பெரும்புலவர் எனும் தமிழ்ப்பேராசான்
ஆற்றல் ஆசிரியர் விருது விழாவில் பெரும்புலவரின் பேருரை
அன்பிற்குரியோரை எப்போது சந்திப்போம் என்பதும் , எப்போது பிரிவோம் என்பதும் யாருக்கும் தெரியாது என்று ஒரு விரி தீபம் நா.பார்த்தசாரதி அவர்கள் எழுதிய ' பொன்விலங்கு ' என்ற நாவலில் வரும். ஆம் ! அன்பிற்குரியோரை எப்போது எங்கு சந்திப்போம் என்பது யாருக்கும் தெரியாது.
அன்பில் மட்டுமல்ல அறிவில் , ஆற்றலில் , அனுபவத்தில் , கற்பித்தலில் என அனைத்திலும் தலைசிறந்த தமிழ்த்தாயின் தவப்புதல்வராம் பெரும்புலவர்.திரு.மு சன்னாசி ஐயா அவர்களைச் சந்தித்தது என் வாழ்வில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய தவம்.
மீனாட்சி அம்மனின் பார்வையில் , ஔவையின் ஆசியில் ஔவை மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எனக்கும் பெரும்புலவர் ஐயா திரு.மு.சன்னாசி அவர்களுக்குமான முதல் சந்திப்பு தமிழச்செம்மல் திரு.சங்கரலிங்கம் ஐயா அவர்களின் அறிமுகத்தால் நிகழ்ந்தது. அந்த நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாகப் பின்னாளில் ஆகிப்போனது.
தமிழாசிரியர்களுக்கான பயிற்சி ஒன்றை புலவர்.சங்கரலிங்கம் ஐயா அவர்கள் முன்னின்று நடத்தினார். அப்பயிற்சியில் நான் கருத்தாளராகச் சென்றேன் அவர் அழைப்பில் பேரில். அங்குதான் நடமாடும் நூலகமாகத் திகழும் பெரும்புலவரை முதன்முதலாகச் சந்தித்து மகிழ்ந்தேன். அப்போது அவரது புலமை எனக்குத் தெரியாது. தேனி மாவட்டம் இராயப்பட்டி சவரியப்ப உடையார் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பின் தலைமையாசிரியராகவும் பணி செய்து ஓய்வுபெற்றவர் என்ற அறிமுகம் மட்டுமே அடியேனுக்கு அன்று தெரியும்.
1 Comments
book potramaraiyum thiruvasagam
ReplyDelete