இந்திய தேசம்

 


இந்திய தேசம்
எங்கே போகுது இந்திய தேசம் ?- அதை
எடுத்துச் சொன்னா நாக்கே கூசும்
காஷ்மீர் முதல் குமரி வரை எங்க நாடுதான் -ஆனா
ஒற்றுமை தான் இல்லையே பெரும் பாடுதான்
நடந்து வந்த அரசியல் நாடகம் முடிந்து போனது - நம்
மாணவர் கையிலெடுக்க புயலாய் ஆனது
வானம் தந்த மழைய நல்லா தேக்கி வைக்கிறான் -பென்னி குக்கால்
வானம் தந்த மழைய நல்லா தேக்கி வைக்கிறான்
தமிழனுக்கு தண்ணீர் தர தலையச் சொரியிறான் -கேட்டா
புதிய அணை கட்டுவோம்னு சொல்லித் தெரியிறான்
வெள்ளைக் கார பென்னிக் குக்குக்கு வெள்ளை மனசுடா -நம்ம
நாட்டுக்குள்ள இருப்பவனுக்கு கள்ள மனசுடா
காவிரியும் கைவிரிக்கல நாட்டுக்குத்தானே -அதை
வழக்குப் போட்டு இழுத்துப் புட்டான் ரோட்டுக்குத்தானே
நீதி மன்றம் சொன்ன சொல்லை கேட்க மாட்டான் -நித்தம்
ஓட்டுக்காக வீம்பு பேசி ஓயமாட்டான்
ஓடும் பஸ்ஸில் ஓடிப்போயி ஏறிப் போறவன் -இப்ப
வன்புணர்ச்சி வக்கிரத்தினால் மாறிப் போனானே
கலப்பு மணத் திருமணத்தால் சாதி மறையும்டா -ஆனா
தமிழகத்தில் மட்டும் மூனு ஊரு எரியும்டா
அடுச்சித் திருத்தி வளத்தாத்தான் புள்ள வளரும் - நல்ல
எதிர் காலம் இனிமையா புதுசா மலரும் .
பெத்த புள்ளைய அடிச்சிப்புட்டா ஜெயிலு தாண்டா -பள்ளியில
ஆசிரியர் கண்டிச்சாலும் ஜெயிலு தாண்டா
என்ன சொல்ல இந்த நிலை எங்கே போகுது ? -வரும்
எதிர் காலம் இருளாலே சூழப் போகுது (எங்கே போகுது .....)
எல்லா உணர்ச்சிக

Post a Comment

0 Comments