சுடரொளி மகளிர் விருது

 

சென்னை கூத்துப்பட்டறை மற்றும்

Green Tamil - YOUTUBE இணைந்து வழங்கிய

' சுடரொளி மகளிர் விருது ' விழா

மார்ச் 8 , மகளிர் தின விழா 


சென்னை கூத்துப் பட்டறை & பைந்தமிழ் வலையொளி ( Green Tamil - You Tube ) இணைந்து வழங்கும் 

" சுடரொளி மகளிர் விருது " வழங்கும் விழா


1 ) திருமதி.பொ.சரஸ்வதி ( இந்தியன் வங்கி - பணிநிறைவு )


முகம் மலர்ந்து

அகம் குளிர்ந்து

அன்பாய்ப் பணி செய்தவர்.

பணம் புரளும் வங்கிப்பணியில்

பாமர மக்களிடம்

மனம் நிறைந்து பணி செய்தவர்.

பணியாளர்களுக்கு வழிகாட்டியாகவும்

பண்பாளர்களுக்கு முன்னோடியாகவும்

பணிசெய்து மனநிறைவோடு

பணி நிறைவு செய்த 

திருமதி.பொ.சரஸ்வதி அவர்களுக்குச் " சுடரொளி மகளிர் விருது " வழங்கிச் சிறப்பிக்கின்றோம்.


2 ) திருமதி.ஆ.பூபதி ( அரசு செவிலியர் பணிநிறைவு )


மருத்துவத்தின் மகத்துவத்தை

மகிழ்வோடு கற்று , 

அனுபவத்தின் கைபிடித்து

அன்புடனே அரவணைத்து , 

கிராமப்புற மக்களுக்கான

மருத்துவ சேவையை 

தாயாய் இருந்து 

தன்னலம் கருதாது

தன் பணிக்காலத்தை அர்ப்பணித்த 

திருமதி.ஆ.பூபதி அவர்களுக்குச்

" சுடரொளி மகளிர் விருது " வழங்கிச்

சிறப்பிக்கின்றோம் !


3 ) திருமதி.க.பாண்டியம்மாள் , தலைமை ஆசிரியை . ம.கி.ஊ.ஒ.தொடக்கப்பள்ளி , உடன்குண்டு.


எழுத்தறிவித்தவன் இறைவன்

எழுத்தைக் கற்றுக்கொடுத்து 

அகவிருள் அகற்றிய ஆசான் இவர்.

உதவி ஆசிரியையாய்

மாணவர்களுக்கு உதவிய இவர்

இன்று தலைமை ஆசிரியையாய்

அமைதியாய்த் தடம் பதித்து

மாணவர் மனதில் இடம் பிடித்த

மகத்தான ஆசிரியை

திருமதி.க.பாண்டியம்மாள் அவர்களுக்குச்

" சுடரொளி மகளிர் விருது " வழங்கிச் சிறப்பிக்கின்றோம்.


4 ) திருமதி.வே.அருவகம் , உதவி ஆசிரியை, 

ம.கி.ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி , இலட்சுமிகாந்தன் பாரதி நகர்.


அகரம் கற்றுக்கொடுத்து

மாணவச் செல்வங்களைச்

சிகரம் தொட உதவுபவர்.

விளிம்பு நிலை மக்களின்

பிள்ளைகளுக்குக் கற்பித்தலை

விரும்பிச் செய்பவர்.

மாணவர் நலனே மனதின் நலன்

என்று கல்விச்சேவை செய்பவர்.

ஏற்றத்தையும் சமுதாய மாற்றத்தையும்

ஆக்கமாய்த் தரும் 

திருமதி.வே.அருவகம் அவர்களது பணியினைப் பாராட்டி

"சுடரொளி மகளிர் விருது " வழங்கிச் சிறப்பிக்கின்றோம்.


5 ) திருமதி.மு.சாந்தி - செவிலியர்


கல்வியும் மருத்துவமும்

இருகண்கள்.

பசிப்பிணியினும்

உடற்பிணி நீக்குதல்

உளமார்ந்த பணி.

ஆதரவாய்ச் சில சொற்களும் , 

அன்பாய்ச் சில சொற்களும்

செவிலியரை ஆக்கிடும் அன்னையாய் !

கிராமத்து மக்களின் 

நம்பிக்கை நட்சத்திரமாய்

உலாவரும் செவிலியர்.திருமதி.மு.சாந்தி

அவர்களுக்குச் " சுடரொளி மகளிர் விருது "  வழங்கிச் சிறப்பிக்கின்றோம் !


6 ) திருமதி.------- குடிநீர் கணக்கீட்டாளர்.


மகிழ்வித்து மகிழும் பெண்மணி இவர்.

மழை , புயல் , வெள்ளம்

போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில்

பேருதவி புரிந்தவர்.

' நீரின்றி அமையாது உலகு ' என்றான்

வான் புகழ் வள்ளுவன்.

' நீயின்றி அமையாது எங்கள் வாழ்க்கை ' 

என்கிறார்கள் இவரை கொடைக்கானல் மக்கள்.

மக்கள் பணியை மனமுவந்து செய்யும் 

திருமதி.       இவருக்குச்

" சுடரொளி மகளிர் விருது " வழங்கிச் சிறப்பிக்கின்றோம்.


7 ) திருமதி கோ.மகாலட்சுமி , பட்டதாரி தமிழாசிரியை.


இவர் வருகை

தமிழன்னையே

வகுப்பறைக்குள் வந்தது போல் தோன்றும்.

விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு

விரும்பி வருபவர்.

விடுமுறை நாளிலும் கற்பித்தலை

மாணவர் மனதில் சேர்ப்பவர்.

கொரனா பெருந்தொற்றால் 

உலகமே முடங்கியபோது 

திறன்பேசி மூலம் மாணவர்களிடம்

அதிகாலை ஐந்து மணிக்குத்

தமிழைக்கொண்டு சேர்த்தவர்.

முத்தமிழாய் நடமாடும் தமிழாசிரியை 

திருமதி.கோ.மகாலட்சுமி அவர்களுக்குச்

"சுடரொளி மகளிர் விருது " வழங்கிச் சிறப்பிக்கின்றோம்.


8 ) திருமதி.நிர்மலா தேவி , ஆங்கில பட்டதாரி ஆசிரியை.


ஆங்கிலம் எனும்

அந்நிய மொழியையும்

அன்னை மொழி போல்

ஆர்வமாய் நடத்துபவர்.

கிராமத்து மாணவர்களிடம்

ஆங்கிலத்தில் பேசும் ஆற்றலை வளர்ப்பவர்.

கற்கண்டாய் இனிக்கும்

இவர் வகுப்பு.

எடுப்பதில்லை விடுப்பு.

மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும்

மதிப்புமிகு ஆசிரியை திருமதி.நிர்மலா தேவி அவர்களுக்குச்

" சுடரொளி மகளிர் விருது " வழங்கிச் சிறப்பிக்கின்றோம்.

Post a Comment

0 Comments