மு.மகேந்திர பாபு ஹைக்கூ கவிதைகள் - பகுதி 2

 

மு.மகேந்திர பாபு , ஹைக்கூ கவிதைகள் - 2

@   கதவிடுக்கில்  சிக்கிக் கொண்டது  பல்லி

               வால் துண்டாகி  துள்ளியது.

               வலியில் மனசு .


@           மாமா , சித்தப்பா  உறவுகள்  இல்லை 

              தனிமையில்  தவிக்கும்  குழந்தை .

              நாமிருவர்  நமக்கொருவர் .


@           நகைக் கடை , துணிக்கடையில் 

              பேரம்  இல்லை.

              பேசுகிறான்  காலணிக்  கலைஞனிடம் .


@           மணிக்கொருமுறை  மின்நிறுத்தம் 

              இரு மடங்கு  எகிறியது 

              மின்கட்டணம் .


@            காலாண்டு  விடுமுறையில் 

               வயலில் களையெடுத்த நினைவுகள் .

               இன்று கட்டிடக்  கலை .


            மு.மகேந்திர  பாபு .


@              இறந்த  பின்பும்  மறையவில்லை 

                  சாதிய  வழக்கம்  

                  மயானத்திலும்  தனித்தனி .


@              மதுவும் , மாமிசமும்  

                 தற்கால  ஒத்திவைப்பு .

                 அய்யப்பனுக்கு  மாலை.


             மு.மகேந்திர  பாபு .


கர்வத்துடன் பயணிக்கிறது 

  மகளிர்  கல்லூரிப்  பேருந்து .

  தேவதைகளை  சுமந்து   செல்வதால் !


        மு .மகேந்திர  பாபு.


குடி நீர் 

      இள நீரானது  கோடையில் ...

      உன்  கை பட்டதால்.


      #  மு.மகேந்திர  பாபு .


திருவிழாக்  காலம் 

          அலை மோதும்  கூட்டம் .

          நீ இறங்கினாய் 

          வெறுமையால்  நிறைந்தது  பேருந்து .

         

          மு.மகேந்திர பாபு.


நெல் வயலில்

 களைகள்

வீடுகள் 


மு.மகேந்திர பாபு .



அறுசுவை உணவு 

மீதம் வைக்கின்றேன்  இலையில் 

காத்திருக்கின்றன  நாய்கள் .


மு .மகேந்திர  பாபு  (17 -09 -13 )


காலாண்டுத்  தேர்வு  விடுமுறை 

மகிழ்ச்சியில்    மாணவர்கள் ...

வருத்தத்தில்   வகுப்பறைகள்  .


மு. மகேந்திர  பாபு . ( 21 -09 -13 )



குழந்தைகள்  நல  மருத்துவமனை 

மகிழ்வோடு வருகின்றனர்  குழந்தைகள் 

காத்திரிப்பில்   சறுக்கு மரம் .


மு .மகேந்திர  பாபு  ( 22 -09 -13 )



விட்டு விட்டு   பெய்யும்   மழை

விடாமல்  விளையாடும் மகள் 

பயத்தில் அப்பா .


மு .மகேந்திர   பாபு . (23 -09 -13 )


பார்த்து  நாட்கள் பலவாகி விட்டன 

நலம்  விசாரிக்கும்   நண்பர் 

பக்கத்து  வீட்டுகாரர் .


மு .மகேந்திர  பாபு  ( 24 - 09 -13 )



ஆண்டுகள்  பல கடந்தன 

மீண்டும் சந்தித்தேன் பள்ளித் தோழனை ..

முக நூலில் .


மு .மகேந்திர  பாபு . (24 - 09 -13 )


வீடுகள்  நெருக்கமாய் 

உறவுகள் தூரமாய் ...

மாநகர  வாழ்க்கை .


M.mahendra babu .


கல்லூரிக் கல்வி

படிக்க வைத்த காடு

காட்டில் கல்லூரி.


மு.மகேந்திர பாபு.


எழுதிவிட்டுப் போ

ஒரு நொடிக் கவிதையொன்றை 

என் கன்னத்தில்

உன் இதழ்களால்


வனம் ஒன்று 

வலம் வருகிறது

வளம் தர நகருக்குள் !


பகல் இரவு பாகுபாடின்றி

பறந்து பறந்து பணிசெய்கின்றன

மருத்துவ மனைக் கொசுக்கள்.


ம் ... என்பது ஒற்றை எழுத்துதான்

உன் உதட்டிலிருந்து உதிக்கையில்

உயிரெழுத்தாகி விடுகிறது எனக்கு !


மு. மகேந்திர பாபு.


உன்னோடான பொழுதுகள்

எனக்குள் பூக்கச் செய்கின்றன

கவிதைகளை.


மு.மகேந்திர பாபு.


வெட்டப் பட்டுக் கிடக்கிறேன்

வெதும்புகிறேன் உன்னால்.

வரும் சந்ததி விரைவில்

மரணித்து விடுமே என்று ! 


மு.மகேந்திர பாபு.


கையில் அரிவாளோடு

கோடையை வரவேற்கிறான்

இளநீர் வியாபாரி.


மு.மகேந்திர பாபு.


மகள் வரைந்த கோடுகள்

உயிர்த்தெழத் தொடங்கின

ஓவியமாய்.


