைக்கிறேன் ,
முடி காணிக்க கொடுக்கிறேன் ,
தினமும் விளக்கு வைக்கிறேன் .
இப்படி
எத்தனை எத்தனை
உனக்காகச் செஞ்சாலும் ,
என் கஷ்டம் நஷ்டம் தீரலையே !
என் கூப்பாடு
உன் செவியில விழலையா ?
இந்த வருசமும் மழை பெய்யாம
கரிசக்காடு
விரிசல் விழுந்து கிடக்கே !
எப்படி பிள்ளைகளை கரை சேர்ப்பேன் ?
என்று உரக்க கத்தினான் .
எல்லாவற்றையும் கேட்டு
அமைதியாய் இருந்தது
அய்யனார் சாமி
அந்த மழை பெய்யா
வானத்தைப் போல !

Post a Comment

0 Comments