மு.மகேந்திர பாபு.


இல்லங்கள் நெருக்கமாய்

உள்ளங்கள் தூரமாய்

மாநகர வாழ்க்கை.


மு.மகேந்திர பாபு.


நேற்றைய மகிழ்ச்சி இன்றில்லை

வீடிழந்த சோகத்தில் பறவைகள்

 வெட்டப்பட்டுக் கிடக்கின்றன

மரங்கள்.


மு.மகேந்திர பாபு.


எங்கே கண்மாய் ?

தேடிக் கொண்டிருக்கின்றன பறவைகள்

அடுக்குமாடி வீட்டின் மேலமர்ந்து !


மு.மகேந்திர பாபு.


மழை இல்லாப் பொழுதிலும்

வானவில் வருகிறதே !

எதிரில் நீ .


மு.மகேந்திர பாபு.

குனிந்து நிமிர்ந்து நடுகிறோம்

நிமிரவில்லை

எங்கள் வாழ்க்கை.


மு.மகேந்திர பாபு


நன்றி - நண்பன் அரவிந்த் அமிர்தராஜ் ஓவியத்திற்கு.உன் எண்ணத்திற்கும் , வண்ணத்திற்கும் அன்பின் வாழ்த்துக்கள் நண்பா.



ஒவ்வொரு வினைக்கும் 

எதிர் வினை உண்டு.

மழை வந்தது.

மின்சாரம் போனது.


மு.மகேந்திர பாபு.


நெட்டென்ப ஸ்மார்ட் போனென்ப இவ்விரண்டும்

லட்டென்ப வாழும் நமக்கே.


மு.மகேந்திர பாபு.


கோடையில் வற்றிய 

குளத்து நீரென இருக்கிறது

மாதக்கடைசியில் மணிபர்ஸ்.


மு.மகேந்திர பாபு.


புத்துயிர் பெற்றன வகுப்பறைகள்.

கோடை விடுமுறைக்குப் பின்

மாணவர் வருகையினால் !


மு.மகேந்திர பாபு.


கவிதைகள்

நெருப்போடு புகைகிறது
கையில் சிகரெட்டும்
புகைப்பவர் வாழ்க்கையும்.

ஆண்டுக்கு ஆண்டு
அதிக விளைச்சல் காடுகளில்
வீட்டு மனைகளாக !

வாகனப் பயணம்
வருத்தத்தில் காளைகள்
வரவேற்கிறது கேரளா.


கடவுளை வணங்கச் செல்பவர்கள்
கடவுளாக மாறிவிடுகிறார்கள்
திருவோட்டில் காசிடும்போது !

பெரிதாக இருக்கிறது
சாமியைவிட கோவிலில்
உண்டியல்  !

கோபுரதரிசனம் கோடிபுண்ணியம்
முன்னேறவில்லை பக்தன்
உழைப்பின்றி எதிர்வீட்டில் இருந்ததால் !

தொட்டு சிரித்துப் பேசுகிறான்
ஆண்ட்ராய்டு போனில்
உறவுகளிடமிருந்து விலகி !

கோடையில் சுற்றுலா
மகிழ்ச்சியில் பூங்கா
கல்லூரி மாணவியர் வருகை.

ஐந்தறிவே ஒப்பீடு
ஆறறிவிற்கு
சிங்கம் போன்ற நடை.

கவிதைப் பூங்கா

கூடிவாழ்ந்தால் கோடிநன்மை
வாசிக்கும் பள்ளிச்சிறுமி
விவாகரத்தில் பெற்றோர்.

ஓய்வெடுக்கிறது மின்விசிறி
எல்லார் வீடுகளிலும்
மின்தடை.

தாவுகின்றன குரங்குகள்
வீடாகிப்போன காடுகளில்
வீட்டுக்கு வீடு.

நெடுந்தொலைவு பறந்த பறவை
இறகை சிலிப்பியது
இறகோடு உதிர்ந்தது வானம்.

மு.மகேந்திர பாபு ,


துளிப்பாக்கள்

நெடுஞ்சாலை வாகன விபத்து
அவரவர் வேலையில் ஈடுபாடு
இறந்தது மனிதம்.

மாமா சித்தப்பா உறவுகளில்லை
தனிமையில் தவிக்கும் குழந்தை
நாமிருவர் நமக்கொருவர்.

திங்கள்தோறும் குறைதீர் கூட்டம்
மனுக்களோடு குவிந்தனர் மக்கள்
குறையவேயில்லை குறை.

ஊழலுக்கு எதிரான உறுதிமொழி
சொல்வதில் நாட்டமில்லை அதிகாரிக்கு.
வாசலில் காத்திருக்கிறது கையூட்டு.

ஆடிப்பட்டம் தேடி விதை
விதைத்தான் விவசாயி.
மகிழ்ச்சியோடு தின்றன எறும்புகள்.

காலாட்டித் தைத்த தையல்காரன்
மின் இயந்திரத்திற்கு மாறினான்.
குடும்பம் ஆடுகிறது வறுமையில் .

மக்கள்தொகைப் பெருக்கம்
மாநகராட்சியின் எல்லை விரிந்தது
சுருங்கியது மனிதநேயம்.

மு.மகேந்திர பாபு

Post a Comment

0 Comments